"மகாலட்சுமியை" கல்யாணம் செய்துகிட்டு டெலிவரி பாயாக மாறிட்டாரே புரொடியூசர் ரவீந்தர்.. ஏன் என்னாச்சு
சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியிடம் பாத்திரத்தை கொண்டு வருமாறு ரவீந்தர் கண்டிஷன் போடும் இன்ஸ்டா பதிவு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்தரும் மகாலட்சுமியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் வெளியே கசியாதபடி பார்த்துக் கொண்டனர். அந்த நிலையில் அவர் கடந்த 1 ஆம் தேதி திருப்பதியில் நெருங்கிய உறவினர்களை கொண்டு எளிமையாக திருமணம் நடந்தது.
இந்த திருமணம் பல்வேறு விமர்சனங்களை கொடுத்தாலும் அதுகுறித்து இருவரும் கவலைப்படாமல் வாழ்ந்து காட்டுவோம் என பதிலடி கொடுத்துள்ளனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம், மகாலட்சுமிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 6 வயது மகன் உள்ளார்.

திருமணம்
அவருடைய சம்மதத்தின் பேரில் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. மகாலட்சுமி சித்தி உள்ளிட்ட சீரியல்கள் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரனின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறுகிறார்கள்.

அன்பே வா சீரியல்
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மகாலட்சுமி நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் வில்லி கேரக்டரை செய்து வருகிறார். இதனால் ரவீந்தர் இந்த சீரியலை பார்ப்பதே இல்லை என கூறியிருந்தார். 4 நாட்கள் பார்த்தாராம், அதிலேயே இவரது கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் சீரியலை பார்ப்பதில்லையாம்.

இருவரும் ஜோடி போட்டு சென்ற கோயில்
இந்த நிலையில் அண்மையில் இருவரும் ஜோடியாக டால்மியாபுரம் அருகே உள்ள குலத்தெய்வம் கோயிலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது என சொல்வார்கள்.

துரதிருஷ்டவசமானது
ஆனால் என்னுடைய சூழலோ துரதிருஷ்டவசமானது. என் பொண்டாட்டி ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 6 மணிக்கெல்லாம் அன்பே வா சீரியல் சூட்டிங் சென்றுவிட்டார். போவதற்கு முன்பு மதிய உணவுக்கு என்னென்ன வேண்டும் என்பதையும் லிஸ்ட் போட்டுவிட்டார். இன்று (ஞாயிறு) மகாலட்சுமிக்கு நான் டெலிவரி பாயாக இருந்து அன்பே சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுவிட்டேன்.

புரட்டாசி 1
புரட்டாசி 1ஆம்தேதியும் அதுவுமாக என் பொண்டாட்டிக்காக வெஜிடேரியனை சமைத்து கொடுத்த என் அம்மாவுக்கு நன்றி. நீண்ட நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமையில் நல்ல விஷயத்தை செய்துள்ளது மனநிறைவை தருகிறது என கூறியுள்ள ரவீந்தர், சாப்பாடு கொடுத்த பாத்திரங்களை மகாலட்சுமி மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் மாமியார் கொடுமை மட்டுமல்லாமல் என்னை அவர் டன்சோவில் சேர்த்துவிடுவார் என கூறியுள்ளார்.

ஓகே கணவா
இதற்கு மகாலட்சுமி, நிச்சயமாக என் கணவரே, டேஸ்டியான உணவை சமைத்து கொடுத்த என் அத்தைக்கு நன்றி என மகாலட்சுமி பாராட்டியுள்ளார். இதற்கு ரவீந்தரை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். நீங்கள் கொடுத்து வச்சவருனு நெனச்சேன், ஆனால் மகாலட்சுமிதான் கொடுத்து வச்சவங்க என்கிறார் ஒரு நெட்டிசன் கமென்ட் போட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications