20 கோடியை கொட்டி ரூ.80 கோடி அள்ளுதே டூரிஸ்ட் ஃபேமிலி, அது பெரிய படம்.. சுருக்னு சொன்ன நடிகர் சாம்ஸ்
சென்னை: "20 கோடி முதலீடு செய்து 80 கோடி வசூல் செய்யும் படங்களே பெரிய படங்களாக கருதப்படும்.. இங்கு சின்ன படம், பெரிய படம் என்று எதுவும் இல்லை.. அதை தீர்மானிப்பது கோடிகள் இல்லை, மக்களும் மீடியாக்களும்தான் என்று பிரபல நடிகர் சாம்ஸ் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இதற்கு உதாரணமாக பல தயாரிப்பாளர், பத்திரிகையாளர்கள் கருத்து கூறியிருப்பதை போலவே, டூரிஸ்ட் ஃபேமிலி பட வெற்றி குறித்தும் சாம்ஸ் பேசியிருக்கிறார்.
அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. இப்படத்தில் காளி கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், சாம்ஸ், ஷெலி மற்றும் விஷ்வா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.. இந்த படம் வரும் ஜூன் மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது.

சின்ன படம், பெரிய படம்
இந்நிலையில், இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது நடிகர் சாம்ஸ் பேசுகையில், "சிலநேரம் ஒரு நடிகனுக்கு நல்ல படம், நல்ல குழு, நல்ல ரோல், நல்ல சம்பளத்துடன் படங்கள் கிடைப்பது அபூர்வம், சில நேரங்களில் தான் இதெல்லாம் அமையும். அந்தவகையில் எனக்கு இந்த படத்தில் அனைத்தும் அமைந்துள்ளது.
எனக்கு இந்த படத்தில் நடித்தது முழுமையான திருப்தியை தந்துள்ளது.. ஊறுகாய்க்காரர் ரோல் இதில் செய்திருக்கிறேன்.. இந்த கேரக்டருக்காக படத்தயாரிப்பில் எடுத்துக் கொண்ட மெனக்கெடல்தான் வியப்பை தந்தது.. என்னுடைய டிரஸ், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் அதிகமான கவனத்தை செலுத்தினார்கள்.. அதேபோல வடிவேலு சார் இப்படத்தில் ஒரு பாடல பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.
ஊறுகாய்க்காரர்
இங்கு பேசும்போது, சின்ன படம் என்று குறிப்பிட்டு சினேகன் சொன்னார்.. சின்ன படம், பெரிய படம் எது என்பதை தீர்மானிப்பது மக்கள்தான். மீடியாதான். ரூ.300 கோடி செலவில் ஒரு படம் எடுத்து, அது ரூ. 302 கோடி வசூலித்தால் பெரிய படம் கிடையாது. 15 கோடியில், ரூ.20 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் டூரிஸ்ட் பேமிலி படம், இப்போது ரூ.80 கோடி வசூலை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதுதான் பெரிய படம். மக்களால் கொண்டாடப்படும் படம்தான் பெரிய படம்" என்றார்.
டூரிஸ்ட் ஃபேமிலி வசூல்
முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்த பாலாஜி பிரபு டூரிஸ்ட் பேமிலி பற்றி பேசும்போது, "தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன..
ஆனால், வெற்றிப்படங்கள் எதுவுமே இல்லை.. இந்த வருடத்தில் வெற்றி படங்களில் குட் பேட் அக்லி, குடும்பஸ்தன், டிராகன் போன்றவற்றை மட்டுமே சொல்லலாம். டூரிஸ்ட் பேமிலி 4 கோடியில் எடுத்து, 75 கோடி லாபம் உலக அளவில் வசூலித்து வருகிறது.. இன்னமும் 150 தியேட்டரில் ஓடிக் கொண்டிருப்பதால், இந்த கலெக்ஷன் இன்னும் அதிகமாகும்" என்று கூறியிருந்தார்.
முதல் வாரமே சக்ஸஸ்
அதேபோல, 2 நாட்களுக்கு முன்பு ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், "2 வீக் எண்ட்டில் டூரிஸ்ட் ஃபேமிலி 50 கோடி வசூலை தந்துவிட்டது.. 80 கோடி வரை அதிகபட்சம் வசூல் கிடைக்கும்..
டூரிஸ்ட் ஃபேமிலி படம் நன்றாக ஓடுகிறது என்பதற்காக யாருமே வீட்டிலேயே உட்கார்ந்துவிடவில்லை. தினமும் ஏகப்பட்ட புரமோஷன்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டுமானால் புரமோஷன் அவசியமாகும். அதை டூரிஸ்ட் ஃபேமிலி சிறப்பாக செய்து வருகிறது" என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications