பாரதி கண்ணம்மா செட்டில் எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டேன்.. ரகசியத்தை உடைத்த நடிகை ரோஷினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிக்கும் போது ஏற்பட்ட அவமானம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.
பொதுவாக திறமை மற்றும் விடா முயற்சி இருந்தால் எப்படியாவது அதற்கான அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பலர் இருக்கிறார்கள். பலர் நடிகராக வேண்டும் என்று அதற்காக, கடுமையாக முயற்சி செய்திருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும்தான் அதற்கான வாய்ப்பு எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்து விடுகிறது.

அந்த மாதிரி தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ரோஷினி ஹரிபிரியன் டிக் டாக் போன்ற செயலியில் தன்னுடைய போட்டோ சூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில் அவருடைய வீடியோக்களை பார்த்த பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இன்ஸ்டாகிராமில் ரோஷினி ஹரிபிரியனை ஆடிஷனில் கலந்து கொள்ளுமாறு கூப்பிட்டு இருக்கிறார்.
முதலில் இதை நம்ப மறுத்த ரோஷினி பிறகு தன்னுடைய நண்பர்களிடம் இது பற்றி பேச, அவர்கள் இது உண்மைதான் இயக்குனர் தான் அவர் சீரியல் இயக்கப் போகிறார் என்று பல்வேறு தகவல்களை கூறியதை தொடர்ந்து ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். பல பேர் கலந்து கொண்ட ஆடிஷனில் தேர்வான ரோஷினி நடித்து வந்தார்.
ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து இப்போது கருடன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து ரோஷினி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்த அவமானம் என்றால் ஒரு முறை நான் ஒரு பாலத்தில் ஓடி வருவது போன்று சீன் இருந்தது. நானும் ஓடி வந்து கொண்டிருந்தேன் அப்போது திடீரென்று பார்த்தால் பின்பக்கத்தில் எனக்கு ஏதோ டக் என்று ஒரு மாற்றம் தெரிந்தது. என்னவென்று பார்த்தால் என்னுடைய டோப்பா முடி அங்கே விழுந்திருக்கிறது. எனக்கு அந்த இடத்தில் நின்று என்னுடைய முடியை எடுத்து மாட்ட வா?
அல்லது இதை கண்டு கொள்ளாத மாதிரி ஓடிக்கொண்டே இருக்கணுமா என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் நான் தயங்கி போய் நின்றேன். ஆனாலும் பிறகு ஓடி வந்து டைரக்டரிடம் சொல்ல அதற்குப் பிறகு எப்படியோ அந்த இடத்தில் முடியை ஓரளவு ஒட்டவைத்து விட்டார்கள். பிறகு எனக்கு பேக் சைடு ஷாட் வைக்காமல் முன்பக்கத்தில் மட்டும்தான் ஷாட் வைத்திருந்தார்கள்.
சூட்டிங் பார்க்க பல பேர் நின்று கொண்டிருக்கும்போது முடி கீழே விழுந்தது ரொம்பவே அவமானமா போயிடுச்சு என்று அந்த பேட்டியில் ரோஷினி சிரித்தபடியே பேசி இருக்கும் நிலையில் இதற்கு அதிகமான ரசிகர்கள் சிரித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும் அந்த சீரியலில் கண்ணம்மா கையில் பேக் உடன் கணவரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு தெருவில் நடந்த எபிசோடு பல மாதங்களாக இருந்த நிலையில் அதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக கலாய்த்து விட்டிருந்தனர்.
இதனாலேயே இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலமடைந்தது. ஆரம்பத்தில் இதை ரொம்பவே என்ஜாய் பண்ணிய சீரியல் குழுவினர் இதுகுறித்து பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் திடீரென்று ரோஷினி சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications