கையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலையாத மாமு...!
சென்னை: கல்யாணவீடு சீரியலில் ரோஜாவின் அட்டகாசம் எல்லை மீறித்தான் போயிகிட்டு இருக்கு. ராஜாவை காதலிக்கும் ரோஜா பார்ப்பவர் மனசில் எரிச்சல் வரும்படி நல்லா நடிச்சுருக்கா.
ஆஸ்பத்திரியில் இருந்து காரை எடுக்க வர்றான் ராஜா. கார் கதவைத் திறக்க அங்கே ரோஜா உட்கார்ந்திருக்கா. அதிர்ச்சியான ராஜா.. அடிப்பாவி இங்க ஏண்டி வந்து உட்கார்ந்திருக்கன்னு கத்தறான்.
கத்தாதே மச்சின்னு சொல்வதற்குள், சீ மச்சின்னு கூப்பிடறதை முதல்ல நிறுத்துடின்னு சொல்றான். சரி மாமான்னு கூப்பிடறேன்னு சொல்றா ரோஜா. போஸ்ட்டர் ஒட்டி அசிங்கப் படுத்திட்ட.. எப்புடி டீ உன்னால எல்லார் மூஞ்சியிலயும் முழிக்க முடியுதுன்னு கேட்கறான்.

மாமு
புரியலையா மாமு.. உன்மேல இருக்க ஆசைதான் மாமு காரணம்..அது ஏன் உனக்கு புரிய மாட்டுது மச்சி.. இப்போ உனக்கு ஒரு கதை சொல்றேன் கேட்டுக்கோ.. உனக்கு வேற வழியில்லை மாமு.. என் கதையை கேட்டுத்தான் ஆகணும்.

வெயிலில் வச்சு
ஒருத்தன் வெண்ணெயை வெயிலில் வச்சு வாய் பேச முடியாத, கையில்லாதவனை காவல் வச்சுட்டு, வெண்ணெய் உருகாம பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போனானாம். வெயில்ல வெண்னெயை வச்சா உருகும்.. ஆனா, உருகுதேன்னு அவன் யாரையும் கூப்பிட்டு சொல்ல முடியாது. எடுத்து உள்ளே வைக்கவும் கை இல்லை. என்ன பண்ணுவான் பாவம்.. வெண்ணெய் உருகத்தான் செய்யும்.

உனக்கு சூர்யாவை
கதை புரியலையா மாமு...எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு ரோஜா சொல்ல, எனக்கு உன்னை புடிக்கலையேன்னு சொல்றான் ராஜா. அதே மாதிரிதான் மாமு, உனக்கு என்னை புடிக்கலை, சூர்யாவை புடிச்சிருக்கு..சூரியாவுக்கு உன்னை புடிக்கலை கோபியைத்தான் புடிச்சிருக்கு.

மக்கு மாமு
மக்கு மாமு.. இப்போ வெண்ணெய் சூரியா . .. வெயில் கோபி.. அந்த கையில்லாத, ஊமை வெண்ணெய் வெட்டி சிப்பாய்த்தான் நீ.. கோபிதான் வெயில். வெயிலான கோபி வெண்ணெயான சூர்யா மேல படபட சூர்யான்ற வெண்ணெய் உருகத்தான் செய்வா மாமு... நீ அதை வேடிக்கை பார்த்துகிட்டு நிக்கற சிப்பாய். அதான் சொல்றேன் கையில ரோஜான்ற நெய் இருக்கும்போது ஏன் அந்த வெண்ணெய்க்காக உருகற மாமு.. யோசின்னு சொல்லிட்டு காரை விட்டு இறங்கிடறா...
ரோஜா சொன்ன கதை எப்படி? ஆனா, பழமொழி என்னவோ கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு ஏன் அலையறேதான். இப்படித்தான் ரோஜா முதலில் நீலி பேய் கதையும் சொல்லி இருந்தா.. அதுவும் நல்லா இருந்துச்சு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications