எந்த கணவரும் செய்யாததை துணிந்து செய்த ரோபோ சங்கர் மருமகன்.. இப்படியும் யோசிப்பாங்களா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது. திருமணத்திற்கு பிறகு இந்திரஜா அவருடைய கணவரோடு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் இந்திரஜாவிற்காக அவருடைய கணவர் செய்த செயல் பற்றி பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ரோபோ சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமடைந்திருந்த நிலையில் இப்போது வெள்ளி திரையிலும் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். குணசித்திர வேடங்களிலும் காமெடி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய ஒரே மகள் இந்திரஜாவும் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்திரஜா நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் பிகில் படத்திற்கு பிறகு பெரிய அளவில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் கெஸ்டாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் இந்திராஜாவிற்கு அவருடைய மாமா கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது.
ரோபோ சங்கர் குடும்பம் இணையத்தில் பல வருடங்களாகவே அதிகமாக பேசப்படும் நிலையில் தான் இருந்து வருகிறது. கடந்த வருடத்தில் ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த கிளியால் ரோபோ சங்கருக்கு போலீஸ் பைன் போடப்பட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்தார். அப்போது கூட ரோபோ சங்கரின் நிலைமை இனி அவ்வளவுதான் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனாலும் ரோபோசங்கர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு இப்போது வந்து விட்டார். இந்த நிலையில் தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக ரோபோ சங்கர் நடத்தி இருந்த நிலையில் அது குறித்தும் பலர் விமர்சித்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத ரோபோ சங்கர் குடும்பம் அடுத்தடுத்த தங்களுடைய பயணத்தை தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு இந்திரஜா தன்னுடைய கணவர் கார்த்திக் உடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருக்கும்போது தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் தன்னுடைய மனைவி இந்திரஜாவிற்காக தான் செய்த செயல் குறித்து பேசியது தான் இப்போது மீண்டும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
அதில் நான் இந்திரஜாவை காதலிக்க தொடங்கிய போது அவர் என்னைவிட குண்டாக இருந்தார். அப்போது நான் 60 கிலோவில் இருந்தேன். ஆனால் இந்திரஜா என்னுடைய காதலை ஏற்றுக் கொண்ட பிறகு அவர் என்னைவிட குண்டாக இருக்கிறார் என்று யாரும் அவரை தப்பாக பேசி விடக்கூடாது என்பதற்காக நானும் உடல் எடையை கூட்டி இருந்தேன்.
இப்போது 120 கிலோ மாறி இருக்கிறேன். இருவரும் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நான் என்னுடைய மனைவிக்காக தான் உடல் எடையை கூட்டினேன் என்று பேசியிருந்த நிலையில் இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications