ரெண்டு பேரும் ஓடிட்டாங்களா? சொந்த காசில் டேமேஜ் பண்ணிக்கிட்டாரா கமல்ஹாசன்.. தக் லைஃப் வசூல் 100 கோடி
சென்னை: தக் லைஃப் படத்தில் அனைவருமே நன்றாக நடித்திருக்கும்போது, படத்தை ஒருமுறை பார்க்கலாம்.. ஆனால், ஒருமுறை பார்க்கக்கூட அந்த படம் லாயக்கு இல்லை என்பதுபோல வரிந்து கட்டிக்கொண்டு பழிவாங்குவது போல ஏன் ரிவ்யூ செய்ய வேண்டும்? என்பதுதான் என்னுடைய கேள்வி. அப்படியானால், பெரிதாக கொண்டாடப்பட்ட படங்களில் எதுவுமே கேள்வி கிடையாதா? குறைகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
Meida Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தனஞ்செயன், "தக் லைஃப் படத்தின் சரியான கலெக்ஷன் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.. ஒருவேளை உலக அளவில் 90 அல்லது 100 கோடி வசூல் இருக்கலாம்..

தக் லைஃப் படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு, ஆன்லைனில் செய்யப்பட்ட விஷயங்கள்தான்.. இந்த படம் வெளியானதிலிருந்தே, படத்துக்கு எதிரான செய்யப்பட்ட விஷயங்களால், அந்த படத்துக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய வசூலையும் தடுத்துவிட்டது..
100 கோடி வசூல்
ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் நன்றாகவே இருந்தது.. சாட்டிலைட் பிசினஸ் கை கொடுத்தது.. ஆனால், படம் எவ்வளவு வசூல் ஆனது தெரியவில்லை.. கமலின் சம்பளம் ரூ.100 கோடி என்கிறார்கள்.. மொத்தம் ரூ.300 கோடியில் இந்த படத்தை எடுத்தாலும், 200 கோடியே கைக்கு வருமா தெரியவில்லை.
அதேபோல தக் லைஃப் படம் அனைவரையுமே திருப்திப்படுத்தவில்லை.. கமலின் அதிதீவிரமான ரசிகர்களையும் கூட முழுமையாக திருப்திப்படுத்தவில்லை.. மற்றொ'புறம், கமலுக்கு எதிரானவர்களுக்கு, கொறிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது.. மொத்தத்தில், ஒருமுறை தக் லைஃப் படம் பார்க்கலாம்.
டேமேஜ் செய்வது ஏன்
பெரிய அளவிலான வசூல் கிடைக்காது என்றாலும் நியாயமான வசூலை பெற்றிருக்க வேண்டிய படம். பல விஷயங்கள் படத்தில் நன்றாக இருந்தாலும், படத்தை பற்றின எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது..
அதாவது இந்தியன் படத்தைவிட சிறப்பாக செய்ததாக, ஒரு பிரபல பத்திரிகையில் சிறப்பு கட்டுரையே வெளியாகியிருந்தது. இப்படியெல்லாம் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு, கடைசியில் அப்படி எதுவுமே படத்தில் இல்லாமல் போனதுதான், பலபேர் படத்தை இறங்கி நின்று தாக்கும் நிலைமைக்கு கொண்டுசென்றுவிட்டது.
நாசர் ஏன் கமலை திட்டுகிறார்
படத்தின் நீளத்தை குறைத்துவிட்டு, கதையை இன்னும் வலுப்படுத்தி, சில விஷயங்களை திரைக்கதையில் நுணுக்கமாக செய்திருந்தால் படம் நன்றாகவே ஓடியிருக்கும்.
உதாரணத்துக்கு அண்ணன் நாசருக்காகத்தான் கமல், அந்த நபரை கொலை செய்ய போகிறார். தனக்காக கொலை செய்யும்வரை துணியும் தம்பி கமலுக்கு, நாசர் நன்றி சொல்ல வேண்டும்.. அதற்கு பதிலாக, "நீ என்னை எப்பவுமே கேவலமா பார்க்குறே" என்று கமலையே திட்டுகிறார் அண்ணன் நாசர்..
