Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajkiran: ரஜினிக்கு தாத்தாவாக கூட நடிப்பேன்! ஆனால், இதை மட்டும் செய்ய மாட்டேன்! கெத்தாக பேசிய ராஜ்கிரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கலாம் ஆனால் நான் வயிற்று பிழைப்புக்காக தான் சினிமாவுக்கு வந்தேன், அந்த சினிமாவில் மக்களுக்கு ஒரு நல்ல கருத்து சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று ராஜ்கிரண் பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் மேலும் சில தகவல்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பலருக்கும் பரிச்சயமானவர்தான். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இவருடைய நிஜ பெயர் முகைதீன் அப்துல் காதர் என்பதுதான். 1980களில் புகழின் உச்சத்தில் இவர் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ராஜ்கிரண் இருந்தார்.

Rajkiran Vadivelu

தான் மட்டும் முன்னேற கூடாது திறமையானவர்களையும் முன்னேற்ற வேண்டும் என்று பல புதுமுக நடிகர்களையும் தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் அறிமுகம் செய்திருந்தார். அந்த வரிசையில் தான் நடிகர் வடிவேலும் ஒருவர்‌ வடிவேலுக்கு பல உதவிகளை ராஜ்கிரண் செய்திருக்கிறார். அதைப் பற்றி வடிவேலும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதுபோல 1989 ஆம் ஆண்டு என்னை பெத்த ராசா என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான ராஜ்கிரண் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், பாசமுள்ள பாண்டியரே போன்ற பல வெற்றி படங்களிலும் நடித்திருந்தார். ஒரு சில படங்களில் கதைகளை கேட்டபோது சில கதாநாயகர்கள் இந்த கதையில் நாங்க நடிக்க முடியாது என்று மறுத்தபோது நானே இனி கதாநாயகன் என்றுதான் இவர் கதாநாயகனாக மாறினார்.

அதுபோல நல்லி எலும்பு கறி சாப்பிடுவதற்கு ராஜ்கிரண் தான் டிரேடு மார்க் என்று சொல்வது போல ஒரு இமேஜை செட் செய்து வைத்துவிட்டார். இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் நந்தா, பாண்டவர் பூமி, கோவில், சண்டக்கோழி, வேங்கை போன்ற படங்களில் இருந்து தொடங்கியது. இப்போது தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படத்திலும் தனுஷின் அப்பாவாக நடித்து பலரையும் பீல் பண்ண வைத்துவிட்டார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஜ்கிரண் தான் சில வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு பேட்டியை பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ராஜ்கிரண் பேசும்போது ஒரு சிலர் சினிமாவில் அறிமுகமாகும் போது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று லட்சியத்தோடு வருவார்கள். ஆனால் நானெல்லாம் அப்படி வரவே இல்ல. பஞ்சம் பிழைப்பதற்காக வந்தது போல தான் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த சினிமாவுக்கு அடி எடுத்து வைத்தேன். பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் ஏதாவது வேலைக்கு போகணும்னு சென்னைக்கு வந்த இடத்தில் சினிமா துறையில் அடி எடுத்து வைத்தேன்

அப்போது சினிமாவில் இருந்து காசு வந்ததால் அடுத்தடுத்து அங்கிருந்து முன்னேறி கதாநாயகனாகவும் நடித்து விட்டேன். ஆனால் நான் எத்தனை படத்தில் நடித்திருந்தாலும் சரி அந்த படத்தில் என்னை வைத்து ஒரு கருத்து சொல்வது போல இருக்க வேண்டும். நான் ரஜினிக்கு தாத்தாவாக கூட நடிப்பேன் ஆனால் ஏதோ வந்துட்டு போற மாதிரியான கேரக்டரில் மட்டும் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்பதுதான் என்னுடைய கருத்து என்று சொல்லி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன் என்று வெளிப்படையாக பேசிய ராஜ்கிரண், தான் பணம் கிடைத்தாலும் சரி நல்ல கருத்து சொல்லும் கேரக்டரில் மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே என்று பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+