புஷ்பா புருஷன் ரசிகர்களுக்கோர் நற்செய்தி.. விரைவில் வருது புஷ்பா டாக்கீஸ்?
சென்னை: எல்லோரையும் போலதான் இவரும் சேலை கட்டுகிறார்.. ஆனால் ரேஷ்மாவுக்கு மட்டும் அப்படி என்னதான் வசீகரம் ஸ்பெஷலாக இருக்கிறதோ.. சும்மா தங்க தேவதை மாதிரி சூப்பராக ஜொலிக்கிறார்.
ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்ற பெயர்தான் இவருக்கு செம்ம பொருத்தமாக போய் விட்டது. அப்படி ஒரு அம்சமான கேரக்டர் அது. அதுவும் சூரியைப் பார்த்து புஷ்பா புருஷன் என்றே எல்லோரும் கூப்பிடும் அளவுக்கு பாப்புபலாகி விட்ட கேரக்டர் அது.
ஆனால் இந்த கேரக்டர் கொடுத்த பாப்புலாரிட்டி புஷ்பா அதாவது ரேஷ்மாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகளைக் கொடுத்து விடவில்லை. மாறாக பிக் பாஸ் வரை மட்டுமே இவரால் போக முடிந்தது. ஆனால் அங்கு கிடைத்த பாப்புலாரிட்டி அவரை வேற லெவலுக்குக் கொண்டு போனது.

ரேஷ்மாவின் சானல்
இப்ப மேட்டருக்கு வருவோம். ரேஷ்மா விரைவில் யூடியூப் சேனல் ஓபன் பண்ணி கலக்கப் போகிறாராம். சானல் பெயர் என்னன்னு தெரியலை.. ஆனால் பேசாமல் புஷ்பா டாக்கீஸ்னு வைக்கலாம்.. செமையாக இருக்கும். இஸ்டாகிராமில் இவரை ரசித்த ரசிகர்களுக்கு இனி யூடியூபிலும் கொண்டாட்டம்தான். பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் ஜோடியாக அதுவும் புஷ்பா கேரக்டரில் நடித்திருந்தார்.

புஷ்பா கேரக்டர் பிரபலம்
இவரைக் காட்டிலும் இவரது பெயருக்கு வரவேற்பு கிடைக்க ஆட்டோமேட்டிக்காக பாப்புலராகி விட்டார். இதுவரை பார்க்காத கேரக்டரில் ரசிகர்கள் இந்த படத்தில் இவரை பாத்திருக்கிறார்கள். அது போதாதென்று இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணுனாலே போதும் பக்கம் பக்கமாக இவரது போஸ்டர்களும் இவருடைய ரசிகர்களின் ஃபேன்பேஜ்களும் தான் வந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் பிரபலம்
இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இப்பவும் சில படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த லாக் டவுன் நேரத்தில் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் செமையாக இந்த நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார். தெரியாததை கற்றுக்கொள்வதில் ரொம்பவும் ஆர்வம் காட்டும் இவர் பல மொழிகளையும் கற்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பியானோ வாசிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

உடம்பு முக்கியம்
உடம்பு போட்டு விடாமல் கவனமாக இருக்கும் இவர், உடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் இவர் அதை பல வீடியோக்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை காட்டி இருக்கிறார். இவருடன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன், தற்போது நடிகர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு ரேஷ்மா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். விஜய்யின் தீவிரமான ரசிகை ஆவார் ரேஷ்மா. அதனால் ஒரு சக ரசிகையாக இவர் ஆதங்கத்தில் இருக்கிறார்.

மீராவுக்குக் கண்டனம்
மீரா மிதுன் இந்த மாதிரி பேசியிருப்பது அநாகரீகம். அதுவும் தான் பாப்புலர் ஆக வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருக்கும் ஒருவரைப் பற்றி பேசியிருப்பது கேவலமான செயல். இந்த மாதிரி பேசுபவர்களைப் பற்றி நாம் கண்டுக்கவே கூடாது. மீடியாக்களிலும் திரைப்படத் துறையினரும் தங்களைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி எல்லாம் மீரா மிதுன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசியதை யாரும் கண்டுக்கவில்லை என்றால் தான் திருந்துவார்கள்.

கண்டுக்காதீங்க
ஒரு பயிருக்கு தண்ணீர் தெளித்து விட்டால் தான் அது வளரும். அதுபோல இவருடைய பேச்சுக்கோ அல்லது செயலுக்கோ நாம் கருத்து கூறினால் அது அவருக்கு பிரபலம் தேடிக் கொடுத்தது போலஆகி விடுகிறது. அதை வைத்து அவர் வளர்ந்து விடுகிறார். அதனால் இந்த மாதிரி செயல்களை நாம் என்கரேஜ் பண்ணவும் வேண்டாம், கண்டனம் தெரிவிக்கவும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

வனிதாவுடன் நட்பு
அதுமட்டுமல்லாமல் இவருடன் அதே வீட்டுக்குள் இருந்த வனிதாவின் திருமணத்திற்கு இவர் செல்லாததற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார். வனிதா எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என்னால் அந்த நேரத்தில் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணம் மட்டும்தான். வேறு காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார். இப்போ வனிதா வின் கணவரான பீட்டர் பாலுக்கு கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் சீக்கிரமாக சரியாக வேண்டும் என்றும் ரேஷ்மா கூறியிருக்கிறார்.

சானலில் கலக்கல்
இன்ஸ்டாகிராமில் சேலையில் கவர்ச்சி பதுமையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் இனி யூடியூப் சேனல்களிலும் கலக்க போகிறாராம். இவருடைய செல்லமான வெகுளியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் இவர் இதே காமெடியோடு யூடியூப் சேனலை உருவாக்கி அதில் ரசிகர்களை என்டர்டைன் பண்ண வருகிறாராம். ரசிகர்களே காத்திருங்கள்.. புஷ்பா சானலை ரசித்து மகிழ. காத்திருப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications