ரூ.1000 கோடிக்கு நெப்போலியனின் சொத்து.. திருச்சி குமரேசனின் அமெரிக்க வாழ்வு.. அட கருணாநிதி: பிரபலம்
சென்னை: நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமணத்திற்காக ரூ. 150 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் செட்டில் ஆகி, விவசாய தொழிலை மேற்கொண்டிருக்கும் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், நெப்போலியன் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தார் என்பது குறித்தும் தன்னுடைய பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை சமீபத்தில் தந்திருந்தார்.. அதில், நெப்போலியன் பற்றி பேசும்போது, "1989-91ல் திருச்சி நேரு, அமைச்சரானார். அப்போது நேரு அலுவலகத்துக்கு ஒரு உதவியாளராக வந்தவர் அவரது உறவினர் குமரேசன்.. ஆபீஸ் பாயாக இருந்தபோது, வாட்டசாட்டமான குமரேசனை நான் பலமுறை அங்கு பார்த்திருக்கிறேன்..

வாட்டசாட்டமான குமரேசன்
அப்போது பாரதிராஜா தன்னுடைய திரைப்படம் தொடர்பாக, அமைச்சரின் இலாகாவில் அனுமதி ஒன்றை வாங்கவேண்டியிருந்தது. இதற்காக பாரதிராஜா நேரில் வந்து அமைச்சரை சந்தித்தார்.. அப்போது வாட்டசாட்டமான இளைஞர் குமரேசனையும் பார்த்தார்..
சினிமாவில் நடிக்க ஆசையா? என்று குமரேசனை பார்த்து கேட்டார் பாரதிராஜா.. அதற்கு அமைச்சர் நேரு, "அரசியலுக்கு லாயக்கில்லை. அதனால் உங்க கையோடு கூட்டிட்டு போயிடுங்க, பெரிய ஆளாக்குங்க" என்றார். அப்போதுதான், நெப்போலியன் என்று பெயர் வைத்தார் பாரதிராஜா.. உயரமாக இருக்கக்கூடிய திருச்சி குமரேசனை, அமெரிக்க நெப்போலியனாக பெயர் மாற்றியது, 80 வயதை கடந்த இயக்குனர் பாரதிராஜாதான்.
புது நெல்லு புது நாத்து
புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நெப்போலியனை அறிமுகப்படுத்தினார். நெப்போலியனின் நடிப்பு, பல்வேறு பிரம்மாண்ட படங்களை அடுத்தடுத்து தந்தது. அதாவது தெற்கத்தி கலாச்சாரத்தை நினைவுபடுத்தக்கூடிய பல்வேறு கேரக்டர்கள் நெப்போலியனுக்கு தேடிவந்தது. இதுவே இப்போதுவரை திரைப்பட புகழ் + அரசியல் புகழை நெப்போலியனுக்கு பெற்று தந்துள்ளது.
ஒருமுறை திருச்சியில் மாநாட்டுக்கு சென்ற கருணாநிதி, நிகழ்ச்சி முடிந்தபிறகு, நேரு வீட்டுக்கும் சென்றிருக்கிறார்.. அப்போது, நெப்போலியனை பார்த்து, "வாயா நெப்போலியா, உனக்கு அரசியல் ஆசை இருக்கா?" என்று கேட்டார்..
அதற்கு நெப்போலியன், "நீங்க ஏதாவது பதவி தந்தால் நிச்சயம் வருகிறேன்" என்றாராம் நெப்போலியன்.. உடனே கருணாநிதியிடம் நேருவிடம், "உன்னுடைய மருமகனை தமிழ்நாடு முழுக்க அனுப்பி பேச வைத்தால் நன்றாக கூட்டம் கூடும்" என்றாராம்.
மீட்டிங்கா? ஷூட்டிங்கா?
ஒருகட்டத்தில் கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் நெப்போலியன்.. காரணம், சினிமாவில் பிஸியாக படங்களில நடித்து கொண்டிருந்தார். அரசியலுக்குள் நுழைந்தால், கட்சி கூட்டங்களிலும் கலந்துகொண்டு, ஷூட்டிங்கிலும் பங்கேற்பது சிரமம் என்று கருதினார்.. அதனால், மீட்டிங்கா? ஷூட்டிங்கா? என்று யோசித்து, மீட்டிங்கை தவிர்த்துவிட்டார்.
ஒருமுறை, நெப்போலியன், கமல் நடித்த தசாவதாரம் படத்தை பார்க்க பிரிவியூ தியேட்டருக்கு சென்றார் கருணாநிதி.. அதில், நெப்போலியனின் நடிப்பை கண்டு அசந்த கருணாநிதி, அரசியலுக்கு நெப்போலியனை அழைத்து வந்திருந்தால், ஒரு நல்ல நடிகனை இழந்திருப்பேனே என்றாராம்.
அரசியல் இயக்குனர் இமயம்
எந்த கேரக்டர் தந்தாலும் நெப்போலியன் நடிப்பில் அசத்திவிடுவதை அறிந்த கருணாநிதி, 'சினிமாவிலேயே தொடர்ந்து நடி.. அரசியலை பிறகு பார்த்துக்கலாம், எப்போது அரசியலுக்கு வரவிரும்புகிறாயோ, அன்றைக்கு வா என்றாராம்.
அந்தவகையில், கருணாநிதியால் பாராட்டு பெற்றவர் நடிகர் நெப்போலியன். படங்களில் நடித்து முடித்து சில வருடங்களுக்கு பிறகுதான் அரசியலுக்கு வந்தார் நெப்போலியன்.. அதாவது, நெப்போலியனை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றால், அரசியலில் அறிமுகப்படுத்தியது "அரசியல் இயக்குனர் இமயம்" கருணாநிதி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications