அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ரமணா பட நடிகை.. நடிப்புக்கு டாடா.. இப்போ என்ன பிசினஸ் தெரியுமா? சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகாந்த் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ரமணா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஸ்ருதியின் தற்போதைய புகைப்படங்கள் தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. அவர் பல விளம்பரங்களிலும், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இப்போது என்ன செய்கிறார் என்று ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் பிறகு கதாநாயகி ஆகி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்கள். அதிலும் ரமணா, அழகி போன்ற திரைப்படங்களில் நடித்து பலரையும் வாவ் சொல்ல வைத்த நடிகை ஸ்ருதியின் தற்போதைய புகைப்படங்கள் தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

Shruthi Ramana Azhagi

ரமணா நடிகையின் தற்போதைய நிலை

உருவ மாற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வருடங்களை கடந்து வயது கூடும் இப்போது அனைவருடைய உருவத்திலும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் சிலரை பார்க்கும்போது இவரா அவங்க என்று வியக்க வைக்க வகையில் உருவம் மாறி இருக்கிறது. அதுபோல நடிகர் பார்த்திபன் நடித்த அழகி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை ஸ்ருதியின் தற்போதைய நிலை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அழகி பட நடிகை

நடிகை ஸ்ருதி இரண்டு வயதிலிருந்து சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக நடிக்க தொடங்கி விட்டாராம். ஆனால் அவருக்கு பிரபலம் கிடைத்தது பார்த்திபன் நடித்த "அழகி" திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் கதாநாயகியின் சிறுவயது கேரக்டரில் இவர்தான் நடித்து இருப்பார். அதற்கு பிறகு ரமணா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் தன்னுடைய டான்ஸ் மற்றும் கண் அசைவின் மூலமாகவே 90ஸ் கிட்ஸ்களை கட்டி போட்டு வைத்திருந்தார்.

Shruthi Ramana Azhagi

கதாநாயகியாக நடித்த படம்

ஆனால் கதாநாயகியாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாண்டியராஜனின் மகன் நடித்த "கைவந்த கலை" படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அதற்குப் பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.

சினிமாவை விட்டு விலகல்

இந்த நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் ஸ்ருதி பேசும் போது நான் சின்ன வயதிலேயே சினிமாவுக்கு அறிமுகம் ஆகிவிட்டேன். அந்த வயதில் எனக்கு டயலாக் மெமரி பண்ணுவது கஷ்டமா தெரியல. ஆனால் சின்ன வயதில் ஈசியாக இருந்தது போகப் போக கஷ்டமா இருந்தது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் நான் டான்ஸ் ஆடும் போது பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. படிக்க முடியாமல் தவித்தேன்.

Shruthi Ramana Azhagi

ஸ்ருதியின் தற்போதைய நிலை

ஏதாவது ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்துதான் நான் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன். இப்போது நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவும் எனக்கு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்திருக்கிறது என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். ஸ்ருதி சோசியல் மீடியாவில் பெரிதாக பிரபலமாக இல்லை. அதனால் இவர் எப்படி இருக்கிறார் என்று தேடிப் பார்க்கும்போது இவருடைய இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+