சமந்தாவை விட செம க்யூட்... ரோஜா நாயகியின் கலக்கல் ரீல்ஸ் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்
சமந்தாவை விட க்யூட் ஆக பேசி ரீல்ஸ் போட்டுள்ளார் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்கரி.
சென்னை: ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் ரீல்ஸ்களை ரசிக்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் பதிவிட்ட ரீல்ஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா டிவி சீரியல் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நமக்கு இப்படி ஒரு மருமகள் கிடைக்க மாட்டாளா என்று எதிர்பார்க்கும் அளவிற்கு க்யூட்டாக புடவையில் பாந்தமாக நடித்து குடும்ப குத்து விளக்கு என்று பெயர் எடுத்துள்ளார் பிரியங்கா நல்கரி.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் டிரஸ்சில் கலக்கலாக ரீல்ஸ் போட்டு தனது ஒரிஜினல் இதுதான் என்று பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் பிரியங்கா நல்கரி.

சாய்பாபா பக்தை
டிவி சீரியலில் நடிப்பது மட்டுமல்லது அவ்வப்போது ஆன்மீக டூர் ஜாலி டூர் என்று சுற்றி வருவார் பிரியங்கா. அவர் ஒரு சாய்பாபா பக்தை. மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவார். சமீபத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில், சீரடி சாய்பாபா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்த கையோடு அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மகாராணி உடையில்
சீரியலில் எப்போதுமே புடவை கட்டி நடிக்கும் ரோஜா திடீரென மகாராணி உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த உடை உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது தனது மாமியாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் போட்டு சூப்பர் மாமியார்... சூப்பர் மருமகள் என்று பதிவிட்டுள்ளார்.

ரோஜா ஆயிரம்
ரோஜா சீரியலில் முதன் முதலாக நடித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பிரியங்கா நல்கரி, நேற்றைய தினம் 1000மாவது நாள் சூட்டிங் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2020ஆவது ஆண்டில் கொரோனா காரணமாக பல மாதங்கள் சூட்டிங் தடை பட்டது. அப்போது பழைய எபிசோடுகளே ஒளிபரப்பானது. இந்த ஆண்டு கொரோனாவிற்கு மத்தியிலும் பாதுகாப்பாக சூட்டிங் நடத்தப்பட்டது.
என்ன பண்ணிட்டான்
சூட்டிங்கிற்கு இடையே அவ்வப்போது ரீல்ஸ் போடுவது ரோஜா நாயகியின் வழக்கம். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் வசனத்தை ஏராளமானோர் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். ரோஜா நாயகியும் சமந்தா வாய்ஸை பேசியுள்ளார். நீ ஏம்மா சோகமா இருக்க... உன்னையுமா கல்யாணம் பண்ணிட்டான் என்று நயன்தாரா கேட்க... " பண்ணிட்டான்..." உன்ன கல்யாணம் பண்ணிட்டான்... என்ன பண்ணிட்டான்" என்ற வசனத்தை க்யூட்டாக சொல்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications