உள்ளேதான் அடிச்சுக்குவோம்.. வெளியில் கும்மியடிப்போம்.. அடுத்து சங்கம் வந்துரும் போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் புதுசு புதுசா எத்தனை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எல்லாமே வேற லெவல் தான் இருந்து வருகிறது. அதிலேயும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கேட்கவே வேண்டாம் .

ரசிகர்களும் ஒவ்வொரு சீசனுக்கும் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறார்கள். இதனை எதிர்த்து பலரும் பேசிக்கொண்டிருந்தாலும், நேத்து பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்ன நடந்துச்சி என்று தான் பலரின் கேள்வியாக இருந்துவருகிறது .

அடுத்த வீட்டை எட்டிப் பார்ப்பதில் என்ன ஒரு ஆனந்தம் என்று ஒவ்வொரு நாளும் அந்த வீட்டிற்குள் நடப்பதை பற்றி அசை போடுவதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு சீசனிலும் நன்றாகவே கலக்கிக் கொண்டிருக்கிறது.

கூடிக்குவோம்

கூடிக்குவோம்

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சீசனிலும் அந்த வீட்டுக்குள் இருக்கும் போது அனைவரும் அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் எல்லோரும் ஒன்றாக பிரண்ட்ஸ்களாக மாறி விடுகிறார்கள் . அது ஒரு விளையாட்டு அங்கு அப்படித்தான் இருப்போம்.

வெளியில் நட்பு

வெளியில் நட்பு

வெளிய வந்த நாங்களாக நடந்து கொள்வோம் என்று பலரும் கூறி வந்தாலும் ரசிகர்கள் இன்னமும் அந்த வீட்டிற்குள் நடப்பதையே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சிலருக்கு வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட்டு இருக்கிறது.

கூடிய புகழ்

கூடிய புகழ்

அதனால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதனை நம்பிய பலரும் தங்களது பெயர் புகழை எல்லாம் மறந்து இந்த வீட்டிற்குள் செல்கின்றனர் .சிலருக்கு இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு நல்ல ஒரு பேரும் புகழும் இருக்கிறது .ஆனால் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் இவரா அவர் என்று பலரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு அவர்களின் பெயரும் புகழும் இறங்கி விடுகிறது.

நிறைய சண்டை

நிறைய சண்டை

தற்போது ஒளிபரப்பப்படும் நான்காவது சீசனில் பலர் கலந்து கொண்டாலும் இந்த வீட்டில் இருந்து ஒரு சிலர் தற்போது வெளியே வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்குள் இருந்த வரைக்கும் ஒரே சண்டை சச்சரவு தான் ஆனால் வெளியே வந்த பிறகு நாங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு என்று ஒரு மீட்டிங் போட்டு இருக்கிறார்கள்.

வெளியில் சந்தித்த நாலு பேரும்

வெளியில் சந்தித்த நாலு பேரும்

அதில் சுரேஷ் சக்ரவர்த்தி ,ரேகா, சம்யுக்தா மற்றும் வேல்முருகன் அனைவரும் சேர்ந்து ஒன்றாக சந்தித்திருக்கிறார்கள். இதனை தனது இன்ஸ்டாகிராமில் ரேகா போஸ்ட் போட்டிருக்கிறார். இவர்கள் வெளியே மீட்டிங் போட்ட இவர்களுடைய போட்டோக்களை பார்த்ததும் இதில் சனம் சுஜி நிஷா சித்தன் எல்லாம் இல்லையே என்று பல ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகிறார்களாம் .

ரீச் ஆகாத சனம்

ரீச் ஆகாத சனம்

இதற்கு ரேகா தனது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்திருக்கிறார் . அதில் மொட்டை சுரேஷ், சம்யுக்தா மற்றும் வேல்முருகன் எல்லாரும் சேர்ந்து சந்தித்தோம். ஆனால் சுசி மற்றும் சனம் போன் ரீச் ஆகவில்லை. அவர்களை எங்களால் காண்டாக்ட் பண்ண முடியவில்லை அதனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் நிஷாவும் சித்தனும் நேற்றுதானே வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கிறார்கள் .

டயர்டா இருக்காங்களே

டயர்டா இருக்காங்களே

அதனால் அவர்கள் டயர்டாக இருப்பார்கள் அதனால் நாங்கள் அவர்களை கூப்பிடவில்லை. மற்றபடி எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் வீட்டிற்குள் தான் சண்டை போட்டோம் தவிர வெளியில எல்லாம் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். நல்லவேளை இன்னும் யாரும் பிக் பாஸ் போட்டியாளர்கள் நலச் சங்கம்னு ஆரம்பிக்கலை.. !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+