இங்கேயே கதை சொதப்பலாகுது.. நாசர் மனம் திருப்திப்படுத்தவே கமல் அத்தனை விஷயங்களையும் செய்யும்போது, ஏன் நாசர் கோபப்படுகிறார்? என்று ரசிகர்களே கேட்கிறார்கள். இங்குதான் கதையின் சறுக்கல் தொடங்குது.. இதற்கு பிறகு ஒவ்வொன்றும் சறுக்கலாகிறது..
டேமேஜ் செய்யப்பட்ட கமல்
நாயகன் படத்தில், விஷயத்தை தெளிவாக சொல்லியிருப்பார்கள்.. "கடலிலிருந்து சரக்கை கொண்டுவர வேண்டாம், அது ஆபத்தான தொழில், அதில் இறங்க வேண்டாம்" என்று மகன் நிழல்கள் ரவியை எச்சரிப்பார் அப்பா கமல்ஹாசன்,.. அதையும் மீறி மகன் அதில் இறங்கும்போது, மரணித்துவிடுகிறான்.. உடனே திதி கொடுப்பதற்கு முன்பேயே, மகனை அழித்த ஓவ்வொரு நபரையும் கமல் தேடி தேடி அழிப்பார்.. இது ரசிகர்களுக்கு அபபோது உணர்வுப்பூர்வமான காட்சிகளாக அமைந்தது.
ஆனால், தக் லைஃப்பில் அப்படி எதுவுமேயில்லை.. யாருக்கும் யாருக்கும் பிரச்சனை என்றே தெரியவில்லை.. அண்ணனுக்கும் தம்பிக்கும் பிரச்சனையா? வளர்ப்பு மகனுக்கும் கமலுக்கும் பிரச்சனையா? என்பதுதான் படத்தில் குழப்பத்தை தந்துவிட்டது. அதற்காக மோசமான படம் என்று சொல்ல முடியாது.
ஹீரோ மீது அபிமானம்
அதேபோல, கமலை டேமேஜ் செய்யக்கூடிய வசனங்கள் 3 இடத்தில் பேசப்படுவதும் படத்துக்கு மைனஸாகிவிட்டது.. சுகர் BPஇருப்பதுபோல, இது எனக்கு வீக்னஸ் என்று கமல் சாரே ஒரு இடத்தில் சொல்கிறார்.. இதெல்லாம் ஏன் சொல்லணும்? இப்படி சொன்னால் ஹீரோ கேரக்டர் மீது எப்படி அபிமானம் வரும்? ஒரு ரசிகன் எப்படி பெருமை கொள்ள முடியும்? நாயகன் சக்திவேல் போல, இந்த கேரக்டரை முன்மாதிரியாக எடுத்து கொள்ள முடியுமா?
தக் லைஃப் படத்தில் அனைவருமே நன்றாக நடித்திருக்கும்போது, படத்தை ஒருமுறை பாரக்கலாம். ஆனால், ஒருமுறை பார்க்கக்கூட லாயக்கு இல்லை என்பதுபோல வரிந்து கட்டிக்கொண்டு பழிவாங்குவது போல ஏன் ரிவ்யூ செய்ய வேண்டும்? என்பதுதான் என்னுடைய கேள்வி. அப்படியானால், பெரிதாக கொண்டாடப்பட்ட படங்களில் எதுவுமே கேள்வி கிடையாதா? குறைகள் கிடையாதா?
ஜெயம் ரவி, துல்கர் சல்மான்
ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் இந்த படத்தில் நடிக்காமல் தப்பித்து விட்டார்கள் என்று சோஷியல் மீடியாவில் சொல்வதெல்லாம் இட்டுக்கட்டான விஷயம்.
அவர்கள் இருவருமே கதை பிடிக்கவில்லை என்று விலகி போகவில்லை. கதையை கேட்டுதான் கையெழுத்து போட்டார்கள்.. அதுகுறித்த அறிவிப்பும் செய்தார்கள்.. பிறகு கால்ஷீட் தர முடியாமல் போய்விட்டது. அப்படி பார்த்தால் அவர்கள் 2 பேரும் மொக்கை படத்தை எதுவும் தரவில்லையா?" என்றெல்லாம் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications