உற்சாக ரீல்ஸ் போடும் ரோஜா நாயகி.. தனிமை டூர் கிளம்பிட்டாங்களே! எந்த கோவிலில் என்ன வேண்டுதலோ?
ரோஜா டிவி சீரியல் நாயகி பிரியங்கா நல்கரி இப்போது தனிமையில் டூர் கிளம்பி விட்டார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: எப்போதுமே உற்சாகமாக ரீல்ஸ் பதிவிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வரும் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்கரி தனிமை டூர் கிளம்பி விட்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றாக ரோஜா சீரியல் உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார்.
ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் 'அந்தாரி பந்துவையா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். இதன்பிறகு, நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து 'மேகமாலா' மற்றும் 'ஸ்ரவனா சமீராலு' ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார்.

நல்ல மருமகள்
தற்போது, ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். நமக்கு இப்படி ஒரு மருமகள் அமையமாட்டாளா என்று பல இல்லத்தரசிகள் விரும்பும் அளவிற்கு நடித்து வருகிறார் பிரியங்கா நல்கரி.

ரீல்ஸ்க்கு ரசிகர்கள் அதிகம்
ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்துள்ளார் பிரியங்கா. இவர் தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்தில் நடிகை ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார். பிறகு காஞ்சனா-3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் ரீல்ஸ்களை பல லட்சம் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ரோஜா ரீல்ஸ்
ரோஜா சீரியலில் பாசமான மருமகளாக பாந்தமான புடவையில் கலக்கலாக நடித்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுப்பார். சமீபத்தில் கலக்கலான மாடர்ன் உடை அணிந்து அவரது அம்மா உடன் நடனமாடி அதை ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்

ரீல்ஸ் 50 மில்லியன் வியூஸ்
பிரியங்கா பதிவிட்ட ரீல்ஸ் ஒன்று 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாம். இதனை மகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு அதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தன்னை வீடியோ எடுத்து பதிவிடும் சகோதரிக்கும் நன்றி கூறியுள்ளார் பிரியங்கா.

அமைதிக்காக தனிமை டூர்
சீரியலில் பிஸியாக நடித்தாலும் அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு ஆன்மீக டூர் கிளம்பிவிடுவார் பிரியங்கா. சமீபத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கும் சீரடி சாய்பாபா கோவிலுக்கும் சென்று வந்தார். இதோ இப்போது வெகேசன் டைம் அமைதிக்காக தனியாக டூர் செல்வதாக புகைப்படம் பதிவிட்டுள்ளார் பிரியங்கா. ஆனால் எங்கு செல்கிறேன் என்று தெரிவிக்கவில்லை. ரசிகர்களும் அந்த புகைப்படத்திற்கு இதயங்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications