Robo Shankar: அத்தனை சர்ச்சைகளுக்கும் ரோபோ சங்கர் கொடுத்த ஒரே பதில்! கடைசியில் நிலமை இப்படி ஆகிவிட்டதே!
சென்னை: தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையாலும், மிமிக்ரி திறமையாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கலைஞர்கள், மற்றும் ஒட்டுமொத்த ரசிகர் சமூகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த ரோபோ சங்கர்
மதுரையைச் சேர்ந்த சங்கர், தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் குரல் மாடுலேஷன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆரம்பத்தில் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு நடனமாடியதால், ரோபோ சங்கர் என்றே அழைக்கப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? போன்ற பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் இவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தன. பின்னர், சினிமா வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கிய மாரி திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. அதன் பிறகு, அவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார். லயன் கிங் போன்ற திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தது, குழந்தைகளுக்கும் பிடித்தமானதாக இருந்தது.
சர்ச்சைகளும், உடல்நலப் போராட்டங்களும்
சமீபகாலமாக, ரோபோ சங்கர் பல சர்ச்சைகளிலும், உடல்நலப் பிரச்சனைகளிலும் சிக்கினார். சட்டவிரோதமாகக் கிளி வளர்த்ததால், வனத்துறையினரால் எச்சரிக்கப்பட்டார். பின்னர், மன்னிப்பு கோரி அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
2023-ல் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது உடல் எடை வெகுவாகக் குறைந்தது. இந்த நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அவர், தனது அனுபவங்களைப் பற்றிப் பேசியது பலருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.
இதுபோல ரோபோ சங்கர் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார். அந்த நேரத்தில் அம்பானி வீட்டு திருமணமும் நடைபெற்றது. அதேபோல இவரும் பிரம்மாண்டமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் அழைத்து திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார். அந்த நேரத்தில் ரோபோ சங்கரின் செயல் பெரிதாக பேசப்பட்டது. அப்போது கூட நான் கஷ்டப்பட்டு உழைத்த சம்பாத்தியத்தில் தான் என்னுடைய மகளின் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் யாரையும் ஏமாற்றி நான் பணம் சம்பாதிக்கவில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ரோபோ சங்கரின் பேரன் பிறந்த நூறாவது நாளை கூட வெகு விமர்சனமாக கொண்டாடி போட்டோ சூட் எல்லாம் எடுத்திருந்தார்கள். அப்போதும் காசு பணம் வந்து விட்டதால் ரோபோ சங்கர் ரொம்பவும் ஆடுகிறார் என்ற சிலர் வயிற்று எரிச்சலில் கமெண்ட் கொடுத்தனர். அதற்கும் ரோபோ சங்கர் கண்டுகொள்ளவில்லை. தன்னைப் பற்றிய நெகட்டிவ் கமெண்ட்களைத்தான் கண்டுகொள்ள போவதே கிடையாது, நெகடிவ் கமெண்ட் போடுறவன் போட்டுக் கொண்டே தான் இருப்பான். நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டே இருப்பேன் அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.

கடந்த வாரத்தில் ரோபோ சங்கரின் மகள் ஒரு கோவிலுக்கு பிரமோஷன் வீடியோ வெளியிட்டு இருந்தார். இது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். அப்போது கூட ரோபோ சங்கரின் மகள் கடவுளுக்கு பிரமோஷன் செய்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என்று சிலர் கமெண்ட் கொடுக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "நேரம் சரியில்லன்னா எவன்னு தெரியாதவன் எல்லாம் ஏதாவது பேசிட்டு தான் இருப்பான்" என்று பதில் கொடுத்து இருந்தார். இப்படி பல சர்ச்சைகளை தாண்டி இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தன்னுடைய சிரிப்பால் பதில் கொடுத்த ரோபோ சங்கர் இன்று அவருடைய குடும்பத்தை அழ வைத்துவிட்டு இந்த உலகத்தை விட்டு பிரிந்திருக்கிறார்.
மனமுடைந்த நண்பர்கள்
சமீபத்தில், ஒரு படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்தச் சூழலில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications