வெளியே நடப்பதை லெட்டரில் எனக்கு சொல்லிட்டு இருந்தாங்க! பிக் பாஸ் ரகசியத்தை அம்பலப்படுத்திய ரவீந்தர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரவீந்தர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போது வெளியே நடக்கும் நிகழ்வுகளை தனக்கு லெட்டரில் உள்ளே தெரியப்படுத்திட்டு இருந்தாங்க என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் ரசிகர்களுக்கு பரீட்சையமான ரவீந்தர் 6 சீசன்களாக அந்த நிகழ்ச்சியை ரிவ்யூ செய்திருந்தார். ஆனால் எட்டாவது சீசனில் இந்த வீட்டிற்குள் முதல் ஆளாக சென்ற ரவீந்தர் முதல் எலிமினேஷனாகி வெளியே வந்திருந்தார். ஆனால் ஒரு வாரம் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் அதற்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தான் வெளியே வந்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் எலிமினேஷன் ஆனதும் இது அன்எவிக்ஷன் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு விஜய் சேதுபதி முன்பு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பற்றி அவர்களுடைய முகத்துக்கு நேராகவே தன்னுடைய ரிவ்யூ கொடுத்து விட்டு வந்திருந்தார். ஒரு சிலரை அதிகப்படியாக புகழ்ந்திருந்தார். ஒரு சிலரை எதிர்பார்க்காத அளவிற்கு நோஸ்கட் செய்திருந்தார்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் உள்ளே என்னவெல்லாம் நடந்தது என்று பல பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார். சும்மாவே மணி கணக்கில் பேசுவார் இப்போது அவரே அந்த நிகழ்ச்சிக்குள் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சி பற்றி அக்கு வேறு ஆணிவேராக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே நடக்கும் எந்த நிகழ்வுகளும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாத வகையில் தான் விளையாடப்படுவதாக கூறப்படுகிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் செல்போன், வாட்ச் என்ற எந்த சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது. அது போல உள்ளே அங்கு கிளீனிங் உட்பட வேலைக்கு வரும் நபர்களை கூட போட்டியாளர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஸ்கிரீன் போட்டு தான் வேலை பார்த்து இருக்கிறார்கள்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தனக்கு கடிதம் அனுப்பியதாக ரவீந்தர் பேசி இருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் அதே நாளில்தான் தன்னுடைய அப்பாவுக்கு ஆபரேஷன் நடைபெற்றது. அவருக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகமான ஆசை இருந்தது.
அதனால் தான் நான் இந்த சீசனில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். முக்கிய காரணம் அப்பாவின் ஆசையாக இருந்தாலும், இன்னொரு காரணம் பணம் ஒரு முக்கிய தேவையாகவும் இருந்தது. அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதற்கு முன்பு இரண்டு முறை எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில சந்தர்ப்பங்களால் உள்ளே போக முடியாமல் ஆகிவிட்டது.
அதனால் இந்த முறையை தவிர்க்கக்கூடாது என்று நினைத்தேன். இதுவரைக்கும் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என்று உறுதியாகாமல் இருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் நான் உறுதி செய்யப்பட்டேன். ஆனால் ஏற்கனவே என்னுடைய அப்பாவிற்கு ஆபரேஷன் செய்வதற்கு நாள் பிக்ஸ் பண்ணி விட்டதால் வேறு வழியில்லாமல் அப்பாவோடு இல்லாமல் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
உள்ளிருக்கும்போது எனக்கு ஹாஸ்பிடலில் இருந்து கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் என்னுடைய அப்பாவின் நிலைமை எப்படி இருக்கிறது என்று எனக்கு பிக்பாஸ்க்குள் கடிதம் வந்து கொண்டிருந்தது. என்னுடைய அப்பா ஐ சியூவில் இருந்து ரூமுக்கு வந்துவிட்டது எனக்கு தெரியும் என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசியிருக்கிறார். இதனால் இதுபோல மற்ற போட்டியாளர்களுக்கும் வெளியே நடக்கும் நிகழ்வுகள் உள்ளே கடிதம் அனுப்பி தெரிவிப்பார்களா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications