அம்மா இவங்கள பாருமா போட்டுக் கொடுத்த நிலா... பாக்கியா மற்றும் அமிர்தா செய்த எதிர்பாராத செயல்
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க அமிர்தா மற்றும் பாக்கியா இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி வெளிய வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எப்படி கோபியை ஜெயிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் பாக்கியாவும் அமிர்தாவும் ஜோடியாக சூட்டிங் ஸ்பாட்டில் மால டும் டும் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.
இன்னொரு வீடியோவில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா வீடியோ எடுத்ததை நிலா பாப்பா அமிர்தாவிடம் போட்டுக் கொடுக்கிறார்.

திருமணத்தை நடத்திய பாக்கியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் இந்த வாரத்தில் அதிகமான விறுவிறுப்பான எபிசோடுகள் வந்தன. பாக்கியா, எழில் மற்றும் அமிர்தாவின் திருமணத்தை கடைசி நேரத்தில் அனைவருடையே எதிர்ப்பையும் மீறி நடத்தி முடித்திருக்கிறார். இப்ப வரைக்கும் இனி நான் அமிர்தா மற்றும் எழிலோடு பேச மாட்டேன் என்று ஈஸ்வரி வீராப்போடு பேசிக் கொண்டிருக்கிறார்.

நிலாவுக்கு தாத்தா கோபி
அமிர்தா இனி நிலா பாப்பாவை தன்னோடு வைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று கோபியின் வீட்டிற்கு இனியா நிலாவை தூக்கிக் கொண்டு சென்றதார். அங்கே நிலாவுக்கு நான் அத்தை அப்போ நீங்க தாத்தா ஆகிட்டீங்க அப்பா என்று கோபி இடம் இனியா கூற, கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு அப்படி எல்லாம் கூப்பிட வேண்டாம். நான் தாத்தா எல்லாம் ஆகவில்லை என்று அவர் சொல்ல, அதற்கு அது எப்படி முடியும் உறவுமுறை சரியாக தான் இருக்க வேண்டும் என்று ராமமூர்த்தி கூறுகிறார்.

கோபியின் அக்ரிமெண்ட்
அடுத்தடுத்து சீரியலில் பரபரப்பான பல எபிசோடுகளும் திருப்பங்களும் வந்து இருக்கின்றது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த சீரியல் நடிகர்கள் அனைவரும் ஜாலியாக என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கின்றனர். சீரியலில் கோபி தனக்கு 20 லட்சம் இன்னும் வேண்டும் அப்படி என்றால் தான் வீட்டை தன்னுடைய அப்பா அல்லது அம்மாவின் பேரில் எழுதி தருவேன் என்று கூறி இருக்கிறார். அதற்கு பாக்கியாவும் நான் அதை தருகிறேன் என்று இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.

போட்டுக் கொடுத்த நிலா
இந்த நிலையில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிர்தா மற்றும் பாக்யா டான்ஸ் ஆடும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நாங்க இனி என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தோடு இருக்கிறோம். ஆனால் நீங்க இங்க ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்களா? என்று கேள்வி கேட்க, இன்னொரு பக்கத்தில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா எப்போதும் போல வீடியோ எடுத்திருக்கிறார். அதில் எழில் மடியில் நிலா பாப்பா அமர்ந்திருக்கிறார். திடீரென தன்னை வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சியான நிலா, அமிர்தாவை பார்த்து அம்மா இங்க பாரு!? என்று போட்டுக் கொடுக்கிறார். இந்த க்யூட்டான வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நிலா பாப்பாவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக தொடங்கி விட்டனர்.

நிலா பாப்பாவிற்கு ரசிகர்கள்
குறிப்பாக எழில் எங்கேஜ்மென்ட் போது அமிர்தா அந்த மண்டபத்திற்கு வந்தபோது அமிர்தா அழுததை பார்த்து கண்ணை துடைத்து விட்டது, பிறகு ஈஸ்வரி பாட்டி திட்டும்போது அமிர்தா அழும்போது நிஜமாகத்தான் அமிர்தா அழுகிறார் என்று அவருடைய கண்ணீரை துடைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தது போன்றவை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், தற்போது நிலா பாப்பா போட்டு கொடுத்த வீடியோவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications