இமைகளை பிரிச்சு.. உதடு குவிச்சு.. ஆஹா, தூசு எடுப்பதில் இத்தனை ரொமான்ஸா.. இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்காச்சும் தூசு எடுப்பதில் ரொமான்ஸ் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா.. இருக்குங்க.. அதிலயும் இருக்கே..

சினிமாவில் மட்டுமில்லிங்க, இப்பெல்லாம் டிவி தொடர்களிலும் கூட ரொமான்ஸ் களை கட்டுது.. நெளிய வைக்குது. இது ரோஜா சீரியலில் வந்த ஒரு காதல் ரொமான்ஸ் குறித்த கட்டுரை.

அர்ஜுன்-ரோஜா நிஜமான தம்பதி இல்லை, குடும்பத்துல இருப்பவங்களை நம்ப வைக்க புருஷன் பொண்டாட்டியா நடிக்கறாங்க.
குடும்பத்துலயும் அவங்களை அப்படி தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. அவங்களை புருஷன் பொண்டாட்டி மாதிரியே ட்ரீட் பண்றாங்க.

அர்ஜுன் வக்கீல்என்பதால் தான் தங்கி இருந்த ஆஷ்ரமத்தை மீட்டுத் தர சொல்லி அர்ஜூனிடம் அடைக்கலம் புகுந்தவங்கதான் ரோஜா. இந்த சமயத்துலதான், ரோஜாவை தான் கல்யாணம் செய்துக்கிட்டதா வீட்டுல பொய் சொன்ன அர்ஜுனுக்கு உண்மையாவே ரோஜா மேல காதல் வந்துருது. ஆனா, ரோஜா சைடு நோ சிக்னல்!

ரொமான்ஸ் ஐடியா

ரொமான்ஸ் ஐடியா

என் கண்ணை பார்த்தா காதலிச்சுடுவோம்னு பயப்படறியா, இரு என் கண்ணுல தூசின்னு டிராமா போடறேன்னு, ரொமான்ஸ் பண்ண ஒரு ஐடியா பண்றார் ஹீரோ. சொன்னபடி தூசியும் விழுகிறது.. பிறகென்ன டிராமா ஆரம்பிக்கிறது.. வீட்டின் நடு ஹாலில்.

சின்ன வயசு ஷார்ப் கண்ணு

சின்ன வயசு ஷார்ப் கண்ணு

அம்மா வந்து, தான் எடுத்துவிடுவதாக சொல்ல... இல்லம்மா ரோஜா எடுக்கட்டும், அவளுக்கு சின்ன வயசு கண்ணு ஷார்ப்பா இருக்கும்னு வக்கீல் அர்ஜுன் பாயிண்ட் புடிக்கிறார். இதைக் கேட்டு பாட்டி வடிவுக்கரசிக்கு ஆச்சரியம் பிளஸ் எரிச்சல்.

பெரிசு வடிவுக்கரசி

பெரிசு வடிவுக்கரசி

மருமகளே நமக்கு வயசாயிருச்சாம், ரோஜா யூத்னு சொல்றான். ஏதோ ஷோ ஆரம்பிக்கறான்னு வடிவுக்கரசி சொல்ல, அர்ஜுன் அம்மா காயத்ரி, அத்தே மாமா கண்ணுக்கு நீங்க அழகு, உங்க புள்ளை கண்ணுக்கு நான் அழகு, என் புள்ளை கண்ணுக்கு ரோஜாதான் அழகு.. நீ ஊதி கண்ணுல தூசியை எடும்மான்னு சொல்லி மருமகளைப் பிடித்து மகன் பக்கம் தள்ளி விடுகிறார்.

ஊதி ஊதி...

ஊதி ஊதி...

அடுத்து ஆரம்பிக்கிறது அந்த ரொமான்ஸ். ரோஜா இரண்டு கைகளையும் அர்ஜுன் கண்ணில் வைத்து, இமைகளை விரித்து வாயைக் குவித்து, நெருங்கிப் போய் மெல்லமாக ஊதுகிறா். உதடு குவித்து அவர் அழகாக ஊத ஊத குடும்பமே வெட்கப்பட்டாலும், அந்த ரொமான்ஸ் காட்சியை வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. ரசிகர்களும்தான்.

உண்மையை சொன்ன பாட்டி

உண்மையை சொன்ன பாட்டி

இவன் ஷோ காமிக்கறான், இவன் கண்ணுல தூசியும் இல்லை, ஒண்ணும் இல்லை என்று பாட்டி சொல்ல, எப்படிம்மா உங்களுக்குத் தெரியும் என்று வேலைக்காரி கேட்க, எம் புருஷனும் அப்படித்தான்னு சொல்றார். அதைக் கேட்டு அர்ஜூனின் அம்மா, வேலைக்காரப் பெண் சுமதியிடம், சுமதிக்கா என் புருஷன் கூட கண்ணுல தூசி விழுந்துருச்சுன்னா இப்படித்தான் என்னை ஊத சொல்லுவார் என்று கூற, போங்கம்மா என்கிட்டே போயி இதெல்லாம் சொல்லிக்கிட்டுன்னு சொல்லும் வேலைக்காரியும் தனது புருஷனுடனான மலரும் நினைவுகளுக்கு போய் வெட்கப்படுகிறார்.

கண்ணுக்குள்ள கரைஞ்சுருக்கும்

கண்ணுக்குள்ள கரைஞ்சுருக்கும்

மறுபக்கம் ரோஜா வெட்கிப் போய், அத்தை தூசி போயிருக்கும் .. இல்லைன்னா கண்ணுக்குள்ள போயி இருக்கும்னு ரோஜா சொல்ல, அம்மா கார் வரைக்கும் என்னை ரோஜாவை கைபிடிச்சு அழைச்சசுட்டு போக சொல்லுங்க. எப்படியாவது காரை ஓட்டிக்கிட்டு போயிருவேன். போடிம்மா போ... அங்க ஒரு ஷோ காட்டுவான் என்று பாட்டி சொல்ல, ஆமாம் பாட்டி போர்டிகோ வரைக்கும் வாங்க மார்னிங் ஷோ ரெண்டாவது சீன் பார்க்கலாம்னு அர்ஜுனும் பாட்டியிடம் வம்பு இழுக்க அர்ஜுன் ரொமான்ஸ் சீன் முடிகிறது.

ஊடலும் கூடலாகிடும்!

ஊடலும் கூடலாகிடும்!

இது டிராமாதான் என்றாலும் கூட செம ரொமான்ஸாக இருந்தது. அதை விட ஒரு மெசேஜும் உள்ளே பதுங்கியிருந்தது. உண்மையிலேயே இது போல சீரியல்கள் பார்த்தா, வீட்டில் ஊடலில் இருக்கும் தம்பதிகள் கூட கூடலாகித்தான் விடுவார்கள். அதை விட முக்கியம், இந்த காட்சியில் ஆபாசம் துளி கூட இல்லை.. சுத்தமான அக்மார்க் ரொமான்ஸ் மட்டுமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+