Roja Serial: எப்போதுமே இப்படித் திட்டுவீங்களா பாட்டி?
சென்னை: பட்ட இடத்திலேயே படும், கெட்ட குடியே கெடும் என்று பழமொழி சொல்வார்கள். யாரும் இல்லாத அனாதை பெண் என்று தெரிந்தும், பாட்டி ரோஜாவைத் திட்டுவதை பொழுபோக்கு போல நினைக்கிறார்கள் போல என்று எண்ண தோன்றுகிறது.
அட நம்ம ரோஜா சீரியல் பத்திதாங்க பேசறேன். வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன நமது டிவி சேனல்கள் ஒளிபரப்பும் சீரியல்கள். பிறகு அதை நாம சீரியஸாக சுட்டிக் காட்ட வேண்டாமா?
அர்ஜுன் அனாதை ஆஷ்ரமத்தில் வளர்ந்த ரோஜாவை கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடறான்.அன்றிலிருந்து ரோஜா ஒரு தீண்டத் தகாதவளாகவே அன்னபூரணி பாட்டியால் பார்க்கப்படுகிறாள்.

வீட்டில் விசேஷங்க
வீட்டில் எதாவது ஒரு விசேஷம் நடந்துட கூடாது.அதில் ரோஜா கலந்துக்கிட்டா என்றால், அவ என்ன குலமோ,கோத்திரமோ.. எந்த தாய் வயிற்றில் பிறந்தவளோ..அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று ஏகத்துக்கும் பேசிவிடுவது,பின்னர் ரோஜா அழுவது என்பது அந்த சீரியலின் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

வீட்டில் சுமங்கலி பூஜை
வீட்டில் சுமங்கலி பூஜை நடக்கிறது. இதில் கலந்துக்கணும்னு ரோஜா ஆசைப்படறா. ரோஜா இந்த பூஜையில் கலந்துக்கவே கூடாது என்று நினைக்கிறாள் அதே வீட்டு பேத்தியாக இருக்கும் அணுவும் பாட்டியின் பெண் யசோதாவும் சேர்ந்து பிளான் போடுகிறார்கள்.

அனுவின் புடவையை
அணு கட்டி இருக்கும் பட்டுப் புடவையில் யசோதா விளக்கு மூலம் தீ வைக்க வேண்டும். இந்த தீயை ரோஜாதான் வைத்தாள் என்று பாட்டிகிட்டே சொல்லி, அவளை பூஜையில் கலந்துக்க விடாம செய்யணும்.இதுதான் திட்டம். அதே போல செய்து விடுகிறாள் யசோதா.இப்போது அணு அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். ரோஜாதான் என் புடவையில் தீ வச்சான்னு பழியும் போட்டாச்சு.

பாட்டி பேச்ச்சுக்கள்
பாட்டி பேச்சுக்கள் இப்போது ஆரம்பமாகி விட்டது. மருமகளே இந்த பூஜை நம்ம குடும்பத்துக்கான பூஜை .இவளுக்கும் இந்த பூஜைக்கும் என்ன சம்பந்தம்.இவளை யார் அழைச்சாங்க. .என்ன குலமோ கோத்திரமோ, ,இவளை பெத்தவ எவளோ..எப்படி வளர்த்தாளோ..போலீசுக்கு போன் செய்து இவளை புடிச்சு குடுக்கணும் என்று.

அர்ஜுன் ரோஜா
வழக்கம் போல ரோஜா அழுகிறாள். அவள் தீ வைக்கவில்லை என்பதை அவள் கணவன் அர்ஜுன் நிரூபித்து, பாட்டியின் மகள் யசோதா சித்திதான் தீ வைத்தாள் என்பதும் உறுதியாகிவிட்டது. இப்போது அர்ஜுன் தனது பாட்டியிடம் கேட்கிறான். பாட்டி ரோஜாவை பெத்தவ சரியில்லை, அதனாலதான் தீ வச்சுட்டான்னு திட்டினீங்களே...இப்போ யசோதாவைப் பெத்தவங்க நீங்க.அவளின் வளர்ப்பு சரி இல்லைன்னு நான் சொல்லலாமா என்று கேட்கிறான் அர்ஜுன்.
இப்படி தொடர்கதையாகி வருகிறது ரோஜா சீரியலில். நிஜமாக இதுவும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். அனாதைகள் யாரும், எப்போதும் அனாதைகள் இல்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications