வெட்டப்பட்ட குழியிலேயே டபுள் சூப்பர் ஸ்டார் முக முத்து விழுந்தது இப்படித்தான்! ரூ.1000 கோடி: பிரபலம்
சென்னை: முதலமைச்சர் நாற்காலிக்காக கருணாநிதியால் தயார் செய்யப்பட்ட அறிவாளிதான் மறைந்த மு.க. முத்து.. அன்றைய காலகட்டத்தில் முத்து மட்டும் சரியாக இருந்திருந்தால், சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் இன்று நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பார். டபுள் சூப்பர் ஸ்டாராகி இருப்பார்.. அந்தளவுக்கு திறமைசாலி" என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன். அத்துடன் மறைந்த மு.க. முத்து குறித்தும் பல்வேறு விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன்., "எம்ஜிஆருக்கு பதிலாக, சினிமாவிலும், முதலமைச்சர் நாற்காலிக்காகவும் கருணாநிதியால் அன்று தயார் செய்யப்பட்டவர் தான் மு.,க. முத்து... இவர் காலாவதியான பிறகுதான், அரசியலுக்கு ஸ்டாலினை தயார் செய்தார் கருணாநிதி.

எம்ஜிஆருக்கு போட்டி
எம்ஜிஆருக்கு போட்டியாக சினிமாவில் முக முத்துவை கருணாநிதி கொண்டு வந்தார்.. எம்ஜிஆரின் ஜோடியான, மஞ்சுளாவை க. முத்துவுக்கு ஜோடியாக மு.வைத்து படம் எடுத்தார்கள்.. முக எம்ஜிஆருக்கு பாட்டு எழுதின வாலி, முத்துவுக்கும் பாட்டு எழுதினார்.. எம்ஜிஆருக்கு பணிபுரிந்த சினிமா டீம், அப்படியே முத்துவுக்கும் பணிபுரிந்தது. இதனால் திரைத்துறையில் அப்போது பெரிய பிரளயம் நடந்தது.
1972-ல் திமுகவின் ஸ்டார் நடிகராகவும் இருந்தவர் முத்து.. அவர்மட்டும் அன்று சரியாக இருந்திருந்தால், இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசனே கிடையாது.. இன்று டபுள் சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க வேண்டியவர்..
மிகப்பெரிய பின்னணி கொண்டவர் முத்து.. ஆனால், மதுவில் விழுந்துவிட்டார்.. அங்குதான் சீரழிய துவங்கிவிட்டார்.. இன்று அவர் இல்லை.. பழைய கதைகளை பேசி பிரயோஜனம் இல்லை..
ஜெயலலிதா தந்த ரூ.5 லட்சம்
ஆனால், ஒருகாலகட்டத்தில் எம்ஜிஆரே முத்துவை தத்தெடுத்தார்.. ஜெயலலிதாவே தத்தெடுத்தார்.. 5 லட்சம் கட்சி நிதியையும் முத்துவுக்காக தந்தார்.
அந்த அளவுக்கு திமுகவிலிருந்து விலகி சென்றுவிட்டார்.. திட்டமிட்டு ஆர்எம்வீ மகன் மூலம், உல்லாச பேர்வழியாக மாற்றிவிட்டார் எம்ஜிஆர் என்பார்கள்.. அதிலிருந்து முத்துவால் மீண்டு வரவே முடியவில்லை. முதலமைச்சர் நாற்காலிக்கு முத்துவை எப்படியெல்லாமோ கருணாநிதி திட்டமிட்டுவந்தார்.. ஆனால், முத்துவே தன்னை சிதைத்துக் கொண்டார்..
அடையாளம் தெரியவில்லை
24 மணி நேரமும் நிதானத்திற்கு முத்து வரவில்லை.. பல ஷூட்டிங்குகள் தடைபட்டன.. கருணாநிதி மகனை வந்து பார்த்தபோது, தன்னுடைய அப்பாவையே முத்துவுக்கு அடையாளம் தெரியவில்லை.. மனம் நொந்து போன கருணாநிதி, இதற்குமேல் ஒன்னுமே செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.. கருணாநிதி வெட்டிய குழி, முத்துவுக்கே பாதகமாக போய்விட்டது.
முக முத்துவின் பேத்தியை திருமணம் செய்தவர்தான் ஆகாஷ் பாஸ்கரன்... சினிமாவில் ரூ.1000 கோடியை முதலீடு செய்திருக்கிறார்.. ஏது இந்த ரூ.1000 கோடி? ஆயிரம் கோடிக்கு படம் எடுக்கிறார்கள் என்றால், ஆகாஷ் பாஸ்கரனிடம் எவ்வளவு பணம் இருக்கும்?
மிகச்சிறந்த திறமைசாலி
சிக்கா ஷாம்பூ என்று கடலூரில் தயார் செய்து வெளியானது.. அந்த குடும்பத்துக்குதான் முக முத்து பெண்ணை திருமணம் செய்து தந்தார்கள்.. இந்த மகளுக்கு பிறந்த மகளை திருமணம் செய்தவர்தான் ஆகாஷ் பாஸ்கரன்.
முதலமைச்சர் நாற்காலிக்காக கருணாநிதியால் தயார் செய்யப்பட்ட அறிவாளி மு.க. முத்து.. அவர் மட்டும் சரியாக இருந்திருந்தால், சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பார். அந்தளவுக்கு திறமைசாலி மு.க. முத்து" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications