150 கோடி சமந்தாவுக்கு? ஜன்னலுக்கு வெளியே விழுந்த அறிக்கை.. ரவி மோகன், ஆர்த்திக்கு கோரிக்கை: பிரபலம்
சென்னை: ரவி மோகன் ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ரவி மோகனிடம் இருந்து தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட சென்னை குடும்ப நல நீதிமன்றம், வழக்கை ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் ஆர்த்தி தம்பதியினருக்கு விடுத்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "ஜெயம்ரவி - ஆர்த்தி இருவருமே பிரபலங்களாக உள்ளார்கள்.. இன்று கோர்ட்டுக்கும் வழக்கு வந்தது.. அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவகாரம்
இது அவர்களின் குடும்ப விவகாரம், அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம்.. இவர்கள் சொல்வதில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், இரு பக்கமும் நியாயமும் உள்ளது.. கடந்த 2000ம் ஆண்டில், நடிகர் கமல்ஹாசன், பிரபல நடிகையுடன் ஒரே வீட்டில் வாழ்வதாக கிசுகிசுக்கள் வந்தன. அப்போது இதுகுறித்து ஒரு வார இதழில் ஓபனாக பேட்டி தந்த கமல்ஹாசன், என் வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க நீ யார்? என்று கேட்டார்..
அப்படித்தான் ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரத்தையும் அனைவரும் அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், ஒருகட்டத்தில் ஜன்னலுக்கு வெளியே வந்து விழ ஆரம்பித்துவிட்டன இரு தரப்பினரின் அறிக்கைகளும்.
பல்லாவரம் பெண் சமந்தா
இப்போது மாதம் 40 லட்சத்துக்கு ஜீவனாம்சம் கேட்டுள்ளார் ஆர்த்தி.. இந்த நேரத்தில் பல்லாவரத்தை சேர்ந்த சாதாரண பெண் சமந்தாவை பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க, நாகேஸ்வரராவ் வீட்டுக்கு மருமகளாக சென்றபோது, அனைவருமே நடிகை சமந்தாவை பாராட்டினார்கள். ஆனால், நாக சைதன்யாவுடன் விவாகரத்து என்ற பேச்சு வந்தபோது, சமந்தாவின் டார்கெட் 100 கோடி, 150 கோடி.. அதனால்தான், சமந்தா விவாகரத்து செய்கிறார்.. நாக சைதன்யா மீது ஒரு தவறும் இல்லை" என்று தெலுங்கு மீடியாக்கள் எழுதித்தள்ளின..
எனக்கு 10 பைசா வேணாம்.. தசை அழற்சி நோய் எனக்கு இருந்தாலும், சொந்த காலில் நிற்க முடியும் என்று சமந்தா அறிவிக்கவும், அப்போதுதான் சமந்தாவின உச்சம் வேற லெவலுக்கு போனது. ஆனால், இங்கே ஆர்த்தி விவகாரத்தில் தலைகீழ் நிலைமை..
40 லட்சம் ஜீவனாம்சம்
மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் என்றால், வருடத்துக்கு மூன்றரை கோடி ரூபாய் வருகிறது.. ஜெயம் ரவியின் சம்பளம், 8 முதல் 10 கோடி என்று அவரது மாமியார் ஒருமுறை சொல்லியிருந்தார். எனினும், இனி ஜெயம் ரவிக்கு தொடர்நது படங்கள் வருமா? இவ்வளவு சம்பளம் வருமா? இது முழுமையாக கைக்கு வருமா? என்பது தெரியவில்லை.
உண்மையிலேயே ஆர்த்தி தம்பதிக்குள் என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை.. குடும்பத்தில் வாழ பிடிக்கவில்லை என்று அலறியடித்து ஒருவர் ஓடும்போது, எத்தனை நாளைக்குதான் பிடிக்காத நபரை அழைத்துக் கொண்டு வந்து இழுத்து உட்கார வைக்க முடியும்? கோர்ட்தான் இந்த விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டும்..
அறிக்கை போர்கள்
ஆனால், இவர்களின் அறிக்கை போர்களை உடனேயே நிறுத்தி கொள்ள வேண்டும். பிரபலங்கள் இப்படி செய்யும்போது, விவாகரத்து என்பதே விளையாட்டுத்தனம் என்று இன்றைய தலைமுறையினர் நினைத்து கொள்ள கூடாது.
முன்னுதாரணமாக திகழும் பிரபலங்கள், இந்த பிரச்சனைகளை பேசி பேசியே, வருங்கால தலைமுறைகளை இந்த மனநிலைமைக்குள் தள்ளிவிடாதீர்கள்... உங்கள் பிரச்சனைகளை நீதிமன்றத்தில் முறையிடுங்கள், நீதிமன்றம் உங்களை பார்த்துக் கொள்ளும். இனி அறிக்கைகளை இருவருமே தரவேண்டாம் என்பதே என் விருப்பம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications