300 கோடியில் நடிகரின் பண்ணை வீடு.. முதல் மாடிக்கு கார் போகுதா? சென்னை கானத்தூரில் பிரமிப்பு: பிரபலம்
சென்னை: சென்னை கானத்தூர் கடற்கரை அருகே, கமல்ஹாசன் 300 கோடி ரூபாயில் பண்ணை வீடு கட்டுவதாக மீடியாக்களில் செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.. உண்மையிலேயே ரூ.300 கோடியில் கமல் வீடு கட்டியிருக்கிறாரா? திமுகவில் எம்பி சீட் கிடைக்குமா? என்பது பற்றியெல்லாம் விரிவாகவே பேசியிருக்கிறார்.
King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "தன்னுடைய ஓய்வு காலத்தில், பண்ணை வீட்டில் வாழ வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு நீண்ட நாட்களாகவே ஆசை.. ரஜினிக்கு பண்ணை வீடு இருக்கு.. சிவாஜி குடும்பத்துக்கு பண்ணை வீடு இருக்கு.. அர்ஜூன் குடும்பத்துக்கும் பண்ணை வீடு இருக்கு.. இப்படி எல்லாருக்கும் பண்ணை வீடு இருக்கு, கமலுக்கு இல்லை.

தன்னுடைய தாய், தந்தை காலத்திலிருந்து ஆழ்வார்பேட்டை வீட்டில்தான் பிறந்து, வளர்ந்து, குடியிருந்து வருகிறார். போட்கிளப்பில் 5 லட்சத்துக்கு வாடகை வீட்டுக்கு போனார். எப்போதுமே சினிமாவில் தான் சம்பாதித்ததையெல்லாம், மீண்டும் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்வதே கமலுக்கு விருப்பம்.. கமல் ஒரு பிறவிக்கலைஞன். பிறவிக்கலைஞர் என்று சிவாஜிக்கு அடுத்தபடியாக கமலைத்தான் சொல்கிறோம்.
இதெல்லாம் அதீத கற்பனை
300 கோடிக்கு வீடு என்று சொல்வதெல்லாம் அதீத கற்பனை.. அதிகபட்சம் 100 கோடி ரூபாயில் வீடு கட்டினாலே பெரிய விஷயம்.. 1 ஏக்கர் நிலம், 50 கோடிக்கு வாங்கலாம்.. 2 ஏக்கர் நிலம் இருந்தாலே 100 கோடியில் பண்ணை வீடு பிரம்மாண்டமாக கட்டிவிடலாம். அப்படியே கட்டினாலும் அதில் ஒருவர் மட்டும்தான் வாழ போகிறார்.. இப்போது 70 வயதாகிவிட்டது.
திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான வாய்ப்புகளும் கமலுக்கு உண்டு. நாடாளுமன்றத்துககு போகணும் என்று ஆசையாக உள்ளது. நிச்சயம் கமலுக்கு எம்பி சீட் கிடைத்துவிடும்.. கமல் தேசிய அளவில் உரையாற்றும்போது அது திமுகவுக்கு பலமாக இருக்கும். அந்தவகையில் கமலை திமுகவும் நிறையவே நம்பியிருக்கிறது. தமிழகம் முழுக்க கமல் சூறாவளி சுற்றுப்பயணம் கிளம்ப போகிறார்.
200 கோடி கடன் அடைக்கப்பட்டது
கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டின்மீது 200 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே ஆந்திரா வங்கியில் கடன் இருந்தது. அந்த கடன் சினிமாவால் ஏற்பட்டது. திரைப்பட துறையில் அடங்காத ஆர்வம் கொண்டதால்தான், தான் சம்பாதித்ததையெல்லாம் மீண்டும் சினிமாவிலேயே போட்டு படம் எடுத்து கொண்டிருக்கிறார் கமல். இதன்காரணமாக ஆழ்வார்பேட்டை வீடும் அன்று கடனாகிவிட்டது.
கமல் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து, திமுகவிற்கு எதிராக அரசியலை செய்தபிறகு, டெல்லியில் பிஜேபியின் தயவில், கமலின் அந்த வீட்டு கடன் முழுக்க அடைக்கப்பட்டுவிட்டது.
டார்ச் லைட் கட்சியை ஆரம்பித்து தந்தவர் பிரபல வழக்கறிஞர் ராஜசேகர். மக்களுக்கான நீதி இருக்க வேண்டும் என்பதற்காகவே, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரை தேர்ந்தெடுத்து தந்தார். இப்ப அவரும் கட்சியை விட்டு வெளியே போயிட்டார். திமுகவை எதிர்த்து நின்றதால் கமலின் கடன் அடைக்கப்பட்டது.
கிரகப்பிரவேசம் + எம்பி சீட்
200 கோடி சம்பளம் வாங்குபவர்களுக்கு, தற்போது 300 கோடியில் வீடு என்பது சாதாரண விஷயம்.. தன்னுடைய அந்திம காலத்தில் மகள்களுடன் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக, சொந்தமாக பிரம்மாண்டமான வீட்டை கானத்தூர் கடற்கரையில பண்ணை வீடாக மாற்றி கட்டிக் கொண்டிருக்கிறார். 70 வயது ஆனபிறகுதான் நீண்ட கால தன்னுடைய பண்ணை வீட்டு ஆசையை நிறைவேற்றி கொண்டுள்ளார் கமல்.
முதல் தளத்துக்கே கார் போகுதாம்.. இப்போது பண்ணை வீடு கட்டி முடிக்கப்பட்டு, கிரகப்பிரவேசத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராகவும், அந்த வீடு கட்டி குடியேறவும் என இரண்டுமே ஒரே நேரத்தில் நடக்கக்கூடிய வாய்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications