பெண்களோடு ஆட்டம் போட்ட “புகழை” கைது செய்ய வந்த போலீஸ்.. பகீர் காரணம் இதுதானா..?
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவரை கைது செய்வதற்காக அரங்கத்திற்கு போலீஸ் வந்திருக்கின்றனர்.
விஜய் டிவி தரப்பில் இருந்து போலீஸிடம் சமரசம் பேச முயற்சித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் என்ன நடந்தது எதற்காக போலீஸ் அதிகாரிகள் களத்தில் வந்திருக்கின்றனர் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வாய்ப்பு எப்போது யாருக்கு எப்படி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. திறமை மற்றும் உழைப்பு இருந்தால் மட்டும் தான் அவர்களுக்கு காலம் தாழ்ந்தாலும் சரியான வாய்ப்பு அமைந்து விடும். அந்த வகையில் ஒருவர் தான் விஜய் டிவி புகழ். இவர் ஆரம்பத்தில் பெண் வேடமிட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்தார்.

அந்த நேரத்தில் சின்னத்திரையில் சிரியல்களுக்கு மாற்றாக ஜாலியான ஒரு சமையல் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் கோமாளியாக தன்னுடைய நிஜ உருவத்தில் வந்த புகழ் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார். அதோடு இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா? என்று சொல்லும் அளவிற்கு டைமிங் காமெடி மற்றும் பலர் தன்னை கலாய்த்தாலும் அதை கண்டு கொள்ளாத குணம் பலரையும் கவர்ந்திருந்தது.
அதோடு புகழுடைய உழைப்பு மற்றும் ஆரம்பகால கஷ்டங்கள் பலருக்கும் வெளியே தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் சமீபத்தில் தான் புகழுக்கு திருமணமும் முடிந்திருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புகழ் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார். அத்தோடு அவருக்கு பல திரைப்படங்களிலும் அடுத்தடுத்து போக வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நான் விஜய் டிவியை விட்டு போக மாட்டேன் என்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே இருக்கிறார்.

அப்படித்தான் இப்போதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு பிறகு ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பிரமோவில் அங்கு இருக்கும் சீரியல் நடிகைகளோடு ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த புகழை தேடி திடீரென்று அரங்கத்திற்கு இரண்டு பெண் காவலர்கள் வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சியாகி என்ன ஆச்சு சொல்லுங்க மேடம் என்று கேட்கின்றனர்.
அதற்கு அவர்கள் கம்ப்ளைன்ட் வந்திருக்கிறது. நாங்கள் இங்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி ரிப்போர்ட் எடுக்க வேண்டும் என்று சொல்ல, அப்போது புகழ் மேடம் இது ப்ராங்கா? இல்லையா? என்று நீங்க ஓபனா சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும் என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் அதிகாரி என்னை மேல் இடத்தில் இருந்து அனுப்பி இருக்காங்க என்று சொல்லி அங்கு விசாரிக்கிறார்.

இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இது பிராங்க் ஆகத்தான் இருக்கும். இது உலகம் அறிந்த பிராங்காக இருந்தாலும் விஜய் டிவி இதை விட்டு வைக்க மாட்டேன் என்கிறார்களே..! மீண்டும் மீண்டும் இப்படியே ஏமாற்றுகிறார்களே? என்று நொந்து போய் பலர் கமாண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications