Robo Shankar: அப்பா இடத்தில் இனி நான்! ரோபோ சங்கர் பெயரில் இந்திரஜா தொடங்கிய நிறுவனம்! உருக்கமான பேச்சு
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரையில் பலருக்கும் ஃபேவரைட் ஆக இருந்த ரோபோ சங்கரின் மறைவு சில மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் இப்போதும் அவரை மிஸ் பண்ணுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவருடைய காமெடியை பார்த்து ரசித்தவர்களே மிஸ் பண்ணுகிறார்கள் என்றால் அவருடைய குடும்பத்தை சொல்லவா வேண்டும்? ஆனாலும் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து இப்போது ரோபோ சங்கரின் ஒரே மகள் எடுத்திருக்கும் முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மனிதனுக்கு சுய கட்டுப்பாடு ரொம்பவும் முக்கியம் என்று ஒரு சிலருடைய மரணம் நமக்கு உணர்த்துகிறது. அதுபோலத்தான் கடந்த சில மாதங்களுக்கும் முன்பு இறந்த ரோபோ சங்கரின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ரோபோ சங்கர் அடி மட்டத்திலிருந்து படிப்படியாக முன்னேறி புகழின் உச்சத்துக்கு வந்தார். ஆனால் உச்சத்தில் இருக்கும்போதே அவருக்கு எதிர்பாராத மரணம் வந்துவிட்டது.

அவர் மரணம் அடைவதற்கு ஒரு வருடங்களுக்கு முன்பே அவருக்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டது. அப்போது கூட அவருடைய நிலைமை இனி அவ்வளவுதான் என்று பலர் பேசி வந்த நிலையில் மரணத்தை வென்று பழைய நிலைமைக்கு வந்தார். அந்த நேரத்தில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது, தான் பட்டபாடு போதும் என்று அந்த போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்து கொண்டிருந்தார்.
அதற்கு பிறகு அவர் தொடர்ந்து சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே சூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்ததால் ஹாஸ்பிடலில் சேர்த்த போது அங்கு காலமாகிவிட்டார். அது அவருடைய குடும்பத்தினரை அதிகமாக அதிர்ச்சி அடைய வைத்தது. ரோபோ சங்கர் சினிமாக்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துபவர். தன்னுடைய மகள் கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்தியது கூட பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது.
மகள் கல்யாணத்திற்கு பிறகு குடும்பத்தோடு உட்கார்ந்து சில youtube சேனல்களில் தங்களுடைய குடும்ப கதை, தான் வளர்ந்து வந்த விதம் போன்றவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அதோடு தன்னை பற்றிய நெகட்டிவை எப்படி கடந்து வருகிறேன் என்றும் கூட பாசிட்டிவாக பேசிக் கொண்டிருந்தார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் அடியெடுத்து வைத்து ஒரு நிலைமைக்கு வந்த நேரத்தில் ரோபோ சங்கர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து இருக்கிறார்.
ரோபோ சங்கரின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக இப்போது அவருடைய மகள், மருமகன் மற்றும் மனைவி இணைந்து ரோபோ சங்கர் பெயரில் "ரோபோ எவென்ட் அண்ட் என்டர்டைன்மென்ட்" என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் சார்பாக பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் 3 பக்தி பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.
அந்த பாடலை ரோபோ சங்கரின் மருமகன் தான் எழுதி இருக்கிறாராம். இது குறித்து இந்திரஜா பேசும்போது அப்பா விட்டு சென்ற இடத்தில் இன்று நான் பயணத்தை தொடங்குகிறேன். அப்பாவுடைய ஆசை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது. இப்ப கூட எங்க அப்பா சாமிகிட்ட போய்ட்டாங்க என்பதை ஏற்றுக் கொள்ள முடியல. அவர் ஏதோ ஒரு ஊர்ல இருக்கிறாரு நம்மை வழி நடத்துகிறார் என்று தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கிறோம்.
அப்பா எங்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பா இருந்தாரோ அதே போல என்னுடைய மாமா இப்போ குடும்பத்திற்காக இருக்கிறார். அவர் பாடல் எழுதி இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நாங்க குடும்பமாக காசிக்கு போகணும்னு ரொம்ப யோசிச்சுட்டு இருந்தோம். ஆனா அப்பாவை ஒரு குடுவையில் கொண்டு போய் காசியில் கரைப்பேன்னு கனவுல கூட நினைக்கல.
என்னதான் வருத்தம் இருந்தாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். எப்போதும் போல நீங்க எல்லாரும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.. என்னதான் ரோபோ சங்கர் குடும்பத்தை பற்றி பல சர்ச்சைகளும், ட்ரோல்களும் பரவி வந்தாலும் இப்போது அவருடைய மகள் எடுத்திருக்கும் முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications