Roja Serial: ஆபத்பாந்தவனாக இருக்கும் அம்மனுக்கு... அநியாயம் செய்தால் தெரியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் எந்த அளவுக்கு ஆபத் பாந்தவனாக அம்மன் இருக்கிறாரோ... அந்த அளவுக்கு ஒரு பெண் அநியாயம் செய்தால் அந்த அம்மனுக்கு தெரியாமலா போய்விடும்?

அணு உலகத்தில் ஒரு பெண் செய்யக் கூடாத அநியாயத்தை எல்லாம் அம்மன் சன்னதி முன் செய்கிறாள். ஆனால், அவள் கொஞ்சமும் மனசாட்சிக்கும் பயப்படலை, அம்மனுக்கும் பயப்படலை.

ஆபத் பாந்தவனாக காக்கும் அந்த அம்மனுக்கு நீதிக்கும், அநியாயத்துக்கு வித்தியாசம் தெரியாமலா போய்விடும்? எப்போதும் அநீதியை ஜெயிக்கவிட்டு வேடிக்கை பார்க்குமா தெய்வம்!

 அணு ரோஜா

அணு ரோஜா

அணு ரோஜா இடத்தில் வந்து தான்தான் அந்த வீட்டுப் பெண் என்று பொய் சொல்லி, வீட்டுக்குள் புகுந்துடறா. அந்த வீட்டு பையன் அர்ஜுனை கல்யாணம் செய்துகொள்ளும் ரோஜா, அந்த வீட்டுப் பெண் என்று நிரூபிக்க போராடுவதுதான் கதை. இந்த கதைதான் கடந்த ஒரு வருடமாக ரோஜா சீரியலில் ஒளிபரப்பாகி வரும் எபிஸோட்ஸ்.

 விதம் விதமான

விதம் விதமான

அண்மைய எபிசோட்களில் சென்று கொண்டு இருக்கும் கதை என்று பார்த்தால், அன்னபூரணி அம்மா குடும்பத்தின் மருமகள் காப்பு யாருக்கு என்பதுதான். அர்ஜுன் என் பொண்டாட்டி ரோஜாவும் இந்த வீட்டு மருமகள்.. அவளுக்குத்தான் காப்பு என்று சொல்ல ...இல்லை என் பேத்தி அணுதான் அஷ்வினை கல்யாணம் செய்துக்க போறவ.அவளுக்குத்தான் காப்புன்னு அன்னபூரணி அம்மா சொல்றாங்க.

 நடிகை லதா வடிவுக்கரசி

நடிகை லதா வடிவுக்கரசி

சீரியலில் பாட்டியாக நடித்து இருக்கும் நடிகை லதா மற்றும் வடிவுக்கரசிக்கும் இந்த காப்பு விஷயம் மரியாதைக்குரிய விஷயமாகிறது. இதனால் ரெண்டு மருமகள்களுக்கும் போட்டி வச்சு யார் ஜெயிக்கறாங்களோ அவங்களுக்கு காப்பு அணிவிப்போம்னு சொல்லிடறாங்க.

 ஆன்மீக போட்டி

ஆன்மீக போட்டி

கைதிகளுக்கு தண்டனை விதம் விதமா யோசிச்சு குடுப்பாய்ங்களே அதே மாதிரி, இந்த ஆன்மீக வழிபாடுகள் செய்யறதுக்கு, விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் விதம் விதமான வழிமுறைகள் கண்டுபிடிச்சு அசத்தறாய்ங்க. இங்கே ரோஜாவுக்கும் அணுவுக்கும் உப்பு மேல முட்டி போடும் போட்டி, அதிகாலை 3 மணிக்கு பச்சை தண்ணியில குளிச்சுட்டு கையில் விளக்கேற்றி எடுத்து அடிப் பிரதட்சணம் செய்து நடந்து வரும் காட்சி என்று பலப்பல காட்சிகள் இருக்குது.

 தீயசக்தியின் உருவம்

தீயசக்தியின் உருவம்

ஒட்டுமொத்த தீய சக்தியின் உருவமாக அணு எல்லா பொய், தகிடுதித்தம் என்று செய்துவிட்டு, கொஞ்சமும் பயம் இல்லாமல் மனசாட்சிக்கு கூட இடம் தராமல் கோயிலில் நேர்த்திக்கடன் செய்ய நிற்கிறாள், இது தெய்வ கணக்கில் சேர்த்தி இல்லையா? ஒரு பெண் நெஞ்சில் துளிகூட பயம் இல்லாமலா தெய்வ காரியங்களை செய்வாள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+