Run serial: ரன் வேகம் எடுத்திருக்கு...கதை சூடு பிடிச்சு இருக்கு!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் பெயருக்கு ஏற்ற மாதிரி வேகம் எடுத்து இருக்கிறது.கதையின் போக்கும் நன்றாக இருக்கிறது. குடும்ப தலைவர் இறந்து போனால், அந்த குடும்பம் எல்லா விதத்திலும் எப்படி கஷ்டப்படும் என்பதை காண்பித்து வருகிறார்கள்.
குடும்பத்தில் முதலில் கணவன் மனைவிக்குள் ரகசியம் இருக்க கூடாது. குடும்ப நிலைமையை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகள் வளர்ந்த நிலையில், அவர்களுக்கு குடும்ப தலைவர் பற்றிய அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும்.
இங்கு ஆர்.கே.எனப்படும் டாக்டர் ராதா கிருஷ்ணன், பெரும் பணக்காரர். பிரபல ஆஸ்பிடலின் நிர்வாகி. இப்படி இருந்தும் அவருக்கு பல கஷ்டங்கள், டாக்டர், நர்ஸுகளுக்கு கூட சம்பள பாக்கி.

திவ்யா ஆர்.கே.டாக்டர்
ஆர்.கே . தனது இரண்டாவது மகள் திவ்யாவை நன்றாக படிக்க வச்சு,ஆஸ்பிட்டாலிட்டி இன்டெர்ன் செய்ய, ஹாங்காங் அனுப்பி வைக்கிறார். அவளும் நன்றாக படிச்சு முடிச்சுட்டு வர,இங்கு இவரின் பிரச்சனை அவளை முதலில் கார் சீசிங் வடிவில் தாக்குகிறது. திவ்யாவின் அப்பா 6 மாதமாக ஆடி காருக்கு டியூ கட்டவில்லையாம்.

அப்பா கார்
தனது ஆடி காரை சீஸ் செய்த சக்தி, வீட்டில் அம்மா, அப்பா கல்யாண நாள் கொண்டாட்டத்தில் இருக்கும் போது, அப்பாவின் காருக்கும் டியூ கட்டலை , உங்களுக்கு கார் வாங்கினா டியூ கட்டும் வழக்கமே கிடையாதுன்னு கிண்டல் பண்றான். அதற்கு சற்று முன்னர்தான், அப்பா திவ்யாவிடம் எல்லாத்தையும் நீ பார்த்துக்கோம்மா.எனக்கு வெளியில அவசர வேலை இருக்குன்னு சொல்லிட்டு போறார்.

இல்லை அப்பா
அப்பா வெளியில போயிருக்கார்..உனக்கு என்ன வேணும்னு கேட்கிறாள் திவ்யா. உங்க அப்பா கார் வேணும்..பொய் சொல்லாதே.. எங்கே போயிருக்கார் உன் அப்பான்னு கேட்க, இதோ பாரு பிரச்சனை பண்ணாம போயிரு. இங்கே பெரிய பெரிய போலீஸ் ஆஃபிஸர்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க.சொன்னேன்..உன்னை உடனடியா உள்ளே தள்ளிருவாங்க தெரியுமான்னு மிரட்டறா.

ஸ்டேஷனில் மறுநாள்
மறுநாள் ஸ்டேஷனில் அப்பாவை காணோம் என்று திவ்யாவும், கட்டிக்கப் போற பெண் கேரோலினை காணோம் என்று சக்தியும் போலீஸ் கம்பளைண்ட் பண்ண வந்து சந்திக்கறாங்க.இரண்டு நாள் கழிச்சு பார்த்தால் ஆர்.கே. கேரோலின் இருவருமே பிணமாக கிடைக்கிறார்கள்.
அப்பாவை ரொம்ப நம்பி இருந்த திவ்யாவுக்கு ஆஸ்பிடலே நஷ்டத்தில் இருக்கிறதே என்கிற கவலை. நல்ல பெண் என்று தான் காதலிச்ச கேரோலின் டாக்டர் என்று ஒரு அடையாள அட்டையை வச்சு இருந்தது சக்திக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது.
திவ்யா சக்தி இருவருமே இப்போது ஒரு மர்மத்தை உடைக்க வேண்டிய ஓட்டத்தில் இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications