நீங்க பிசைங்க சார்.. நானும் கத்துக்கறேன்.. மாவிலும் ரொமான்ஸை மிக்ஸ் பண்ணிட்டீங்களே எஜமான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Roja Serial:நதியா என்ட்ரி...களை கட்டிய ரோஜா சீரியல்..இன்னைக்கு என்ன தெரியுமா

    சென்னை: சன் டிவியில் ரோஜா இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானாலும் ஒளிபரப்பாச்சு... நதியாவைப் பார்க்கறேன்னு குடும்பத்து ஆண்களே ஹாலில்தான் இருக்காங்க..

    பெண்கள் மட்டுமென்ன, அவங்களும் நதியா நதியான்னு உடார்ந்துடறாங்க. ரோஜா, அர்ஜுன் ரெண்டு பேரும் ஒரு வருஷ கான்டராக்ட்ல கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு கேள்விப்பட்டு, ரோஜாவிடம் நதியா விசாரிக்கறாங்க.

    அக்கினி சாட்சியா நாள் நட்சத்திரம் பார்த்து கோயில்ல ஐயர் முன்னாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் மேடம். இது போதாதுன்னு ரிஜிஸ்டர் மேரேஜும் பண்ணிக்கிட்டோம்னு நதியாகிட்ட வீடியோ பிளே பண்ணி காமிக்கறா ரோஜா.

    கையால

    கையால

    எப்பவும் பொறந்த நாளன்னிக்கு ரோஜா சமையலைத்தான் சாப்பிடுவேன்... இன்னிக்கு உங்க வீட்ல ரோஜா கையால சமைச்சு சாப்பிட போறேன்னு நதியா சொல்றாங்க.

    நான் சமைக்கறேன்

    நான் சமைக்கறேன்

    அதென்ன ரோஜா சமைச்சாதான் நல்ல இருக்குமா, இதோ நான் சமைக்கறேன்க்கா.. என் சமையலை சாப்பிட்டு, கல்பனா.. கல்பனான்னு சொல்ல போறாங்க பாருங்கன்னு மாமியார் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே மருமக ரோஜா வர்றா.

    [என்ன செய்தார் உங்கள் எம்.பி.]

    நதியா மேடம்க்கு

    நதியா மேடம்க்கு

    ரோஜா.. நதியா மேடம் என்னென்ன விரும்பி சாப்பிடுவாங்கன்னு சொன்னா சமைக்கலாம் ரோஜான்னு மாமியார் கேட்கறாங்க. நதியா மேடம்க்கு சப்பாத்தி டால் மதியம் கூட இருக்கணும். அதுவும் ரொம்ப சாஃப்டா இருக்கணும். இல்லேன்னா சாப்பிடவே மாட்டாங்கன்னு சொல்ல, வேலைக்காரி சுமதி சிரிக்கறாங்க. கல்பனா அம்மா சப்பாத்தி செய்தா வறட்டி மாதிரி இருக்கும்னு சொல்லிட்டு.

    சப்பாத்தி

    சப்பாத்தி

    அர்ஜுன் மாவு பிசைஞ்சா சப்பாத்தி மிருதுவா இருக்கும் என்று கல்பனா சொல்லும்போதே அங்கு அர்ஜுன் வர, அர்ஜுன் இங்க வாயேன்.. சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு குடுடான்னு கேட்கறாங்க. என்ன அத்தே ... சார் கிரிமினல் லாயர் அவரைப் போயி மாவு பிசைய சொல்றீங்கன்னு கிண்டல் செய்யறா ரோஜா.

    இது ஒரு பக்கம்..

    இது ஒரு பக்கம்..

    கிரிமினல் லாயரா இருந்தா என்ன, அது ஒரு பக்கம், இது ஒரு பக்கம்...நீ பிசைஞ்சு குடுடா அர்ஜுன்னு சொல்றாங்க. சார் பிசைங்க சார் நானும் கத்துக்கறேன்னு ரோஜா சொல்றா.

    ரோஜா வா

    ரோஜா வா

    சரிம்மா மாவை எடுத்துட்டு வாங்க, . வா ரோஜான்னு கூப்பிடறான். டேபிளில் அம்மா ஒரு கிண்ணத்தில் மாவை வைக்க, ரோஜா வான்னு கூப்பிடறான். அவள் வந்து நிற்க, இப்படியே நின்னா எப்படி, முன்னாடி வந்து நில்லுன்னு சொல்லி, தன் முன்னால் நிற்க வைக்கிறான்.

    அர்ஜுன் நெஞ்சில்

    அர்ஜுன் நெஞ்சில்

    இப்போது அர்ஜுன் நெஞ்சில் ரோஜா முதுகு படற மாதிரி நிற்கிறாள். முதலில் ரோஜாவை மாவில் கை வைக்க சொல்றான் அர்ஜுன். அவள் இரு கைகளையும் மாவில் வைக்க, இவன் அவள் கைமேல் தனது இரு கைகளையும் வைத்து, இருவருமாக மாவு பிசைகிறார்கள், ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தபடி.

    அர்ஜுன் தம்பி

    அர்ஜுன் தம்பி

    கல்பனா அம்மா அர்ஜுன் தம்பி வழக்கமா தன் வேலையை ஆரம்பிச்சுட்டாரு... அவங்க எப்போ மாவு பிசையறாங்களோ பிசையட்டும்.. வாங்க போலாம்னு சொல்ல இருவரும் சிரிச்சுகிட்டே வெளியில போறாங்க.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+