Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெய்வமகள் அண்ணியாரா இது.. முட்டிக்கு மேலே குட்டை பாவாடையோடு... கலக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்கள் ஆக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி சிலருக்கு தான் அந்த கேரக்டரின் பெயரை அடைமொழியாக வைத்தே ரசிகர்கள் கூப்பிடும் அளவுக்கு பாப்புலர் ஆகிறார்கள்.

அதுபோல தெய்வமகள் சீரியலில் காயத்திரி ஆக நடித்து அண்ணியார் என்று ஹீரோ பிரகாஷால் செல்லமாக மற்றும் மிரட்டலாக கூப்பிட்டு தற்போது ரசிகர்களும் அவரை அப்படியே கூப்பிட்டு வருகின்றனர். ரேகா கிருஷ்ணப்பாவைத்தான் சொல்கிறோம்.

தெய்வமகள் சீரியலுக்கு பிறகு அவர் பல சீரியலில் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் அண்ணியார் என்றே குறிப்பிடப்படுகிறார். சமீப காலமாக அவரை தமிழ் சீரியல்கள் பக்கம் காண முடிவதில்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது

 பெங்களூர் ரேகா

பெங்களூர் ரேகா

பெங்களூரைச் சேர்ந்தவர் ரேகா கிருஷ்ணப்பா. இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரர். பெங்களூரில் படிப்பை முடித்த இவர் பிஏ படித்துக் கொண்டிருந்தபோதுதான் நடிப்பு ஆசைக்குள் வந்துள்ளார். இவரது தோழிதான், நீ நல்லா அழகா எடுப்பா இருக்கியே நடிக்கலாமே என்று யோசனை கூறியுள்ளார். இவரும் அதற்காக அவர் பிரண்டோடு போய் ஒரு இயக்குனரை பார்த்திருக்கிறார். ஆனால் அந்த இயக்குநரோ, அவர் அப்போது இவர் குள்ளமாக இருக்கிறார் என்று கூறி நிராகரித்து விட்டாராம்.

 சேச்சி அம்மா சீரியல்

சேச்சி அம்மா சீரியல்

இதனால் அப்செட் ஆகி விட்டாராம் ரேகா. பின்னர் காலேஜ் முடித்ததும் அதே இயக்குனர் இவருக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார். அது மலையாள சீரியல் ஆன 'சேச்சி அம்மா '. அந்த சீரியலில் இவர் வில்லியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த சீரியலைத் தொடர்ந்து ரேகா பிரபலமாகி விட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

 தமிழில் பாரிஜாதம்

தமிழில் பாரிஜாதம்

தமிழில் முதல் முதலில் அறிமுகமானது பாரிஜாதம். ஆனால் அந்த சீரியலில் அவரது கேரக்டரை விடவும் தெய்வமகள் சீரியல் மூலமாகத்தான் அவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரிய ஆரம்பித்தார். இவர் வசந்த் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் ஒரு நடன இயக்குனர். காலேஜ் படிக்கும் போது இவருடைய பிரண்டு ஒரு பங்ஷனில் டான்ஸ் ஆடுவதற்காக வசந்தகுமாரிடம் டான்ஸ் கற்று இருக்கிறார்.

 காதல் டான்ஸ்

காதல் டான்ஸ்

ஆனால் கடைசி நேரத்தில் இவருடைய பிரண்டால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் வசந்தகுமார் ரேகாவிடம் நீ இதில் கலந்து கொள்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் எனக்கு டான்ஸ் ஆட தெரியாது என்று கூறியிருக்கிறார். நான் சொல்லி தருகிறேன் என்று இவரும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த நட்பானது பின்னர் காதலாக மாறி கடைசியில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் போய் முடிந்ததாம்.

 வில்லியாக ஆசை

வில்லியாக ஆசை

தற்போது இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதுவும் பள்ளி படிப்பை படித்து கொண்டு இருக்கிறது. அவருடைய மகள் அவர் தோளைத் தாண்டி வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கிறார். இவருடைய குடும்ப போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்தது. இந்த போட்டோக்களை பார்த்த இவரின் ரசிகர்கள் இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்கள். தெய்வமகள் சீரியல் தொடர்ந்து நந்தினி சீரியலிலும் இவர் வில்லியாக வந்து அனைவரையும் கதிகலங்க வைத்திருந்தார்.

 நீலாம்பரி கேரக்டர் மீது மோகம்

நீலாம்பரி கேரக்டர் மீது மோகம்

இவர் பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்து இருந்தாலும் எந்த சீரியலிலும் கிடைக்காத பெயரும் புகழும் தெய்வமகள் சீரியல் மூலமாக இவருக்கு கிடைத்தது. பலர் இந்த சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும்போது மீம்ஸ்களை போட்டு இவரை கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள். அதனாலேயே இவர் பிரபலம் ஆக மாறிவிட்டார். ஆனால் இவருக்கு ரம்யா கிருஷ்ணன் மாதிரி பெரிய வில்லி கேரக்டர் பண்ண வேண்டும் என்றுதான் ஆசையாம். படையப்பா படத்தை இவர் பலமுறை பார்த்து இருக்கிறாராம். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் ரொம்பவும் பிடித்ததாம்.

 சண்டைக்கார அண்ணியார்

சண்டைக்கார அண்ணியார்

தெய்வமகள் சீரியலில் இவர் பிரகாஷிடம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இவரை முறைத்துக்கொண்டு அண்ணியாரே என்று போடும் சப்தங்களில் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ரொம்பவும் அமைதியான டைப்பாம். சூட்டிங் இல்லாத நேரங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரிலும் வைரலாக பரவி வந்தது.

 முத்தான முதல் விருது

முத்தான முதல் விருது

இவருக்கு இந்த சீரியல் மூலமாக விருது கிடைத்து போது, அதை ரொம்ப மகிழ்ச்சியாக வந்து வாங்கிநார். காரணம், எந்த சீரியலிலும் கிடைக்காத அங்கீகாரமும், விருதும் இந்த சீரியலில்தான் தனக்கு கிடைத்தது என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ரேகா. இந்த நிலையில் ரேகா தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். லாக்டோன் என்றாலும் கூட உற்சாகமாக வீட்டிலேயே கொண்டாடியுள்ளார்.

 நம்ம அண்ணியாரா இது

நம்ம அண்ணியாரா இது

இவரது பிறந்தநாளுக்கு பல ரசிகர்களும் நடிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவருடைய பிறந்தநாளுக்கு இவர் போட்டிருக்கும் போஸ் வேற லெவல் உள்ளது. முட்டிக்கு மேலே குட்டை பாவாடையோடு இவர் கொடுத்திருக்கும் கலக்கல் போஸ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அண்ணியாரா இது என்று பலரும் ஆச்சரியத்துடன் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+