ரவி மெல்ல தாங்கிப் பிடிக்க.. இரு விழி உருள.. தன்னிலை மறந்த பாக்கிய லட்சுமி!
சென்னை:சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பஞ்சு மிட்டாய் பாக்கிய லட்சுமிக்கு, பட்டர் பிஸ்கட் ரவி பொய் சொல்லிட்டான்னு அவன் மேல சின்ன கோவம்.
இனி பேசறது நல்லதில்லை, டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணனும்னு முடிவெடுத்துடறா. கடைக்கு ரவியுடன் வண்டியிலும் வரலை. கடைக்கு வந்தும் பேசலை.
கடையில் வேலை செய்யற ஒரு அக்கா, ரவி உன்கிட்ட லட்சுமி பேசணும்னா பிள்ளையாரப்பா கிட்ட வேண்டிக்கோன்னு சொல்றா. ரவியும் பிள்ளையாரிடம் வேண்டுதல் வச்சதோடு, 9 பெரிய கேன் மினரல் வாட்டரை படிகள் ஏறி தூக்கிப் போயி பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யறான்.

பேசலை
லட்சுமி பேசுங்க லட்சுமின்னு கெஞ்சினாலும் அவ ரவிகிட்ட பேசலை. அந்த நேரம் பார்த்து, லட்சுமியின் அண்ணி வந்து பணம் வேணும்னு கடையில அடம்பிடிக்கறாங்க. கழுத்தில் போட்டு இருந்த செயினை தரணும்னு சண்டை போட, அது மகாலட்சுமி சொல்லி, ரவி வாங்கி குடுத்த செயின் அதை தர மாட்டேன்னு சொல்லி அடம் புடிக்கறா.. அவள் கண் முன் ரவி செயினை வாங்கித் தந்தது வந்து போகுது.

தேஜா என்ட்ரி
அதிசயமாக புடவை கட்டிக்கொண்டு, ரவியை காதலிக்கும் பணக்காரி தேஜா கடைக்கு வர்றா.. தேஜாவா இது.. புடவையில் அழகா இருக்கே தேஜான்னு ரவி சொல்றான். பாக்கியலட்சுமிக்கு கடுப்பாகுது.

எண்ணெய்
சினிமாவுக்கு போலாமா ரவின்னு தேஜா கேட்க, இல்லை தேஜா எனக்கு மனசு சரியில்லேன்னு சொல்றான் ரவி. ஓ..லட்சுமி பேசலைன்னு உனக்கு மனசு சரியில்லையா.. இரு இரு அவளை உன்கிட்ட நெருங்க விடாம செய்யறேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறா தேஜா. லட்சுமி மாடி ஏறி போக படியில் எண்ணெயை ஊத்தி வச்சுடறா.

ரவியின் கைகளில்
லட்சுமி வழுக்கி விழப் போக, ரவி ஓடிச் சென்று தாங்கிப் பிடிச்சு தூக்கிக்கறான். இருவரும் முகத்தை முகம் பார்த்துக்க, பாக்கிய லட்சுமி கண்களை உருட்டி கருவிழியை இப்படியும் அப்படியும் அவன் இரு கண்களை பார்த்து மிதக்க விட்டு தன்னை மறந்து அவனை காதல் பார்வை பார்க்கறா. ரவியும் அவளை ஏந்தியபடியே நிக்கறான்.

பார்த்தா தேஜா
பாக்கியலட்சுமி திரும்பி பார்க்க அங்கே தேஜா வயித்தெரிச்சலுடன் நிக்கறா. உடனடியா இறங்கிக்கறா பாக்கிய லட்சுமி. எல்லாரும் சாப்பிட போக, லட்சுமி மட்டும் போகாமல் இருக்கா. எல்லாரும் சாப்பிட போறாங்க.. என்னை யாரும் சாப்பிட கூப்பிட மாட்டேங்கறாங்கன்னு புலம்பறான் ரவி.

சாப்பாடு
உடனே வீட்டிலிருந்து இருவருக்கும் எடுத்து வந்த சாப்பாட்டில் ஒரு கேரியரை ரவி முன் வச்சுட்டு, தன்னுடையதை எடுத்துக்கிட்டு மேல போறா. தேஜா, ரவி நீங்க சாப்பிட்டு வாங்க.. நான் வெளியில சாப்பிட்டுட்டு வர்றேன்னு சொல்ல, அதெல்லாம் கூடாது தேஜா.. வாங்க என் சாப்பாட்டை சாப்பிடலாம்னு அவள் கையை புடிச்சு அழைச்சுட்டு மேல வர்றான்.

விரதம்
ரவியின் செயல்களை பார்த்து கோபத்தில் இருக்கா லட்சுமி. அவள் ஒரு ஸ்பூன் சாப்பாட்டை வாயில் வைக்க போக, நீங்களும் சாப்பிடுங்க ரவி.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்னு தேஜா சொல்ல, ரவி சொல்றான்.. இல்லை தேஜா நீங்க சாப்பிடுங்க. நான் 6 மணி வரைக்கும் விரதம்னு சொல்றான்.லட்சுமியே சாப்பிட்டுட்டா.. நமக்கு என்ன, பசியும் என்னால தாங்க முடியாதுன்னு சொல்லிகிட்டே சாப்பிட, லட்சுமி சாப்பிடாமல் மூடி வச்சுட்டு, சாப்பிடாமலே வயிறு ரொம்பிருச்சுன்னு போயிடறா.

வரைக்கும்தான்
6 மணி வரைக்கும்தான் பொறுக்க முடியும். அதுக்குள்ளே பேசலே..நான் கடை வாசலில் போராட்டம் நடத்துவேன்னு சொல்றான். பிள்ளையாருக்கு போய் 9 தேங்காய் உடைக்கறான்..அதுல பூ வந்தா லட்சுமிக்கு புடிக்கும்னு சொல்றான். ஆனா, பிள்ளையார் கொடுத்த பூ தேங்காயில் விழுது.
பஞ்சு மிட்டாய், பட்டர் பிஸ்கட் கிட்ட 6 மணிக்குள்ள பேசிக்குமா, ரெண்டும் வண்டியில உரசிகிட்டு போகுமா?












Click it and Unblock the Notifications