மிஸ்ஸான ரூ.8 கோடி.. விஷாலின் வீர சபதம்.. அதுவிடுங்க, யோகி டா பின்னாடியிருக்கும் சர்ப்ரைஸ்: பிரபலம்
சென்னை: தன்ஷிகாவுடன் விரைவில் திருமணமானதுமே விஷாலுக்கும் நிறைய பொறுப்புகள் கூடும்.. தன்ஷிகாவும், விஷாலை நன்றாக கவனித்து கொள்வார் என்று அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்கள். திருமணத்துக்கு பெண் கிடைத்துவிட்டதால், நடிகர் சங்க கட்டிட பணிகளையும் இனி விஷால் அருகிலிருந்தே கவனித்து கொள்வார்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Reflect prime என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "ஆந்திராவில் பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு விஷாலுடன் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.

அப்போதுதான் நடிகர் சங்கம் கட்டியதும்தான் திருமணம் என்று அறிவித்தார்.. இப்படி திடீரென வீரசபதங்கள் போடவும், பெண் வீட்டில் அதுவரை காத்திருக்க தயாராக இல்லை.. பிறகு நடிகர் சங்கத்திலேயே பிரச்சனை கிளம்பியது.. 8 கோடி ரூபாயை சாப்பிட்டுவிட்டதாக புகார் கிளம்பியது..
அதிமுகவில் மோதல்
இதற்குபிறகு அதிமுகவில் விஷாலுக்கு மோதல் இருந்தது.. எனவே, திடீரென அரசியலில் நிற்பதாக அறிவித்தார்.. இப்படி விஷாலின் நடவடிக்கைகளில் பெண் வீட்டினருக்கு நம்பிக்கை வரவில்லை.. எனவே, அந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது..
இப்போது தன்ஷிகாவுடன் திருமணம் என்று அறிவித்துள்ளார்.. விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே பெரிய லவ் இருந்தது போல தெரியவில்லை.. இருவருமே வேறு வேறு டிராக்கில் பயணித்தவர்கள்.. இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவுமில்லை.. தன்ஷிகாவும் சின்ன சின்ன படங்களில், சின்ன நடிகர்களுடன் நடித்தார்..
சிலம்பம் கற்றுக் கொண்டார்
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் விஷால் இருந்ததால், சில பிரச்சனைகளுக்காக அவரை அணுக நேரிட்டிருக்கலாம். அப்போது தன்ஷிகாவுக்காக பாசிட்டிவ்வாக அவர் கேட்ட உதவிகளை செய்து தந்திருக்கிறார்.
யோகிடா கூட தர்ஷிகாவின் சொந்த படம்.. தர்ஷிகாவின் மாமாதான், இந்த படத்தை எடுத்தார்.. தர்ஷிகாவை ஆக்ஷன் ஹீரோயினாக காட்ட வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தை எடுத்தார்.. இதற்காக சிலம்பம் நன்றாக கற்றுக் கொண்டார் தன்ஷிகா.. 8 வருடங்களுக்கு முன்பு, பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில், தன்ஷிகாவின் மாமா அருண்குமார் இறந்துவிட்டார். அப்போதிருந்தே இந்த படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.. இப்போது கோவை தயாரிப்பாளர் மூலம் மீண்டும் இந்த படம் முழுமை அடைந்துள்ளது.
குடும்பத்தினர் மகிழ்ச்சி
கபாலி படத்தில் யோகி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தன்ஷிகா.. எனவே, இந்த படத்துக்கும் யோகிடா என்று பெயர் வைத்திருக்கிறார்.. கபாலி போல ஆக்ஷன் ஹீரோயினாக இதிலும் செய்துள்ளார்.
இப்போது விஷாலுக்கு படங்கள் எதுவும் சரியாக ஓடாத சூழலில், வெறுமையான சூழலில், தன்ஷிகாவின் நட்பு கிடைத்துள்ளது.. அது காதலாக மாறியிருக்கிறது.. இருவருமே உயரத்தில் பொருத்தமானவர்கள்.. 48 வயதாவதால், சீக்கிரத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகவேண்டும் என்பதே விஷாலின் பெற்றோரின் விருப்பமாக இருந்து வருகிறது..
அன்பான பெண் தன்ஷிகா
திருமணமானதுமே விஷாலுக்கும் நிறைய பொறுப்புகள் கூடும்.. தன்ஷிகாவும், விஷாலை நன்றாக கவனித்து கொள்வார் என்று குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பொண்ணு கிடைத்துவிட்டதால், இனி நடிகர் சங்க கட்டிட வேலைகளில் முன்னின்று விஷால் கவனித்து கொள்வார் என தெரிகிறது.. தன்ஷிகாவை பொறுத்தவரை அன்பான பெண், பிறருக்கு மரியாதை தரக்கூடிய பெண், மிகவும் பண்பான பெண்.. அந்த பொண்ணுக்கு நலல வாழ்க்கை அமைந்தால் மகிழ்ச்சிதான்" என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications