மகாலட்சுமி கேட்ட வார்த்தை.. தற்கொலை யோசனை.. பாத்ரூமுக்குள் பட்ட அவஸ்தை.. ரவீந்தர் எமோஷனல்
சென்னை: நடிகை மகாலட்சுமியின் கணவரான தயாரிப்பாளர் ரவீந்தர் சில தினங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மோசடி செய்து விட்டார் என்ற கம்ப்ளைன்ட் காரணமாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து இப்போது பெயிலில் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் ஜெயிலுக்கு போகும் போது தன்னுடைய மனைவி மகாலட்சுமி கேட்ட வார்த்தை குறித்தும் அதனால் தான் பட்ட வேதனை குறித்தும் ரவீந்தர் மனம் திறந்து இருக்கிறார்.

அத்தோடு சிறைக்குள் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகைகள் தயாரிப்பாளர் ரவீந்தர் என்று சொன்னால் ரசிகர்களுக்கு பெரிய அளவில் தெரிய வாய்ப்பு இல்லை. அவர் நட்புனா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் என்ற சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். அதனால் அவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்தான்.
அது மட்டுமல்லாமல் கடந்த வருடத்தில் இவர் தான் இணையத்தில் ஹார்ட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருந்தார். ஒரே நாளில் உலக பேமஸ் என்று சொல்வது போல தான் இவர் சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமியை மறுமணம் செய்து இருந்தது பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது. அதுவரைக்கும் இவர் வெளியே தெரியாமல் இருந்தாலும் அந்த நேரத்தில் இவருடைய திருமண புகைப்படங்கள் வெளியானதும் யார்ரா இவர் என்று இவருடைய பயோகிராபியை தேடியவர்கள் ஏராளம்.
அன்றிலிருந்து ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அடிக்கடி இவர்கள் வெளியே செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு மேலும் ரசிகளை வெறுப்பேற்றி வந்திருந்தனர். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு ரவீந்தர் அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரபல தயாரிப்பாளர் இவர் மீது மோசடி புகார் கொடுத்து இருந்த நிலையில் அது சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு ரவீந்தருக்கு இப்போது ஜாமீன் கிடைத்து அவர் வெளியே வந்திருக்கும் நிலையில் தனியார் youtube சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அதில் தான் கைது செய்யப்படும் போது தன்னுடைய மனைவி கேட்ட வார்த்தையால் நான் நொறுங்கிப் போய் விட்டேன். கைது செய்யும்போது மகாலட்சுமி என்னிடம் நீ எப்படி உட்கார்ந்து, எந்திரிக்க போற? என்று கேட்டாள். ஏனென்றால் என்னால் எல்லாரையும் போல எல்லா வேலைகளையும் செய்ய முடியாது.
அதை நேரத்தில் ஜெயிலுக்குள் இருக்கும்போது நான் நரக வேதனையை தான் அனுபவித்து வந்தேன். முதல் நாள் உள்ளே போகும்போதே என்னுடைய ஆடைகளை எல்லாம் கழட்டி செக் பண்ணினார்கள். அது வழக்கமாக எல்லோருக்கும் நடக்கிறது தான். ஆனால் நான் அனுபவிக்கும் போது ரண வேதனையாக இருந்தது. தப்பே செய்யாமல் நான் ஜெயிலுக்குள் இருந்து விட்டு வந்திருக்கிறேன்.

ஜெயிலுக்குள் இருக்கும் போது முதல் ஆறு நாட்கள் நாம் செத்து விடலாம் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன் அந்த அளவு கொடுமைகளை அனுபவித்தேன். உள்ளே பாத்ரூம் கூட போக முடியாது. முட்டி போட்டுக் கொண்டுதான் பாத்ரூம் போனேன். வேதனையின் உச்சத்தை ஜெயில் வாழ்க்கையில் நான் அனுபவித்து விட்டேன் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார்.
அத்தோடு தன்மீது பொய் பழி சுமத்தி என்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை நான் சும்மா விடமாட்டேன். என்னை மட்டும் அல்லாமல் என் மனைவியை பற்றியும் பலர் அவதூறாக பேசினார்கள். என்னுடைய அம்மாவுக்கு பிறகு என் மீது அதிகமாக பாசம் வைத்திருப்பது என்னுடைய மனைவிதான். அவள் தான் எனக்கு எப்போதும் மகாலட்சுமி என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications