ரோஜா சீரியல் நடிகருக்கு ஆண் உறுப்பு நீக்கம்! கண்ணீரோடு வேண்டுகோள்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி என்பவர் தமிழக அரசால் சமீபத்தில் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
ஒரே உடம்பில் ஆண் ஆகவும் பெண்ணாகவும் வேதனையை சுமந்து கொண்டிருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஆணுறுப்பில் விந்துவும் மாதவிடாயும் வெளியேற இப்போது ஆணுறுப்பை அகற்றி ஆப்ரேஷன் செய்திருக்கும் நிலையில் மக்களிடம் சில வேண்டுகோள் வைத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஆயிரத்தில் ஒருவருக்கு தான் ஒரு சில பிரச்சனைகள் அரிதாக காணப்படும். அந்த மாதிரி ஒரு நபர்தான் நடிகர் சக்கரவர்த்தி. இவர் சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
ஆனால் பத்தரை வயதாக இருக்கும் போதே சக்கரவர்த்தியின் உடலில் மாற்றம் வர தொடங்கி இருக்கிறது. அவருடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. அதை தன்னுடைய அம்மாவிடம் சொன்ன சக்கரவர்த்திக்கு அவருடைய அம்மா ஏதாவது அடிபட்டு இருக்கும் என்று சொல்லி ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால் பிறகு அது தொடர்ந்து கொண்டிருந்ததால் மருத்துவரிடம் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது மருத்துவர் அவரை செக் பண்ணி பார்த்துவிட்டு உங்களுக்கு கர்ப்பபை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதனால் பெண்ணாகத்தான் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொல்லி அனுப்பி இருக்கின்றனர். பிறகு சில வருடங்கள் கழித்து அவருடைய ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியாகியிருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருக்கு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும் விஷயமே தெரிந்திருக்கிறது. இதை தெரிந்து கொண்ட இவருடைய பள்ளியில் படிக்கும் நண்பர்கள் கூட பலர் இவரிடம் தப்பாக நடப்பதற்கு முயற்சி செய்து கிண்டல் செய்து அவமானப்படுத்தி இருக்கின்றனர்.
இந்த நிலையில் சக்கரவர்த்தியின் அம்மா உனக்கு திருமணம் செய்து வைத்தாலும் அது சரிப்பட்டு வராது ஒரு ஆணை திருமணம் செய்தாலும் அதுவும் முடியாது. பெண்ணையும் திருமணம் செய்ய முடியாது என்று அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து யோசித்துக் கூறியிருக்கிறார். பிறகு ஒவ்வொரு மாதமும் ஆணுறுப்பின் வழியாகவே சிறுநீரும் வெளியே வருகிறது. அதே வழியாக மாதவிடாயும் வெளியேறுவதால் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் கர்ப்பபையை ஆபரேஷன் செய்து எடுத்து இருக்கின்றனர்.
ஆனாலும் அதைத் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று இவருடைய ஆணுறுப்பை ஆப்ரேஷன் செய்து அகற்றி விட்டார்களாம். அதற்குப் பிறகு பல வருடங்களாக வேதனையை அனுபவித்து வந்த சக்கரவர்த்தி தன்னைப் போல இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். பல பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். இதனால் இவருக்கு நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாம்.

இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு இப்போது மீண்டும் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் தனக்கு ஆரம்பத்தில் இருந்தே பல உடல்நிலை பிரச்சனைகள் வந்திருந்தாலும் 38 வயதில் தான் நான் இடை பாலினத்தவர் என்று சொல்லப்படும் நபர் என்பது தெரிய வந்தது. அதுவும் ஒரு நபரை நான் பேட்டி எடுத்துக் கொண்டே இருக்கும் போது அவர் சொன்ன சில தகவல்கள் எனக்கு பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது.
அதற்குப் பிறகு தன்னுடைய உணர்வுகள் ஏன் இப்படி இருக்கிறது? எதனால் தன்னுடைய என்னுடைய உடம்புக்குள் இப்படி மாற்றம் ஏற்படுகிறது என்பதை இன்டர்நெட்டில் சர்ச் செய்து தெரிந்து கொண்டேன். ஆனால் இதை நான் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டிருந்தால் நானும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். அதனால் யாரும் உடலில் சிறு பிரச்சனை என்றாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.
அதோடு எனக்கு இப்போது ஆணுறுப்பு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டிருக்கிறது. அதனால் பல இன்னல்கள் இருக்கிறது. ஆனாலும் 99% சக்சஸ் ஆகிவிட்டது. இன்னும் இருக்கும் நாட்களையும் நல்லபடியாக வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் என்னைப்போல பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.
அவர்களுக்கான விழிப்புணர்வை நான் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். நான் தொடர்ச்சியாக ஆபரேஷன்கள் செய்து கொண்டிருக்கும் போது என்னுடைய தலை முடி, தாடி, மீசை எல்லாம் உதிர்ந்து போய்விட்டது. அப்போது நான் வேலை பார்த்த டிவி சேனலில் உன்னை இந்த மாதிரி பார்க்க அருவருப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு நான் டாக்டரிடம் இதைச் சொல்லி இன்ஜெக்ஷன் போட்டு என்னுடைய தாடி மீசையை மீண்டும் வளர வைத்தேன். ஆனால் அதுவும் பெரிய அளவில் நாட்கள் இருக்காது என்று கூறியிருக்கிறார். எப்படியோ இருக்கிற நாளை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன் என இத்தனை வலிகளையும் மனதிற்குள் இருந்தாலும் வெளியே சிரித்த முகமாக சக்கரவர்த்தி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications