ரூ.10 கோடி போயிட்டு போகுது.. கமல்ஹாசனை தொட்டால் இதான் நடக்கும்.. கரெக்டா வந்த சிவராஜ்குமார்.. சபாஷ்
சென்னை: நடிகர் கமல்ஹாசனை கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. கன்னட மொழிக்குத் துரோகம் செய்துவிட்ட கமல்ஹாசனின் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. கமல் மன்னிப்பு கேட்கும்வரை தக் லைஃப் படத்தை வெளியிட கூடாது என்று கன்னட அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பத்திரிகையாள்ர சுபைர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
Aagayam Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "Adam Mount என்று இலங்கையில் ஆதம் மலை உள்ளது.. உலகின் முதலில் பிறந்த ஆண், பெண் ஆதாம், ஏவாள் என்பதை பல சமயங்களில் ஒப்புக் கொள்கிறார்கள்..

இலங்கையிலுள்ள இந்த ஆதம் மலையில்தான், உலகின் முதல் ஆண், பெண் பிறந்திருக்கிறார்கள்.., இவர்கள் பேசிய மொழி தமிழ். அதாவது உலகின் முதல் மனிதன் தமிழ், அவன் பேசிய முதல் மொழியும் தமிழ். இதை சில வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகிறார்கள்.. மேலும் சிலர், இது ஆதாரமில்லாதவை என்று மறுக்கிறார்கள். இலங்கையும், தமிழ்நாடும் அப்போது ஒன்றாக இருந்தது, அதற்கு பிறகுதான் பிரிந்ததாகவும் சொல்கிறார்கள்.
அனைத்துக்கும் மூலம் தமிழ்மொழி
வெள்ளைக்காரன் இருந்தபோது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி என அனைத்தும் சேர்ந்து மெட்ராஸ் மாகாணமாக வைத்திருந்தார்கள்.. அனைத்துக்கும் ஒரே தலைமையிடம் சென்னை மட்டுமே.. அனைத்தக்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே.
அதற்கு பிறகு ஒவ்வொரு மாநிலமாக பிரிந்து, கேரளாவில் மலையாளம், கர்நாடகத்தில் கன்னடம் என்று உருவானது.. மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களினால், சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்பட்டது.
தமிழிலிருந்துதான் பிற மொழிகள் பிரிந்து சென்றன என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..மலையாளத்தில் நிறைய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளாகவே உள்ளதை இன்றும் காணலாம்.. தமிழும், சமஸ்கிருதமும் கலந்தது மலையாளம்.. கன்னடமும் அப்படித்தான்..
வரலாற்று ஆய்வாளர்கள் இதை உறுதிபடுத்தியதைதான், கமல்ஹாசனும் சொன்னார்.. கமல் இப்படி சொன்னதன் நோக்கம், "நீங்களும், நாங்களும் வேறு வேறு கிடையாது, நாம அனைவருமே அண்ணன் - தம்பிதான்.. நமக்கு ஒரே தாய் தமிழ்த்தாய்தான்" என்ற ஒற்றுமை நோக்கத்தில் பேசினார். உடனே சில கன்னட அமைப்புகள் அரசியல் செய்வதற்காக இதை கையில் எடுத்து போராட்டம் செய்கிறார்கள்.
பாஜக அரசியல்
இந்த போராட்டத்துக்குள்ளும் ஒரு அரசியல் உள்ளது.. காங்கிரஸ் கர்நாடகத்தை ஆளும் சூழலில், கன்னட அமைப்புகள் போராட்டத்தை நடத்துகின்றன.. இதனால் பாஜகவும் உள்ளே நுழைந்துள்ளது.. ஆட்சியாளர்களுக்கு இப்போது ஒரு நெருக்கடியை ஆளுநர் தரவேண்டியிருக்கிறது.
காரணம், கமல்ஹாசன் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலும், தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் இருக்கிறார்.. எம்பி.யாகவும் டெல்லி போகப்போகிறார். அதனால் நேரடியாக இதில் நுழைந்தால் அப்பட்டமாக அரசியல் தெரிந்துவிடும் என்பதால், கன்னட அமைப்புகளை பாஜக தூண்டிவிட்டு, பேச வைத்து வருகிறது.
இதனால் வேறு வழியின்றி, காங்கிரஸ் தலைவர்களும் இதில் ஒன்று சேர்ந்து, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல துவங்கிவிட்டார்கள்.
சபாஷ் சிவராஜ் குமார்
இந்த நேரத்தில்தான் சிவராஜ்குமாரை நாம் பாராட்டியாக வேண்டும்.. கன்னடர்களுக்கு மொழிப்பற்று அதிகம் என்றாலும், கமலுக்கு ஆதரவு தருவது போல பேசியிருக்கிறார்.. கன்னட மொழிக்காக நீங்கள் எல்லாம் இதுவரை என்ன செய்தீர்கள்? என்று கேட்டுள்ளார் சிவராஜ்குமார்.
ஏற்கனவே கர்நாடகாவில் கன்னடமா? ஹிந்தியா? என்ற மொழிப்பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.. இந்தநேரத்தில், கமல் பேசியதை வைத்து கன்னட அமைப்புகள் , திசை திருப்புவதற்காக பயன்படுத்தி கொண்டுள்ளதோ? கன்னடம் Vs தமிழ் என்ற ரீதியில் பிரச்சனையை கொண்டு வருகிறதோ? என்ற சந்தேகமும் எழுகிறது.
இவை எல்லாம் சேர்ந்துதான் தக் லைஃப் படத்தின் மீது வந்து விழுகிறது.. எதைத்தொட்டால் அது பப்ளிசிட்டி ஆகும் என்று கன்னட அமைப்புகளுக்கு தெரியும். கமலுக்கும், மணிரத்னத்துக்கும் இந்திய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, தக்லைஃப் படத்தை வைத்து, கன்னட அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றன. இதில் கமல் பலிகடா ஆக்கப்பட்டுள்ளாரோ? என்றே தோன்றுகிறது.
ரூ.10 கோடி நஷ்டம்
கமலும், மணிரத்னமும் சேர்ந்துதான் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.. இந்த படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால், ரூ.10 கோடி நஷ்டம் ஆகும்.. அப்படி 10 கோடி போனாலும் பரவாயில்லை, மன்னிப்பு கேட்க முடியாது, எல்லாரும் ஒற்றுமையாக இருக்கணும்னு சொன்னது தப்பா? என்பதில் உறுதியாக இருக்கிறார் கமல்ஹாசன்.
இந்த நேரத்தில் கமல் பக்கம் நின்று தன்னுடைய ஆதரவை தந்துள்ளார் சிவராஜ்குமார்.. கன்னடத்துக்காக நீங்களெல்லாம் என்ன செய்தீர்கள் என்று கன்னட மக்களை கேட்டுள்ளது, உண்மையிலேயே பாராட்டக்கூடிய விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications