400 கோடியும் நாசமா போச்சு.. வடிவேலு பக்கம் திரும்பும் "கணைகள்".. ராஜ்கிரணை இப்படியா சொல்றது: பிரபலம்
சென்னை: "அந்த டைரக்டர் என்னுடைய காமெடியை கேட்டு ரசிப்பார்.. ஆனால், தான் எழுதி தந்ததை மட்டுமே பேசி நடிக்க சொல்வார். அந்த டைக்ரக்டரால்தான் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் நின்றது.. அந்த பிரம்மாண்ட டைரக்டரால்தான் நான் 7 வருடம் நடிக்கவில்லை" என்று வடிவேலு கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் "இம்சை அரசன் 24-ம் புலிகேசி".. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்து அதன் முதற்கட்டப் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இம்சை அரசன் 24ம் புலிகேசி
இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் தந்தது.. எனவே, வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் வேறு எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் போய்விட்டது.. கத்தி சண்ட, மெர்சல் போன்ற படங்களில் நடித்தாலும், அவரால் சினிமாவில முழுக்கவனம் செலுத்த முடியவில்லை.
இதற்கு நடுவில், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் - வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.. ஆனாலும், எந்தவொரு முடிவுமே எட்டப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
பிரம்மாண்ட இயக்குனர்
இந்நிலையில், பிரம்மாண்டமான இயக்குனரால்தான், 7 வருடமாக தான் சினிமாவில் நடிக்கவில்லை என்று வடிவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.
அதில், "வடிவேலு 7 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. இதற்கு காரணம் விஜயகாந்த் என்றார்கள்.. பிறகு ஜெயலலிதா என்றார்கள்.. தான் சினிமாவில் நடிக்காததற்கு காரணமே, பிரம்மாண்ட இயக்குனர்தான் என்று வடிவேலு தற்போது சொல்கிறார்.
2 கோடிக்கு அரங்கம்
"அந்த டைரக்டர் என்னுடைய காமெடியை கேட்டு ரசிப்பார்.. ஆனால், தான் எழுதி தந்ததை மட்டுமே பேசி நடிக்க சொல்வார். அந்த டைக்ரக்டரால்தான் அந்த படம் நின்றது.. அந்த பிரம்மாண்ட டைரக்டரால்தான் நான் 7 வருடம் நடிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
ஆனால், உண்மை என்னவென்றால், வடிவேலுவின் அகங்காரம், திமிர்தான் இதுக்கெல்லாம் காரணம், டைரக்டர் சொன்னதை கேட்க மாட்டார், டைரக்டர் தந்த காஸ்ட்யூமை போடவும் மாட்டார்.. 2 கோடி செட் போட்டிருந்தால் அதை மாற்ற சொல்லி டிமாண்டு செய்வார்.. வடிவேலு கொடுத்த டார்ச்சரால்தான், படம் நின்றது என்று சங்கர் தரப்பில் சொல்கிறார்கள். இதுல வடிவேலு சொல்றதை நம்புவதா? சங்கர் சொல்வதை நம்புவதா? தெரியவில்லை." என்றார்.
தனிமனித தாக்குதல்
நேற்றைய தினம் MGR TV Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "வடிவேலு சறுக்கலுக்கு அவரே தான் காரணம்.. விஜயகாந்த்தை தாக்கி பேசியது யாருக்குமே பிடிக்கவில்லை.. விஜயகாந்த் மீது தனிமனித தாக்குதல் செய்தது சரியா? சின்ன கவுண்டர் படத்தில் ஒரு வேட்டி, ஒரு சட்டையுடன் நடித்து கொண்டிருந்த வடிவேலுவுக்கு, நான்கைந்து வேட்டி சட்டையை விஜயகாந்த் வாங்கி தந்ததை மறந்தவர்.. ராஜ்கிரணை ஆசான் என்று சொல்லும் வடிவேலு, ராஜ்கிரண் தனக்கு சம்பளம் தரவில்லை என்று புகாரும் சொல்கிறார்.
ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் வாங்கும் அளவுக்கு வளர்ந்தார் வடிவேலு.. 6 கோடிக்கு அட்வான்ஸ் தரப்பட்ட இம்சை அரசன் 2 படம் ஏன் பாதியில் நிறுத்தப்பட்டது? வடிவேலுவின் டாமினேஷன்தான் காரணம்.. படத்துக்காக போடப்பட்டிருந்த செட்டை மாற்ற சொல்லி, டார்ச்சர் தந்ததுதான் காரணம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications