இசைவாணியே இன்னும் தெரு பாடகிதான்! தக் லைஃப் புரமோஷன், திமுக MP.. ரூ.30 கோடி விட்ட கமல்ஹாசன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக் லைஃப் இது தமிழ் வார்த்தையா? தக் லைப் என்ற வார்த்தையும் போஸ்டர்களில் இங்கிலீஷில்தான் உள்ளது.. தமிழ்நாட்டில் தமிழில்தானே பெயர் இருக்கணும்? ஆந்திராவில் தெலுங்கில்தானே இருக்கணும்? கர்நாடகா என்றால் கன்னடத்தில்தானே இருக்கணும்? இங்கிலீஷில் இருக்கே,? ரசிகர்கள் என்ன ஆங்கிலேயர்களா? தக் லைப் என்றால் என்ன அர்த்தம் என்றே நிறைய பேருக்கு தெரியவில்லை" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன். "தக் லைஃப் என்பது தமிழ் பெயரா? என்று கமலை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன..

Television Thug Life Kamal haasan

அதேபோல தக் லைஃப் என்ற வார்த்தையும் போஸ்டர்களில் இங்கிலீஷில்தான் உள்ளது.. தமிழ்நாட்டில் தமிழில்தானே பெயர் இருக்கணும்? ஆந்திராவில் தெலுங்கில்தானே இருக்கணும்? கர்நாடகா என்றால் கன்னடத்தில்தானே இருக்கணும்? இங்கிலீஷில் இருக்கே,? ரசிகர்கள் என்ன ஆங்கிலேயர்களா? இதுக்கு என்ன அர்த்தம் என்றே நிறைய பேருக்கு தெரியவில்லை..

30 கோடி நஷ்டம்

தமிழிலிருந்துதான் கன்னடம் வந்தது என்று சொன்னால், கன்னட வெறியர்கள் கண்டிப்பாக பஸ்களை கொளுத்துவார்கள்., கண்டிப்பா பேனர்களை கொளுத்துவார்கள்.. இது கமலுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால், இது படத்துக்கான புரமோஷன்..

2 விஷயங்கள் நடந்துள்ளது.. ஒன்று, கர்நாடகாவில் இதை வெளியிடாததால் 30 கோடி நஷ்டம் என்றால், தமிழ்நாட்டில் 60 கோடி லாபம், தெலுங்கில் 80 கோடி லாபம்.. உலக சந்தையில் 200 கோடி லாபம்.. அதனால் 30 கோடி இழப்பு என்பது கமலுக்கு பெரிய விஷயமில்லை..

திமுகவிலிருந்து எம்பி சீட் அறிவிப்பு வரவில்லையானால், மேடையிலேயே கமல் மன்னிப்பு கேட்டிருப்பார்.. கமலை பொறுத்தவரை உறுதியான கொள்கையாளர் கிடையாது.. 4 சதவீத ஓட்டை, அறிவாலயத்தில் அடமானமாக வைத்து எம்.பி.ஆகிவிட்டார்..

வாட்டாள் நாகராஜ்

தமிழிலிருந்துதான் கன்னடம் வந்தது என்று சொன்னால், கண்டிப்பாக, வாட்டாள் நாகராஜ் உட்பட கன்னட வெறியர்கள் அத்தனை பேரும் கலவரம் செய்வார்கள் என்று தெரிந்தே கமல் சொன்னார்.. 65 லட்சம் தமிழக மக்களின் பிரதிநிதியாக டெல்லிக்கு உறுப்பினராக செல்கிறார்.. இந்த நேரத்தில் மன்னிப்பை கேட்டு, கன்னடர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், தமிழ்நாட்டில் பிரச்சனை கிளம்பும்.. இதெல்லாம் சினிமாத்தனமானவை..

தமிழ்நாட்டில் தமிழ்பாடகிகளுக்கு வாய்ப்பில்லை.. சித்ரா, சைஷலா, சுஜாதா என்றுதான் பாடுகிறார்கள்.. இசைவாணி இன்னமும் தெருப்பாடகியாகத்தான் இருக்கிறார்.. தமிழச்சிக்கு தமிழே பாடத்தெரியாதா? இங்கு எல்லாமே சினிமாத்தனம்.

கமல் சொன்னது உண்மைதான்.. அதில் மாற்றுக் கருத்தில்லை.. கமல் சொன்னதை மறுப்பதற்கில்லை.. ஆனால் சொன்ன இடம் தவறு.. கன்னடர்களுக்கு தமிழனை கண்டாலே ஆகாது.. தமிழர்கள் அவர்களுக்கு ஜென்ம விரோதிகள்.. அவர்களிடம் எப்படி மொழியை திணிக்க முடியும்?

மொழி உணர்வு இல்லை

கன்னடர்களுக்கு 10-க்கு 8 வார்த்தை கன்னடமாக இருக்கும்.. நமக்கு 8 வார்த்தையுமே ஆங்கிலமாக இருக்கும்.. பெங்களூரில் உள்ளவர்கள் 5 மொழி பேசுவார்கள்.. ஆனால் கன்னடம்தான் உயிர் என்பார்கள்.. மகாராஷ்டிராவில் மராத்தி, ஆங்கிலம் என இருமொழி கொள்கைதான் உள்ளது.. மொழி வழி தேசியம் என்பதுதான் உலகத்தில் உயிரோட்டமானது.. மொழி வாரியாகத்தான் ஒரு நாட்டை பிரிக்க வேண்டியிருக்கிறது..

தமிழர்களுக்கு மொழி அறிவும் இல்லை, இன உணர்வும் இல்லை.. எல்லாமே சூன்யம்..
ஒரு இனம் அழிகிறபோது, எந்த உணர்ச்சியும் இல்லாமல் இந்த திராவிடர்கள் பார்த்துக் கொண்டார்கள்.. முதலில் ஒழிக்கப்பட வேண்டியதே இந்த திராவிடர்கள்..

அங்கே கன்னடர்களாக இருக்கிறார்கள், இங்கே திராவிடர்களாக இருக்கிறார்கள்.. இதில் உண்மையான தேசியவாதி யார்? கன்னடர்கள்தான் உண்மையான தேசியவாதி.. மராட்டியர்கள்தான் நிஜமான தேசியவாதி..

காப்பி அடியுங்கள்

மொழிக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தை தமிழர்கள் தங்கள் மொழிக்கு தருவதில்லை..இனியாவது கன்னடர்களை பார்த்து, மராட்டியர்களை பார்த்து, தமிழர்கள் காப்பி அடித்து கொள்ள வேண்டும்.

திராவிடத்தை தூக்கி எறிந்துவிட்டு, தமிழ் தேசியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்
என்பதைதான், கன்னடர்கள் இப்போது நமக்கு கற்று தந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+