Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Roja: குஷ்பூவுக்கு போட்டி! ஜெயலலிதா அழைத்தும் தமிழ்நாட்டு அரசியலுக்கு மறுத்த ரோஜா! காரணம் இதுதானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் 90ஸ்களின் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரோஜா, தற்போது ஆந்திர அரசியலில் கோலோச்சி வருகிறார். தனதுத் தனித்துவமானப் புன்னகை மற்றும் துணிச்சலான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ரோஜா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழ்நாட்டு அரசியலுக்கு வராததற்கானக் காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Roja Jayalalithaa Khushbu

நவரச நடிகை ரோஜா

ரோஜா 1992-ஆம் ஆண்டுப் பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், அர்ஜூன், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், பிரபுதேவா போன்றப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி போன்றோருடனும் ஜோடி சேர்ந்து தென்னிந்திய மொழிகளில் தன் முத்திரையைப் பதித்தார்.

ஹிட் பாடல்

நடிகர் விஜய்யுடன் ரோஜா ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், விஜய்யின் "தங்க நிறத்துக்குத் தான் தமிழ்நாட்டை எழுதிக் கொடுக்கவா" என்ற ஹிட் பாடலுக்கு ரோஜா நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் இன்றும் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இருக்கிறது. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் நீங்களும் ஆகலாம் மகாலட்சுமி, லக்கா கிக்கா போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிப் பிரபலமானார்.

சினிமாவிலிருந்து விலகியக் காரணம்

திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யுடன் காவலன் திரைப்படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்தப் பிறகு, ரோஜா சில காலம் சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் போது, "நீங்க எங்களுக்கு எப்பவுமே ஃபேவரிட் ஹீரோயினி ஏன் அம்மாவாக நடிக்கிறீர்கள்?" என்று நடிகர் விஜய் அவரிடம் கேட்டிருக்கிறார். அதேபோன்று தெலுங்குப் பட ஹீரோவும் கேட்டதால், ரோஜா சினிமாவிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாகக் அவரே பேட்டிகளில் பேசியிருக்கிறார்

ஜெயலலிதாவின் அழைப்பு

ரோஜா தனது முதல் பட இயக்குநர் ஆர். கே. செல்வமணியைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, ஆந்திர பிரதேச அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் அப்ப அவரிடம் நீங்கள் ஏன் தமிழ்நாட்டு அரசுகளுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோஜா "நான் ஆந்திராவிற்கு வேண்டும் என்றே செல்லவில்லை. என் அப்பாவின் நண்பருக்காகப் பிரச்சாரம் செய்யப் போனேன். அப்படிச் சென்றுவிட்டது" என்று தனது அரசியல் என்ட்ரி பற்றித் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா இருந்தபோது, ஒரு சமயம் ரோஜாவை தமிழ்நாட்டு அரசியலுக்கு அழைத்திருக்கிறார். அது, குஷ்பு அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்குச் சென்ற நேரம். அப்போது, "தமிழ்நாடு அரசியலுக்கு வருகிறீர்களா?" என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் அழைப்பு வந்தபோது, ரோஜாவின் கணவர் ஆர். கே. செல்வமணி அவருக்குக் கொடுத்த அட்வைஸ் தான் ரோஜா தமிழ்நாட்டு அரசியலுக்கு வராமல் போனதற்குக் காரணம்:

செல்வமணியின் பேச்சு

"அப்போது என் கணவர் செல்வமணி சொன்னார், 'அங்கே இங்கே சுற்ற வேண்டாம். ஆந்திராவில் கடினமாக உழைத்து ஜெயிச்சுக் காட்டு. ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தால், அங்குத் தோற்றுவிட்டு இங்க வந்துவிட்டாய் என்று சொல்வார்கள். அதனால், ஆந்திராவில் ஜெயிச்சுட்டு இங்கு வா'" என்று கூறியதாக ரோஜா மனம் திறந்துள்ளார். கணவரின் அறிவுரையைக் கேட்டு ஆந்திராவில் தீவிரமாக உழைத்த ரோஜா, இன்று அங்குத் தனது அரசியல் முத்திரையைப் பதித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரோஜா மீண்டும் தமிழில் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். சமீபத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ்}$ தயாரிப்பில் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தில், கங்கை அமரனுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.
லெனின் பாண்டியன் படம் குறித்துப் பேசிய ரோஜா, "நான் நடிப்பதால் இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ டேக்பிரச்சினை வரக் கூடாது என்று நடிப்பதை விட்டுவிட்டேன். ஆனால்,லெனின் பாண்டியன் கதையைக் கேட்டபோது அது ரொம்ப HEART TOUCHING ஆக இருந்தது" என்றும், "நானும் இன்னொரு ரவுண்டு வர ரசிகர்கள்உதவி பண்ணுவார்கள்" என்றும் நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+