சௌந்தர்யாவை பிக் பாஸ் டீம் ஏமாற்றிட்டாங்க.. பைனலில் நடந்த “அந்த” சம்பவம்! ஓபனாக பேசிய ரவீந்தர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ரன்னராக வந்த சௌந்தர்யாவை பிக் பாஸ் டீம் ஏமாற்றி விட்டார்கள் என்று ரவீந்தர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு சில சம்பவங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சைகளையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இரண்டும் இரட்டை சகோதரர்கள் போலத்தான் ஒட்டிக்கொண்டு இருக்கும். சர்ச்சைகளாலேயே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்று விடுகிறது என்றும் சொல்லலாம். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு பூகம்பம் வெடிப்பது வாடிக்கைதான். ஆனால் கடைசியாக முடிவுக்கு வந்த 8வது சீசனில் பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் முடிவுக்கு வந்தது.

Bigg Boss Tamil vijay tv

ஆனால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதம் காலம் ஆகிவிட்டாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேட்டிகளில் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு இதுபோல வாய்ப்புகள் இல்லை என்றாலும் இப்போது சில சீசன்களாகவே போட்டியாளர்கள் ஃபேன்ஸ் மீட்டிங் நடத்தி தங்களுடைய மனதில் இருக்கும் சந்தோஷம், துக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதுபோல youtube சேனல்களிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்களால் செய்ய முடியாத செயல்கள் மற்றும் செய்தும் வெளியே காட்டப்படாத விஷயங்களையும் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ரவீந்தர், சௌந்தர்யா பற்றி பேசியது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

அதில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடந்தது. அதிலும் சௌந்தர்யாவிற்கு ஏமாற்றம் நடந்து விட்டது என்று தான் சொல்வேன். அதாவது ஒவ்வொரு சீசனிலும் ரன்னராக வருபவருக்கு வீடு, கார், பணம் என்று ஏதாவது கொடுப்பார்கள். ஆனால் இந்த சீசனில் சௌந்தர்யாவிற்கு எதுவுமே கொடுக்கவில்லை. அதுபோல மற்ற சீசன்களில் கிராண்ட் பினாலே பிரமாண்டமாக ஏற்பாடு செய்வார்கள். ஆனால் இந்த சீசனில் பினாலேவிற்க்கு கூட பெருசாக எந்த விஷயமும் செய்யவில்லை.

ஒவ்வொரு வார இறுதியும் எப்படி இருக்குமோ அது போல் பினாலேவிற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது‌. பிக் பாஸ் டீமுக்கு இந்த சீசன் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. ஓரவஞ்சனை தான் காட்டி இருந்தார்கள். இதற்கு முன்பு பணப்பெட்டி டாஸ்க் வைத்து அதில் பல்க்கான தொகை வைப்பார்கள் ஆனால் இந்த முறை டைட்டில் வின்னருக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் இருந்து தான் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டிருந்தது என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசி இருக்கிறார்.

அதுபோல இன்னொரு பேட்டியில் போட்டியாளர்களை மக்கள் வாக்குகள் செலுத்தி சேவ் செய்யவில்லை. யார் பிக் பாஸ் வீட்டில் தொடர வேண்டும் யார் வெளியே போக வேண்டும் என்று முடிவெடுப்பது பிக் பாஸ் டீம் தான் என்றும் ரவீந்தர் கூறியிருக்கிறார். அதோடு அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் தீபாவளி வாரத்தில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

அதுபோல அந்த வாரத்தில் மக்களும் தங்களுக்கு பிடித்தவர்களை சேவ் செய்ய வேண்டும், பிடிக்காதவர்கள் வெளியே போக வைக்க வேண்டும் என்று வாக்குகள் செலுத்தி இருந்தார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது...? இந்த வாரம் தீபாவளி வாரம் அதனால் நோ எவிக்ஷன் என்று அறிவித்துவிட்டார்கள். தீபாவளி வாரம் என்பது அவர்களுக்கு வார இறுதியில் தான் தெரியுமா? அதற்கு முன்பு தெரியாதா? எதற்காக மக்களை இப்படி ஏமாற்ற வேண்டும் என்றும் அந்த பேட்டியில் ரவீந்தர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+