ரூ.300 கோடி பங்களா.. அப்ரூவர் ஆகிறாரா திமுக "திமிங்கிலம்"? யாரிந்த ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன்: பிரபலம்
சென்னை: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரை பார்க்கச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போது ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதையே திருச்சி சூர்யாவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், விக்ரம் ஜுஜு, ஆகாஷ், ரத்தீஷ் போன்றோர் குறித்தும் நிறைய தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திருச்சி சூர்யா, "இந்த விவகாரத்தை வெடிக்க வைத்ததே செந்தில் பாலாஜிதான்.. அவர் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டார்.. அப்ரூவர் ஆகிவிட்டார்..

அதிமுகவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கு டிடிவி தினகரனிடம் வந்தார்.. டிடிவி தினகரனிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள திமுகவுக்கு வந்தார்.. தன்னிடம் பணம் , அதிகாரம் உள்ளதே என்பதற்காக, சுயநலத்திற்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று நினைக்கிறார்.
400 நாள் ஜெயில்
400 நாள் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பயம் இன்னும் செந்தில் பாலாஜிக்கு போகவில்லை.. அண்ணாமலை கை ஓங்கியிருந்தவரைக்கும், செந்தில் பாலாஜி வெளியே வரமுடியவில்லையே? இப்போது பதவியிலிருந்து செந்தில் பாலாஜி ஒதுங்க காரணமே, டாஸ்மாக் ஊழலில் மறுபடியும் செந்தில் பாலாஜியின் தலை உருளும் என்பதால்தான்..
இந்த முறை தேர்தலில் பெரிதாக பணத்தை இறக்க மாட்டார்.. சூழ்நிலைகள் தேவைப்பட்டால் திமுகவில் இருக்கக்கூடிய 15 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தாய்க்கழகமான அதிமுகவில் சென்று செந்தில் பாலாஜி இணையலாம்.
பண முதலைகள்
ரத்தீஷ், ஆகாஷ், விக்ரம் ஜுஜு இவர்கள் 3 பேருமே திருச்சியை சேர்ந்தவர்கள்..இந்த 3 பேருமே என்னுடைய ஸ்கூல் பிரண்ட்ஸ்.. இவர்கள் மூவரும் திருச்சியில் இருந்து உதயநிதியிடம் நெருக்கமாகியிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம், உதயநிதிக்கு நெருக்கமானவர் திருச்சியில் இருப்பதால்தான்.. அவர்மூலம்தான் உள்ளே கொண்டுவரப்பட்டு, இவர்களை பண முதலைகளாக்கி, வளர்த்து விடப்படுகிறார்கள். ஆனால், இதெல்லாம் தனக்கு தெரியாது என்கிறார் உதயநிதி.. ஆனால், அதை எப்படி ஏற்பது?
உதயநிதி வெறும் நடிகர் மட்டுமல்ல, தமிழகத்தின் துணை முதல்வர்.. காவல்துறை, உளவுத்துறை அத்தனையும் கைக்குள் இருக்கும்போது, அவர்கள் செய்தது தனக்கு தெரியாது என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை ரெய்டை பொறுத்தவரை, தமிழகத்துக்குள் நுழைவதற்கும், திமுகவை அழிப்பதற்கும், அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல் களத்தில் அடித்து உதைத்து, பாஜக அந்த இடத்தை பிடித்ததை போல, தமிழ்நாட்டிற்குள்ளும் 100 சதவீதம் அரசியல் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத்தான் இந்த ரெய்டு மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால், நீங்கள் செய்யாததையா பாஜக சொல்கிறது? உங்களிடம் இல்லாததையா பாஜக கேட்கிறது? என்ற சந்தேகமும் எழுகிறது.
டாஸ்மாக்கில் சம்பந்தப்பட்ட பணம்தான், மூவரிடமும் புழங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால்தான் டாஸ்மாக் விவகாரம் விரிவடைந்து கொண்டே போகிறது.
300 கோடி பங்களா
அன்று செந்தில் பாலாஜி நெஞ்சுவலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, உதயநிதி இரவு சந்திக்க சென்றார்.. அப்போது 2 பேரை மட்டும் உள்ளே அழைத்து சென்றார்.. ஒருவர் ஆகாஷ் பாஸ்கரன், மற்றொருவர் விக்ரம் ஜுஜு.. இவர்களை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? என்றுதான் தற்போது ட்விட்டரில் டிரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்..
ஜி ஸ்கொயருக்கு இடம் வாங்கினதில்தான் 300 கோடியில் பங்களா கட்டிட்டு இருக்கார் ரத்தீஷ்.. அவரது உடன்பிறந்த சகோதரர் ஐபிஎஸ் ஆபீசர் சர்வேஸ் என்பவரை, மத்திய அரசில் இருந்தவரை, தமிழகத்துக்கு அழைத்து வந்து பவர்புல் போஸ்ட்டிங் தந்து தமிழகத்தில் உட்கார வைத்துள்ளார்கள்.. " என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications