Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகரின் பண்ணை வீட்டு உல்லாசம்.. ரூ.280 கோடி ரஜினிக்கு சம்பளமா? தமிழகத்துக்கு செய்தது என்ன: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ரஜினி படங்களை மக்கள் புறக்கணிக்கணும். ஆனால், சினிமா தியேட்டரில் முதலமைச்சரை தேடுகிற அளவுக்கு அரசியலே தெரியாத மூடர்களின் நாடு இது.. இதன்விளைவுதான் கூலி படத்துக்கு ரஜினியின் 280 கோடி ரூபாய் சம்பளம்.. இது ஏழை விவசாயிகளின் பணம்.. ரஜினிகாந்த்தை தமிழகத்தின் பிதாமகன் என்று நினைக்கிறார்கள்.. திராவிட இயக்கங்கள் தூக்கி பிடிப்பதன் விளைவுதான், 280 கோடி ரூபாய்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் சாடியிருக்கிறார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், கூலி படத்தில் மொத்த பட்ஜெட்டுமே ரஜினிக்குதான்.. ரஜினியை காண்பித்துதான் அதை பணமாக்க வேண்டியிருக்கிறது. ஹீரோயினுக்காக, டைரக்டருக்காக படம் ஓடாது..

Television Rajini 280 280

பிரம்மாண்டங்களை எடுக்கிற டைரக்டர் என்பதைதாண்டி, லோகேஷ் கனகராஜ் ஒன்றுமே இல்லை.. ஸ்ரீதர், பாலச்சந்தர் போல படங்களை எடுத்தவர்கள் கிடையாது.. பல படங்களை வெட்டி ஒட்டி, பிட்டு பிட்டாக சேர்த்து ஒரு படமாக்கி விடுபவர்கள்தான், அட்லி, அருண்குமார் போன்றோர் எல்லாம்.. இது ஒரு மாஃபியா சூதாட்டம்..

ரஜினி ஏழை மக்களுக்கு செய்தது என்ன

280 கோடி வாங்குகிற ரஜினி, வெறும் 20 கோடியாவது இந்த மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவமனை உதவி செய்திருக்கிறாரா? அந்த 280 கோடியும் ஹவாலாவில் வெளிநாடு முதலீடாக சென்றுவிடுகிறது.

ராகவேந்திரா கல்யாண மண்டபம், அரசுக்கு வரி கட்டுவதேயில்லை.. ஆசிரமம் பள்ளிக்கூடம் ஆசிரம நிலத்தில் உள்ளது.. அட்மிஷன் சீட் ஒரு லட்சத்துக்கு கிடைக்கிறது.. இதுவொரு மேட்டுக்குடி கலாச்சாரம்.. ஆனால், அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிக்கூடம் கட்டி, அதற்கு வரிகட்ட முடியாமல் கோர்ட்டுக்கு போனார்கள்.. இந்த மக்களை சுரண்டி வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள்.. இவர்களின் படத்தை 2 ஆயிரம் 3 ஆயிரம் தந்து டிக்கெட் வாங்குகிறார்கள்.

திராவிட இயக்கங்கள்தான் காரணம்

தமன்னா டான்ஸ் இல்லாமல், ரஜினி படம் ஓடாதா? வேற கதையே இல்லையா? சமூக சிந்தனையே இல்லையா? சத்ய ஜித்ரே பற்றி தெரியாதா? எத்தனையோ டைரக்டர்கள் சமூக கருத்துள்ள படத்தை சொல்லியிருக்கிறார்கள்.

ரஜினி படத்தையெல்லாம் மக்கள் புறக்கணிக்கணும். ஆனால், சினிமா தியேட்டரில் முதலமைச்சரை தேடுகிற அளவுக்கு அரசியலே தெரியாத மூடர்களின் நாடு இது.. இதன்விளைவுதான் ரஜினியின் 280 கோடி ரூபாய் சம்பளம்.. இது ஏழை விவசாயிகளின் பணம்.. ரஜினிகாந்த்தை தமிழகத்தின் பிதாமகன் என்று நினைக்கிறார்கள்.. திராவிட இயக்கங்கள் தூக்கி பிடிப்பதன் விளைவுதான், கூலி படத்துக்கு 280 கோடி ரூபாய் சம்பளம்.

ரஜினியின் கடைசி படம்

உலகத்தில் இவ்வளவு பெரிய சம்பளத்தை யாருக்கும் தந்ததே கிடையாது.. எப்படியாவது மிளகாய் அரைத்து விடலாம் என்ற எண்ணம்தான்.. ரஜினி மட்டுமே ஸோலோவாக இப்போதெல்லாம் நடிப்பதில்லை.. அவருடன் 10 நடிகர்கள் வருகிறார்கள்..
ரஜினிக்காக படம் ஓடுவதில்லை. அதனால் பல மாநிலங்களிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து மசாலா படமாக தரவேண்டியிருக்கிறது.

70 வயசுல ரஜினியால ஓட முடியல, ஆட முடியல. அதனால் பல டூப்புகளை பயன்படுத்தி ரசிகர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள். பாதி ஷூட்டிங், மீதி கம்ப்யூட்டரிலேயே கிராஃபிக்ஸ் செய்துவிடுகிறார்கள். இதுதான் ரஜினியின் கடைசி படம்.. இதற்கு பிறகு வேற யாரும் ரஜினியை வைத்து படம் எடுக்க மாட்டார்கள்" என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் காது கேளாதோருக்கு பள்ளி

சமீபத்தில்கூட இதேபோல ரஜினி குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.. "சினிமா தொழிலாளர்களுக்காக ரஜினி என்னதான் செய்திருக்கிறார்? எம்ஜிஆரின் காதுகேளாதோருக்கு பள்ளி, கண் பார்வையற்றோர் பள்ளி, ஊனமுற்றோர் பள்ளி என அத்தனையும் இருக்கிறதே? ரஜினியின் இலவச பள்ளி எங்கே? இலவச மருத்துவமனை எங்கே?

ரஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், உடனே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற ரசிகர்களை வைத்து கூலி படத்தை 1000 கோடிக்கு விற்க போகிறார். கொரோனா நேரத்தில் எத்தனை பேருக்கு மருத்துவ உதவி செய்தார் ரஜினி? சென்னையில் வெள்ளம் வந்தபோது எத்தனை கோடி தந்தார்? லிஸ்ட் எங்கே?

பண்ணை வீடு

பல்லாயிரம் கோடி குடும்பத்துக்கு சேர்த்து வைத்துக் கொண்டு, திரைப்பட தொழிலாளர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீட்டுக்கு செல்பவர்களை எத்தனை மாதம் கழித்து வெளியே அனுப்புகிறார்கள்? அங்கு நடக்கும் ஆட்டம், பாட்டம், மேட்டுக்குடி சீரழிவு கலாச்சாரத்தை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக 6 மாதம் கழித்துதான் அனுப்புகிறார்கள்.. அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வீடு, குழந்தை, குடும்பம் இருக்காதா? இதை பற்றி 500 பக்கம் எழுதலாம்" என்று சாடியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+