ரூ.250 கோடி சொத்து.. மனைவிக்கு 1 தங்க செயின் வாங்கி தரல.. ஆனால் ஊருக்கே கொட்டித்தரும் பிரபல நடிகர்
சென்னை: ரூ.250 கோடி சொத்துக்காக, 4வது திருமணம் செய்துள்ளதாக, நடிகர் பாலா மீது சோஷியல் மீடியாவில் விமர்சனங்களும், சலசலப்புகளும் எழுந்தன.. இப்படிப்பட்ட சூழலில், இந்த விமர்சனங்களுக்கு நடிகர் பாலா பதிலடி ஒன்றை தந்திருக்கிறார்.
41 வயதாகும் நடிகர் பாலா, சமீபத்தில்தான் மறுமணம் செய்திருந்தார்.. கடந்த 2010 முதல் 2019 வரை முதல் மனைவி பாடகி அம்ருதா சுரேஷுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார். இதற்கு பிறகு, 2வதாக டாக்டர் எலிசபெத் என்பவருடன் லிவ்விங் இன் உறவில் இருந்ததாக தெரிகிறது. பிறகு ஒரு நடிகையுடன் திருமணம் என்றார்கள்.

வாரிசு: இப்படிப்பட்ட சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, "மறுபடியும் முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தன்னுடைய ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு" என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று கேரள மாநிலம் கழூர் பாவக்குளம் கோவிலில் தன்னுடைய உறவினர் கோகிலா என்பவரை 4வதாக திருமணத்தை செய்திருந்தார்.
தன்னுடைய ஆபரேஷனுக்கு பிறகு, ஒரு துணை வேண்டும் என்று நினைத்ததால், திருமணம் செய்துகொண்டதாகவும், இதனால் தன்னுடைய அம்மாவின் ஆசையும் நிறைவேறும் என்றும் கூறியிருந்தார். ஆனால், பாலாவின் 4வது திருமணத்தை சிலர் சோஷியல் மீடியாக்களில் கிண்டல் கேலி செய்து விமர்சித்தார்கள். குறிப்பாக, "பெண் கிடைக்காமல் வீட்டில் வேலைக்காரியாக இருந்தவரை கல்யாணம் செய்துள்ளார்"என்று கிண்டலடித்தனர்.
வேலைக்காரி: ஒருஅளவுக்கு மேல் பொறுமை இழந்த பாலா, "என் மனைவியை நீங்கள் எப்படி வேலைக்காரி என சொல்ல முடியும்? நான் உங்கள் மனைவி பற்றி இப்படி பேசட்டுமா? கோகிலாவை காயப்படுத்த யாரும் நினைக்காதீங்க.. என் மனைவி மீது இப்படி திட்டமிட்டே சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எல்லாம் யார் காரணம் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை நான் சும்மா விடமாட்டேன்" என்று கோபப்பட்டிருந்தார்.
தம்பதி: இப்படிப்பட்ட சூழலில், Galatta சேனலுக்கு நடிகர் பாலா தம்பதியினர் பேட்டி தந்துள்ளனர்.. அந்த பேட்டியில், ரூ.250 கோடி சொத்துக்காகத்தான் இந்த திருமணம் நடந்ததாக கூறுகிறார்களே? அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பாலா, "நான் எதுக்கு அவங்களுக்கெல்லாம பதில் சொல்லணும்? என்னுடைய மனசாட்சிக்கு தெரியும்.. அப்படியே இருந்தாலும் அதில் என்ன தப்பு? நான் கடந்த 25 வருஷமாக சமூக சேவை செய்துட்டு இருக்கேன். கல்யாணம் ஆகி, என் மனைவிக்கு 1 செயின்கூட வாங்கித்தந்தது இல்லை.. ஆனால் , இப்போகூட, ஒரு நபருக்கு, ஹார்ட் ஆபரேஷனுக்கு நிதியுதவி செய்துட்டுதான் வந்திருக்கேன்.. அதேபோல, எங்கள் வீட்டு பக்கத்தில், பள்ளிக்கூடம் ஒன்றை கட்டித்தந்துள்ளேன்.
லட்சியம்: இதுவே வேறொரு மனைவியாக இருந்தால், இப்படி ஊருக்காக பணம் செலவு செய்வதை அனுமதிப்பார்களா? என்னுடைய லட்சியம், பார்வை தெரிந்துள்ளதால்தான், நான் பிறருக்கு செய்யும் உதவிகளுக்கு துணையாக என்னுடைய மனைவி இருந்து வருகிறார். என்னுடைய பணம், காசு, சொத்து எதுவானாலும், அது நல்ல விதத்தில் பிறருக்கு பயனுள்ள வகையில் போய் சேரும். நாளைக்கு எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், அதுவும் இந்த லட்சியங்களையே ஃபாலோ செய்யும்" என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications