ஷூட்டிங் ஸ்பாட்டில்.. மடியில் வைத்து கொஞ்சிய ரக்ஷிதா.. செம!
சென்னை: சூட்டிங் ஸ்பாட்டில் குட்டி ரசிகரை மடியில் வைத்து கொஞ்சிய ரக்ஷிதா வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோக்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஹாப்பி அடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி வருகிறார்களாம்.
ரக்ஷிதா என்று சொல்வதை விடவும் சரவணன் மீனாட்சி "மீனாட்சி" என்று சொன்னால்தான் டக்கென்று ஞாபகத்திற்கு வந்துவிடும்.

ரசிகர்களின் மீனாட்சி
அப்படி சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் மீனாட்சியாக குடி கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து தான் ரசிகர்கள் பொறாமை படுகிறார்கள் .அடிக்கடி இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் வீடியோ எடுத்து அதை பரப்பி வருகிறார்கள்.

குடும்ப குத்துவிளக்கு
அந்த மாதிரி இவரே இப்போது இவரைப் பற்றிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார் . பலர் மாடல் உடைகளில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவரும் நிலையில் இவர் எப்போதுமே புடவையிலும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்திருக்கிறார்.

புடவைப் புயல்
அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி புது புடவை கட்டிக்கொண்டு இருக்கும்போது அப்படியே அதை போட்டோக்களாக எடுத்து வைத்துக் கொள்கிறார் .எடுத்த போட்டோவை நாம் மட்டும் பார்த்தால் போதாது என்றுதான் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

உச்சு கொட்டும் ரசிகர்கள்
இவருடைய போட்டோவை பார்த்ததும் கமெண்டுகளை பொழியும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து உச்சுக் கொட்டி ரசித்து வருகிறார்கள் .குழந்தைகள் மீது பேரன்பு கொண்ட இவர் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் தான் அது.

மகாவின் மடியில்
நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் தற்போது இவர் மகாவாக நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலின் சூட்டிங் பார்ப்பதற்காக ரசிகர்கள் அடிக்கடி வந்து குவிந்து விடுகின்றனர். அந்த மாதிரிதான் தற்போது இந்த சூட்டிங் பார்ப்பதற்காக வந்த ரசிகர்களின் இவர் மனதை கவர்ந்த ஒரு குட்டி ரசிகர் இவரிடம் இருந்து அவர் அம்மாவிடம் செல்வதற்கு கூட மனம் இல்லாமல் அப்படியே ரஞ்சிதாவின் மடியில் உட்கார்ந்து விட்டார்.

எழுந்திருக்கலையே
அதைப் பார்த்து ரசிகர்கள் அதை அப்படியே வீடியோ எடுத்து இருக்கிறார்கள். அதில் அந்த குட்டி ரசிகர் ரக்ஷிதாவின் மடியில் உட்கார்ந்திருந்த தோரணை பற்றி ரக்ஷிதா அருகில் இருப்பவர்களிடம் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை எனும் தோரணையில் அப்படியே ஹாயாக உட்கார்ந்து இருக்கிறார் என்று ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

செம ஜாலிதான்
அதுவும் சுற்றி அனைவரும் சந்தோஷமாக சிரிச்சி ஜாலி பண்ணிக் கொண்டிருக்கும்போது இவரின் மடியில் உட்கார்ந்தாலே போதும் என்று அந்த குட்டி ரசிகரும் அமைதியாக திரு திருவென முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பல நெட்டிசன்கள் பொறாமைப்பட்டு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த மாதிரி எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications