பலித்தது ராஜேஷ் ஜோசியம்.. அப்பட்டமா சொல்லிட்டாரு! சட்டியில் கருவாட்டு குழம்போடு வந்த நடிகர்: பிரபலம்
சென்னை: கவுண்டமணி மனைவி இறந்தபோதுகூட நீண்ட நேரம் உட்கார்ந்து கவுண்டமணியுடன் பேசிக் கொண்டிருந்தார் ராஜேஷ்.. என்னுடைய அப்பா இறந்தபோது நீண்ட நேரம் எங்களுடனேயே இருந்து, ஆறுதல் சொல்லிவிட்டு போனார்.. கடைசிவரை ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார்.. உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டிருந்தார்.. உணவு பழக்கத்தை முறையாக கடைப்பிடித்தார் ராஜேஷ்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "திருவல்லிக்கேணியில் வரலாற்று ஆசிரியராக வேலை பார்த்தவர்.. நடிப்பு ஆர்வம் காரணமாக சினிமாவுக்கு வந்தவர்.. பல மொழிகளின் படங்களை ஆர்வமாக பார்ப்பார்.. என்னுடைய அப்பா எடுத்த சட்டத்தின் திறப்பு விழா படத்தில் ராஜேஷ் நடித்திருந்தார்.. அப்பாவை அண்ணா என்றுதான் கூப்பிடுவார்.. அனைவருடனும் கடைசிவரை நட்பில் இருந்தார்..

கால்குலேட் மனிதர்
சினிமாவில் நடித்தாலும், சினிமாத்தனம் அவரிடம் கிடையாது.. முன்னாடி ஒன்று பின்னாடி ஒன்று பேசுவது கிடையாது.. படித்த நபர் என்பதால், அதற்குரிய பண்பு, மரியாதை ராஜேஷிடம் இருந்தது.. லைட்மேனிலிருந்து புரொடக்ஷன் நபர் வரை அனைவரிடமும் நன்றாக பேசுவார்..
அவரது வீட்டில் ஒரு ரூம் முழுக்க புத்தககங்களாக இருக்கும்.. படிப்பதற்காக என்ன புத்தகம் கேட்டாலும், "பத்திரமாக திருப்பி தந்துடுங்க" என்று சொல்லி, மீண்டும் அந்த புத்தகத்தை திருப்பி வாங்கி பத்திரப்படுத்தி கொள்வார்..
அந்த அளவுக்கு புத்தகங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.. வியாபார கால்குலேஷன் அவரிடம் நிறைய உண்டு.. ஷூட்டிங் பங்களா என்று எந்த நடிகரும் கட்டி விட்டதில்லை.. ஆனால், அதை ராஜேஷ் சரியாக செய்தார்.. ராஜேஷ் வீடு என்றுதான் அனைவரும் சொல்வார்கள்.. எம்ஜிஆருடன் நெருக்கமாகவும், ஜானகி அம்மா மீது மிகுந்த மரியாதையுடனும் ராஜேஷ் இருந்தார்.. அரசியல் ஆர்வம் உள்ளவர்..
தயாரிப்பாளர்களுக்கு உதவியவர்
ரியல் எஸ்டேட் இப்போது உச்சத்தில் உள்ளதால், அதை நீங்கள் செய்யுங்கள் என்று ஜேப்பியார் சொல்லவும், அவரது அறிவுரையின்பேரில் 90களின் தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் தொடங்கி, பெரிய பெரிய இடங்களை வாங்கி போட்டார். கொட்டிவாக்கம், நீலாங்கரை, போன்ற இடங்களில் ரியல் எஸ்டேட் நன்றாக செய்தார்... காசு தந்தால்தான் நடிப்பேன், டப்பிங் பேசுவேன் என்று ராஜேஷ் சொன்னதில்லை.. தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து நடித்து தந்தார்.
தனக்கு சம்பளம் தராமல் பல தயாரிப்பாளர்கள் நெருக்கடியில் தவித்தபோது, அதை விட்டுக் கொடுத்தார்.. ஜெய்சங்கர் இப்படித்தான் பல தயாரிப்பாளர்களுக்கும் உதவினார்..
பலித்த ஜோதிடங்கள்
"கையை காட்டுங்க, ஜோசியம் பார்க்குறேன்" என்று சொல்லக்கூடியவர் கிடையாது ராஜேஷ்.. முறைப்படி ஜோசியத்தை ஆர்வத்தால் கற்றுக் கொண்டவர்.. அதில் நீண்ட ஆராய்ச்சி செய்தவர்..
பல சினிமா பிரபலங்களுக்கு ஜோதிடம் பார்த்து சொல்லி, அதில் பல ஜோதிடங்கள் பலித்தும் இருக்கிறது.. இதுபோல வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிடம் சொல்வார்.. அதற்கு பிறகு அந்த இடத்தை ராஜேஷ் பிடித்து கொள்ள காரணம், பல விஷயங்கள் அவர் சொல்லி பலித்திருக்கிறது.
கவுண்டமணி மனைவி இறந்தபோதுகூட நீண்ட நேரம் உட்கார்ந்து கவுண்டமணியுடன் பேசிக் கொண்டிருந்தார்.. என் அப்பா இறந்தபோது நீண்ட நேரம் எங்களுடன் உட்கார்ந்துவிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டு போனார்.. கடைசிவரை ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார்.. உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டிருந்தார்.. உணவு பழக்கத்தை முறையாக கடைப்பிடித்தார்..
கருவாட்டு குழம்பு - கருப்பு சிவாஜி
தன்னுடைய அக்கா மகளைதான் திருமணம் செய்திருந்தார்.. மனைவி இறந்த பிறகு வெறுமையை உணர்ந்தார்.. அதனால்தான், சோஷியல் மீடியா பக்கம் அதிகமாக கவனம் செலுத்தினார்.. நேற்று இறப்பதற்கு முன்தினம் இரவு வரை நன்றாகவே இருந்திருக்கிறார்..
சினிமாவை தாண்டியும் நட்பு அனைவரிடமும் கடைப்பிடித்தவர் ராஜேஷ்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராஜேஷை பார்த்தால், "வாங்க, கருப்பு சிவாஜி" என்றுதான் கூப்பிடுவாராம்..
ஒருமுறை எங்கள் பட ஷூட்டிங்கில் என்னுடைய அப்பாவிடம், "அண்ணே, நான் கருவாட்டுக் குழம்பு நல்லா செய்வேன்" என்று சொல்லி, மறுநாளே தூக்குவாளியில கருவாட்டுக் குழம்பு கொண்டு வந்தார்.. யூனிட் உள்ளவர்களுக்கும் கருவாட்டு குழம்பு ஊற்றி பரிமாறி சாப்பிட வைத்தார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications