முனீஸ்ராஜாவை பிரிந்து விட்டேன்.. இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல.. ராஜ்கிரணின் மகள் பகீர் வீடியோ
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் முனீஸ் ராஜா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது பிரியா தான் முனீஸ் ராஜாவை சில மாதங்களுக்கு முன்பே பிரிந்து விட்டேன் என்றும் தன்னுடைய அப்பாவான ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தன்னுடைய வளர்ப்பு தந்தைக்கு தான் அதிகமாக கஷ்டம் கொடுத்து விட்டேன். ஆனால் அவர்தான் நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு மீண்டும் உதவி செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமடைந்த முனீஸ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்பதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தங்களுடைய ரகசிய திருமணத்தை வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் அம்பலப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த விஷயம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகளே இல்லை என்று அறிவித்திருந்தார். அதோடு பிரியா அவருடைய வளர்ப்பு மகள் என்பதே அதற்கு பிறகு தான் அனைவருக்கும் தெரிய வந்தது. திருமணம் முடிந்த பிறகு இரண்டு தரப்பினரும் காவல்துறையில் மாறி மாறி புகார் அளித்து சர்ச்சைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
அதுபோல ராஜ்கிரணும் அவருடைய மனைவியும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் பிரியா முனீஸ் ராஜாவோடு சென்று வாழ்ந்து வந்தார். அதுபோல அந்த நேரத்தில் பிரியா என்னுடைய குடும்பத்தினர் எனக்கு அதிகமாக கஷ்டத்தை கொடுத்தார்கள். நான் தான் வீட்டில் எல்லா வேலையும் செய்து வந்தேன். ஆனால் என்னுடைய திருமணத்தை பற்றி அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பேட்டிகளும் கொடுத்திருந்தார்.
அதுபோல அந்த நேரத்தில் என்னுடைய சொந்த அப்பா எனக்கு கொடுத்த நகைகளையும் என்னுடைய அம்மா வாங்கி வைத்துவிட்டு எனக்கு தர மாட்டேன் என்கிறார் என்று எல்லாம் பேட்டியில் பேசி இருந்தார். இப்படியான நிலையில் இப்போது புதியதாக பிரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், 2022 ஆம் ஆண்டு நடிகர் முனீஸ் ராஜாவை நான் திருமணம் செய்து கொண்டேன்.

அது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் பிரிந்து சில மாதங்கள் ஆகின்றது. எங்கள் திருமணம் சட்டபூர்வமான திருமணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு என்னை வளர்த்த அப்பாவை நான் ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டேன். அவரை நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றி இருக்கிறார்.
அவர் எனக்காக இப்படி எல்லாம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை நான் அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் போதாது என்று அந்த வீடியோவில் என்னை மன்னிச்சிடுங்க டாடி என்று கைகூப்பி அழுதபடியே ப்ரியா மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications