சோறு சாப்பிடுற கேப்புல...கேப் விடாத மணிமேகலை.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பாவாடை தாவணி கட்டி இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் தான் அசந்து போய் விட்டார்கள் என்று பார்த்தால் மணிமேகலையும் செம ஹாப்பி தான் போல.
சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கண்டெண்ட் கொடுத்திருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர் என்று சொன்னால் சும்மாவா என்று தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்
தன்னுடைய படபடப்பான பேச்சு திறமையாலும், குழந்தைத்தனமான குணத்தாலும் அனைவரையும் வசீகரித்து வந்துகொண்டிருக்கும் விஜே மணிமேகலைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் அமைந்து விடுகிறார்கள். அதிகமான நெகட்டிவ் கமெண்டுகளை பெறாத தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் தன்னுடன் பணியாற்றிய உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் மீண்டும் தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கணவரின் ஒத்துழைப்போடு இவர் கால் வைக்கும் இடமெல்லாம் வெற்றியை தான் கடந்து கொண்டிருக்கிறார்.

பேசினாலே ஜாலிதான்
இவர் ஒரு தொகுப்பாளராக மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் கலக்கியிருக்கிறார். இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அனைவரையும் கவர்ந்திழுக்கும் பேச்சுத்திறமையாளும் காமெடியாலும் இவர்
தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி போரடிக்காமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்பு விஜே அர்ச்சனா தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதும் அவருக்கு பதிலாக மணிமேகலை அவருடைய இடத்தை சிறப்பாக சமன்படுத்தி கொண்டிருக்கிறார்.

நெகட்டிவ் கமெண்டுகள் குறைவுதான்
ஒரு சிலர் மீண்டும் விஜே அர்ச்சனா இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் மணிமேகலையின் ரசிகர்கள் எங்க தலைவியால்தான் இந்த நிகழ்ச்சி எவ்வளவு ஜாலியாக இருக்கிறது அதனால் இவரே இருக்கட்டும் என்று இவருக்காக ரசிகர்கள் கொடுக்கும் சப்போர்ட் சமூக வலைத்தளத்தில் ஹெவியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. இதுவரைக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சூட்டிங் செட்டிங் போட்டு ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி படப்பிடிப்பு கிராமத்தில் நடந்து கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போதும் அழுது கொண்டிருக்கும் சீரியலுக்கு மாற்றாக இந்த மாதிரி ஜாலியான ஒரு சில வீடியோக்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக தான் இருக்கிறது. அதுவும் கிராமத்து அழகை மிக அழகாக காட்டி இருப்பது கூடுதல் சிறப்பாகவும் இருக்கிறது.

ஃப்ரீ டைமில் ரீல்ஸ் வீடியோ
சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் மணிமேகலை சாப்பாடு டைமில் ஒரு சிலர் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து இருக்கிறார். அந்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடவும் அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை குவிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவருடைய யூடியூப் சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் செய்யும் சேட்டைகளையும் சமையல் கலையையும் யூடியூப் சேனலில் பதிவிட்டு அதிகமான பாலோவர்ஸ்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவும் வேற லெவல் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் இவருடைய ரீல்ஸ்ஸ் வீடியோ ரொம்பவே பிடித்திருக்கிறதாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications