அப்பா, மகன் இருவருக்குமே ஒரே ஜோடி? ரங்கராய சக்திவேல் என்ன செய்தாரு? ஊறுகாய் கேரக்டர் திரிஷா: பிரபலம்
சென்னை: 'நாயகன்' வெளியாகி 38 வருடம் கழித்து பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே தக் லைஃப் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.. டைட்டில், டீசர், ட்ரெய்லர், பாட்டு என அனைத்துமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 2 நாட்களுக்கு முன்பு வெளியான தக் லைஃப் படம் எப்படி உள்ளது? என்பது குறித்து விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, 38 வருடம் கழித்து, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள கமல், மணிரத்னம், இந்த படத்தில் ஏதாவது புதிதாக சொல்லியிருக்கிறார்களா? நாயகன் படத்திலிருந்து கடந்து வந்த காலம் 38 வருடங்கள், இந்த 38 வருடங்களுக்கான மெச்சூரிட்டி, கமல், மணிரத்னம் இருவரிடமுமே இந்த படத்தில் இல்லை..

வலுவான காரணம் இல்லை
எல்லா பக்கமும் துப்பாக்கி சூடு, அடி வெட்டு இருக்கு.. படத்துல எதுவுமே இல்லை, கதை சுத்தமாகவே இல்லை.. நாயகன் படத்தில் வேலுநாயக்கரை கண்டு பம்பாயே பயப்படும். அந்த அளவுக்கு கேரக்டர் வலுவாக இருந்தது.. அதுபோல, தக் லைஃப் படத்தில், கமல் மிகப்பெரிய ஆளுமையானவர் என்பதற்கான கேரக்டர் எங்காவது தென்படுகிறதா?
நாசர் கமலை கொல்வதற்கான வலுவான காரணமும் இல்லை. ஹீரோ கேரக்டர் சரியில்லை என்றால் சிம்பு கேரக்டரும் சரியாக டிசைன் செய்யப்படவில்லை.. நிறைய இடங்களில் கொச்சையான வசனங்களை பேசுகிறார்கள்.. காதல் காட்சிகளில் டபுள் மீனிங்குடன் பேசுவது போலவே இருக்கு..
ரங்க ராய சக்திவேல்
மணிரத்னம் என்றால் அதற்கு ஒரு தரம் உண்டு.. அந்த தரம் இந்த படத்தில் இல்லை.. மணிரத்னத்திடம் சரக்கு தீர்ந்து போயிருச்சா? என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
டெக்னிக்கலா சூப்பராக படம் எடுப்பார் மணிரத்னம்.. ஆனால், மெசேஜ், அழுத்தமான கதை எதுவுமே தக் லைஃப்பில் இல்லை..
நான் தான் இங்கே ரங்க ராய சக்திவேல் என்று சிம்பு ஆவேசமாக சொல்கிறார், ஆனால், அந்த ரங்க ராய சக்திவேல் என்ன செய்தார்? என்றுதான் தெரியவில்லை.. ரசிகர்களுடன் இந்த படம் ஒட்டவில்லை.. ஒரு முறை இந்த படத்தை பார்த்து முடிக்கிறதுக்குள்ளேயே டென்ஷன் ஆயிடுது..
திரிஷா கேவலமான கேரக்டர்
திரிஷாவை எந்த அளவுக்கு கேவலப்படுத்தணுமோ, அப்படி இந்த படத்தில் கேவலப்படுத்திட்டாங்க.. திரிஷாவுக்கு சமீப காலமாக நடிக்கும் படங்களில், ஊறுகாய் போல கேரக்டர்களை தர ஆரம்பித்துவிட்டார்கள்.. இந்த படத்தில் கால் கேர்ள் கேரக்டரை தந்து, கமலும் திரிஷா மீது ஆசைப்படுகிறார், சிம்புவும் திரிஷா மீது ஆசைப்படுகிறார்..
இதெல்லாம் முதிர்ந்த இயக்குனர், முதிர்ந்த நடிகர் செய்யக்கூடிய படமாக தெரியவில்லை.. முதிர்ச்சியில்லாத தன்மையே தெரிகிறது. கமல் நடிப்பை பற்றி பேச எதுவுமே இல்லை.. நடிப்பதற்கென பிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை..
நரம்புகள்கூட நடிக்குது
இந்த படத்தில் கமலின் முகத்திலுள்ள நரம்புகள்கூட நடிக்குது.. ஆனால், முகத்தில் முதிர்ச்சி தெரியுது.. ஒருவேளை மேக்கப் அப்படி போட்டிருக்காங்களா? தெரியல.. சிம்புவும் தனக்கு தரப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்.
ஆனால், கேரக்டர் வலுவாக இல்லாததால், எவ்வளவு உழைப்பு போட்டும் வீணாவது போல தெரியுது.. நாசர் நடிப்பையும் பல வருடங்களாகவே இப்படித்தான் பார்த்து வருகிறோம். மகளிர் மட்டும் படத்தில் நடித்த நாசர் மீண்டும் கிடைப்பாரா தெரியவில்லை.
வீணடிக்கப்பட்ட கேரக்டர்
ஜோஜு சார்ஜ் மிகச்சிறந்த நடிகர்.. அவரை கொண்டுவந்து துக்கடா நடிகர் போல நடிக்க வைத்துள்ளனர்.. அவருக்கு இதில் ஒரு முக்கியத்துவமும் இல்லை.. அவரால் இந்த படம் நகர்கிறது, அவரால் இப்படி நடந்துருச்சு என்று சொல்லக்கூடிய முக்கியத்துவம் இல்லை..
இதுல வையாபுரி, சின்னி ஜெயந்த், சேத்தன், அசோக் செல்வன் இவங்களை எல்லாம் வீணாக்கிட்டாங்க..
பாட்டுக்கள் நல்லா இருக்கு.. ஆனால் அனைத்து பாட்டுக்களையும் வைத்திருந்தால் படம் இன்னும் நீளமாக இருந்திருக்கும்.. இந்த படத்தில், கதை துளியளவும் இல்லை என்பதே உண்மையான விமர்சனம்" என்று தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications