Retro Box Office Collection Day 3: ரெட்ரோ 3-ஆவது நாள் வசூல் இத்தனை கோடியா?
சென்னை: மே 1-ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸான ரெட்ரோ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 3 ஆவது நாள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். முதல் இரு தினங்களில் உலகமெங்கும் அனைத்து மொழிகளிலும் ரூ 46 கோடி வசூலை வாரி குவித்தது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜை ஹெக்டே நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. இந்த படம் வெளியான முதல் நாளே நல்ல வசூலை வாரி தந்தது.

இரண்டாவது நாளும் அதே நிலை இருந்தது. மே 2 ஆம் தேதி உலகம் எங்கும் 11 கோடி ரூபாய் வசூலை குவித்தது. அதாவது முதல் நாள் உலகமெங்கும் 35 கோடி வசூலானது. எனவே ரெட்ரோ நேற்று முன் தினம் வரை கடந்த இரு தினங்களில் 46 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
தமிழகத்தில் எவ்வளவு
அது போல் தமிழகத்தில் 14.9 கோடியும் வெளிநாடுகளில் 11.4 கோடியும் வசூலானதாக சொல்லப்படுகிறது. அது போல் ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் 2.85 கோடியும், கர்நாடகாவில் 2.85 கோடியும், கேரளாவில் 2.5 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் 0.5 கோடியும் வசூலானது.
உலகமெங்கும் இந்த ஆண்டு 9 தமிழ் படங்கள் வெளியாகின. அதாவது குட் பேட் அக்லி, விடாமுயற்சி, ரெட்ரோ, டிராகன், மதகஜராஜா, வீர தீர சூரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், காதலிக்க நேரமில்லை, கேங்கர்ஸ்.
மூன்றாவது நாள்
இதில் முதல் நாளே அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் ரெட்ரோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் 51.5 கோடியுடன் குட் பேட் அக்லியும், 48 கோடி ரூபாயுடன் விடாமுயற்சியும் உள்ளது.
தற்போது ரெட்ரோ 35 கோடி வசூலை குவித்துள்ளது. 3ஆவது நாளான நேற்றைய தினம் ரெட்ரோ படம் 7.72 கோடி வசூலை பெற்றது. தமிழில் ரூ 7.05 கோடியும் தெலுங்கில் ரூ 6.70 லட்சமும் வசூலானது.
ரெட்ரோ பட்ஜெட் என்ன
ரெட்ரோ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 160 கோடி. தமிழகத்தில் 550 திரைகளிலும் உலகம் முழுவதும் 2500 திரைகளிலும் ரிலீஸானது. ரெட்ரோ படத்தின் பட்ஜெட்டான ரூ 160 கோடியை வசூலித்துவிட்டால் இந்த படம் நிச்சயம் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
விமர்சனம் என்ன
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குள்ளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்த்து வருகிறார் திலகன் (ஜோஜு ஜார்ஜ்)- சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. கண்ணன் மீது எப்போதும் திலகன் வெறுப்புடன் இருக்கிறார்.
காதல் திருமணம்
ஒரு முறை எதிரிகளிடம் இருந்து பாரி, திலகனை காப்பாற்றிய தருணத்திலிருந்து அவரை தன் மகனாகவே ஏற்றுக் கொள்கிறார். திலகனின் அடிதடி, கடத்தல் செயல்களை பாரியும் செய்கிறார். அவர் ருக்மணியை (பூஜா ஹெக்டே) காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
அடிதடி
இதற்காக தனது தந்தையின் வேலைகளான அடிதடி கடத்தல் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டு புது திருமண வாழ்க்கைக்கு தயாராகிறார் கண்ணன். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் மட்டும் திலகனுக்கு தெரியாமல் கண்ணன் செய்ததால் தந்தையுடன் மோதல் ஏற்படுகிறது.
பூஜாவின் கோபம்
காதலி ருக்மணி முன்பே வளர்ப்புத் தந்தையின் கையை பாரி வெட்டி விடுகிறார். இதனால் திருமணம் நின்று போகிறது. ருக்மணியும் கோபித்துக் கொண்டு வேறொரு மாநிலம் செல்கிறார். சிறையில் இருக்கும் பாரியின் சண்டையிடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்து கொள்ள ஒரு கும்பல் விரும்புகிறது. ஆனால் அவர்களை அடித்துவிட்டு சிறையிலிருந்து பாரி தப்பிவிடுகிறார்.
கோபம்
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பாரியை தேடுகிறது. இன்னொரு புறம் தந்தையின் ஆட்கள் தேடுகிறார்கள். பாரியோ தனது காதலியை தேடி புறப்படுகிறார். காதலியை அவர் தேடி கண்டுபிடித்து கரம் பிடித்தாரா என்பதுதான் மீதி கதை!
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications