நிரூப் சட்டையை பிடித்து கேள்வி கேட்ட ராஜு...கொண்டாடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைக்கும் முகத்தில் எந்த எக்ஸ்பிரஸ்னும் காட்டாத ராஜூ செய்த செயல் தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ராஜு கோபத்தில் நிரூப் சட்டையை பிடித்து இழுத்து இருக்கிறார்.

எப்போதும் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் இவர் இப்போது செய்த செயல் ரசிகர்களை மிரட்டி இருக்கிறது.

பிரபலமான போட்டியாளர்

பிரபலமான போட்டியாளர்

பிக்பாஸ் இரண்டாவது சீசன் ஆரம்பித்த முதல் வாரத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது. இதில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமானவர்கள். அதில் இமான் அண்ணாச்சி, பிரியங்கா, பாவனி போன்றோர் வரிசையில் சின்னத்திரையின் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் ராஜுவும் ஒருவராக இருந்து வருகிறார்.

சீரியல் ரசிகர்களின் கவலை

சீரியல் ரசிகர்களின் கவலை

இந்த சீசனில் 4 வாரங்களை முடிவடைய இருக்கும் நேரத்தில் இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சனைகள் கிளம்பி இருக்கிறது. இதில் தன்னுடைய பொறுமையான குணத்தாலும், காமெடிகளும் போட்டியாளர்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் வசீகரித்து வருகிறார். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில், இவரை தற்போது சீரியலில் காணவில்லை என இவருடைய சீரியல் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர்.

பட்டிக்காடா?? பட்டணமா??

பட்டிக்காடா?? பட்டணமா??

இவர் தன்னுடைய காமெடியால் மட்டுமல்லாமல் மிமிக்கிரி திறமையினாலும் பல நேரங்களில் போட்டியாளர்களுக்கு எனர்ஜி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவருக்குள் இத்தனை திறமையா என்று ரசிகர்களும் பார்த்து வாயடைத்து போயிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் பட்டிக்காடா?? பட்டணமா?? என்று 2 அணியாக போட்டியாளர்கள் பிரிந்து இருக்கின்றனர். அதில் இவர் ஒரு பட்டிக்காட்டு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பட்டிக்காட்டு ஹீரோ

பட்டிக்காட்டு ஹீரோ

பட்டிக்காட்டு அணிக்காக இவர் இப்போது ஒரு டிராமாவை செய்து கொண்டிருக்கிறார். அதில் சிபி மற்றும் நிரூப் இருவரையும் சட்டையை பிடித்து
மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த எபிசோடுகள் அன்சீனில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அன்சீன் ப்ரமோவை பார்த்ததும் ரசிகர்கள் ராஜுவின் அல்டிமேட் வசனங்களை கேட்பதற்காகவாவது இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்து விடவேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். தற்போது ப்ரமோவை விடவும் அன்சீன் எபிசோடுகள் தான் வேற லெவலில் இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+