கடைசி நொடி வரை ரோபோ சங்கர் அதை மறக்கலயே.. "மீசையோட வாங்கண்ணே".. அற்புத நடிப்பு கலைஞன் ரோபோவின் மனசு
சென்னை: தனக்கு பின் ஒரு குடும்பம் நம்மை நம்பி இருக்கிறது என்று நினைத்தால் போதை பழக்கத்திலிருந்து ஈசியாக வெளிவந்து விடலாம்... அதனால் தயவு செய்து கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம். என்னுடைய நிலைமையை பார்த்த பின்பாவது எல்லோரும் நல்வழியை பின்பற்றுங்கள்" என்று பிறருக்கு சமீபத்தில்கூட ரசிகர்களுக்கு கூறியிருந்தார் ரோபோ சங்கர்.. கடினமான சூழலில் இருந்து வந்திருந்ததால், தன்னை போலவே பாதிக்கப்பட்ட பல கலைஞர்களுக்கு உதவியவர் ரோபோ சங்கர்.
ஆறு மாதமாக சாவின் விளிம்பு வரை சென்று அதனுடைய கஷ்டங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்து இருக்கிறேன். அதனால் எல்லா கெட்ட பழக்கங்களையும் தற்போது அறவே விட்டுவிட்டு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, முறையான உடற்பயிற்சி மற்றும் நல்ல நண்பர்களை என் அருகில் வைத்துக் கொண்டு என் உடம்பை தேற்றி இருக்கிறேன்.

அத்துடன் எப்பொழுதும் சிரித்துக் கொண்டு சந்தோசமாக இருங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
மறக்க முடியாத கலைஞன்
46 வயதில் நம்மை விட்டு பிரிந்துள்ளார் ரோபோ சங்கர்.. பெயரே வித்தியாசமாக இருந்ததால், டிவிகளில் தலைகாட்ட துவங்கியதிலிருந்தே மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
எத்தனையோ பேர் மிமிக்ரி செய்தாலும், இதில் அச்சு பிசறாமல் பல கலைஞர்களை தன்னுடைய குரல் மூலம் கண் முன் நிறுத்தியவர் ரோபோ.. அதிலும், சுட்டி அரவிந்தும் ரோபோ சங்கரும் அன்று செய்த காமெடிகள்தான், மக்களை திரும்பி பார்க்க வைக்க துவங்கியது. ஸ்டாண்ட் - அப் காமெடி, மிமிக்ரி செய்து, மெல்ல மெல்ல சினிமாவிலும் வாய்ப்பை பெற்றார்.
ஆரம்ப காலத்தில் தனக்கு உதவியவர்களை என்றும் நினைவில் வைத்திருப்பவர் ரோபோ.. கொரோனா நேரத்தில் நிகழ்ச்சி எதுவும் கிடைக்காமல், ரோபோவின் குடும்பம் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பது.. அப்போது, மனதளவிலும் சக மனிதராகவும் உறுதுணையாக ரோபோவுக்கு இருந்தது நடிகர் தனுஷ் தானாம்.. பண ரீதியாக மிகப்பெரிய உதவியாக இருந்துள்ளார் தனுஷ்..
எனக்கு சாப்பாடு கிடைக்காது
அதனால்தான் ஒரு விழாவில் ரோபோ பேசும்போது, "தனுஷ் சார் என்னுடைய வாழ்க்கையில் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். அவர் செய்த உதவியை மறந்தேன் என்றால் எனக்கு சாப்பாடு கூட கூட கிடைக்காது. என்னுடைய பல இக்கட்டான சூழ்நிலைகளில் தனுஷ் எனக்கு உதவியிருக்கிறார்" என்று கலங்கி சொல்லியிருந்தார்.
ஒருகட்டத்தில் வசதி வாய்ப்புகள் வரவும், தன்னை போலவே பாதிக்கப்பட்ட பலருக்கும் ரோபோ உதவி செய்தார்.. குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் சிகிச்சை பெற்று வரும் போட்டோ ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.
மீசையை பார்க்கணும்னே
இதைப்பார்த்து பதறிப்போன ரோபோ சங்கர், மதுரை மருத்துவமனைக்கு நேரிலேயே கிளம்பி சென்று தவசியை சந்தித்து பேசினார்.. நிதி உதவியை வழங்கினார். "அந்த மீசையை நாங்க மறுபடியும் பார்க்கணும் சரியா? தைரியமாக இருக்கணும்" என்று ரோபோ சங்கர் தவசியிடம் தெரிவித்தார்.
அதேபோல, அங்காடி தெரு நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டபோது, அவருக்கும் ரோபோ சங்கர் உதவி செய்தார்.. அக்காவின் இழப்பு எங்களுக்கு இரண்டு பாடங்களை கற்று தந்துள்ளது.. ஒன்று நம்முடைய உடலை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னொன்று, நாம் சேமித்ததற்கு பிறகுதான் பிறருக்கு உதவி செய்யணும்" என்று கலங்கி கூறியிருந்தார்,.
சிங்கப்பூர் சலூன் - நானே வர்றேன்
சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முடி திருத்தும் கதை களத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக வரும் ஆர்ஜே பாலாஜிக்கு சகலையாக இதில் ரோபோ சங்கர் நடித்திருப்பார். முடி திருத்தகம் வைக்கத் துடிக்கும் சகலைக்கு சகல வழிகளிலும் உதவியாக, உறுதுணையாக இருப்பார் ரோபா சங்கர். அவரது கேரக்டரும் வெகுவாகப் பேசப்பட்டது.
சிங்கப்பூர் சலூன் படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார் ரோபோ சங்கர்.. அப்போது முடி திருத்தும் தொழிலாளர்கள் அவரை நேரில் சந்திக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்..
சலூனில் ரோபோ
இதை கேள்விப்பட்ட ரோபோ சங்கர், தன்னை சந்திக்க ஆசைப்பட்ட தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் தானே நேரில் சென்று அவர்களைப் பார்த்தார். அவர்கள் வேலை செய்யும் சலூனிற்கு சென்று அவர்களை பாராட்டி, ஊக்கத்தொகையும் வழங்கினார்.
அதுமட்டுமல்ல, முடி திருத்தும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக, சங்கராபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியில், இப்பகுதியில் உள்ள நலிவடைந்த முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய போகிறேன் என்றும் கூறியிருந்தார்.. தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை பிறருக்கு ரோபோ சங்கர் செய்தி உதவிகள் ஏராளம்...!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications