கூச்சப்பட்ட ரூபிணி.. குச்சிப்புடி டான்சருக்கு சிவராத்திரி பாட்டா? அதுவிடுங்க, நடிகைக்கு பட்டை நாமம்
சென்னை: நடிகை ரூபிணி மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.. சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர்.. அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து நடித்த ரூபிணி ஒரு விவிஐபி ஆவார்.. அப்படிப்பட்டவர், யாராவது ஒரு ஹீரோவின் மேனேஜருக்கு போன் செய்து, திருப்பதி கோயிலுக்கு வருவதை பற்றி கூறி உதவி கேட்டிருக்கலாம்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
நடிகை ருபிணி கமல், ரஜினி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். கடந்த 1995ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் கற்றுத் தரும் பள்ளியையும், மும்பையில் நடத்தி வருகிறார்.

திருப்பதி கோயில்
கடந்த வாரம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு செல்ல விரும்பியிருக்கிறார் ரூபிணி. அப்போது, வேலூரில் பிரசித்தி பெற்ற கோயிலின் பிஆர்ஓ-வாக பணியாற்றும் சரவணன் என்பவர் ரூபிணிக்கு அறிமுகமாகியிருக்கிறார். விஐபிக்களுக்கு பெருமாளை தரிசிக்க தான் தான் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, ஆந்திர அரசியல்வாதிகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் ரூபிணியிடம் காட்டியிருக்கிறார்.
இதனால், சரவணனின் பேச்சை நம்பிய நடிகை ரூபிணி, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய, 77,250 ரூபாய் என்றதும், அதை சரவணனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.. பிறகு தங்கும் விடுதி கட்டணமாக, 15,000 ரூபாய் வாங்கியிருக்கிறார்.
பணம் மோசடி - புகார்
இறுதியில் 1.50 லட்சம் ரூபாய்வரை, ரூபிணியிடம் சரவணன் வாங்கிவிட்டாராம். ஆனால், கடைசிவரை பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யவில்லையாம். இதற்கு பிறகுதான். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சரவணன் மீது ஆந்திர மாநிலம், மற்றும் தமிழக மாநில முதல்வர்களுக்கு ரூபிணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யூடியூடிப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ரூபிணியின் திரையுலக வாழ்க்கை பற்றி கூறியிருக்கிறார். அதில், "மும்பையில் குஜராத் படம் ஒன்றின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக குழந்தையாக இருந்த ரூபிணியை அழைத்து சென்றுள்ளனர் அவரது பெற்றோர். ரூபிணியை பார்த்த அங்கிருந்த டைரக்டர், உடனே ரூபிணியின் அப்பாவிடம், குழந்தையை படத்தில் நடிக்க வைக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்..
அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரூபிணி.. அப்பாவின் வற்புறுத்தலால் சினிமாவில் நடிக்க வந்தார்.. ரூபிணியின் அம்மா டாக்டர், அப்பா வழக்கறிஞர்.. மிகவும் புத்திசாலி பெண் ரூபிணி.. மிகப்பெரிய டான்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன்னுடைய அம்மாவை போலவே டாக்டராக வேண்டும் என்றும் விரும்பினார். எனவே, நடிப்பின் மீது அதிகமான பிரியம் இல்லை..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குருவிடம், குச்சிப்புடி நடனம் கற்றுக் கொண்டார். மும்பையிலிருந்த பூர்ணிமா பாக்யராஜின் அம்மாவும், ரூபிணியின் அம்மாவும் தோழிகள். இதனால் பூர்ணிமாவை, அக்கா என்றுதான் கூப்பிடுவாராம் ரூபிணி.
அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு
இதற்கு பிறகு, 'சார் ஐ லவ் யூ' என்ற படத்துக்கு ஹீரோயின் தேடி கொண்டிருந்தார் பாக்யராஜ் . அப்போதுதான் ரூபிணியை பற்றி பாக்யராஜிடம் சொல்லியிருக்கிறார் பூர்ணிமா. பாக்யராஜும் ரூபிணியை வைத்து, அந்த படம் எடுத்தார். ஆனால், பாதியிலேயே நின்றுவிட்டது. எனினும், அதற்கு பிறகு பல படங்களில் ரூபிணி நடித்து முன்னணி நடிகையானார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில், சிவராத்திரி பாடலுக்கு பர்பார்மென்ஸ் செய்ய முடியாது, தான் ஒரு குச்சிப்புடி டான்சர் என்றாராம். அதற்கு கமல் கட்டாயம் நடித்துதான் ஆக வேண்டும் என உறுதியாக சொல்லி உள்ளார். பிறகு, மனோரமா ஆச்சிதான், அனைத்து விதமான நடிப்பும் ஆர்ட்டிஸ்ட்டுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று ரூபிணிக்கு அட்வைஸ் தந்தாராம்.. இந்த பாட்டை, நடிகர் சந்தானம் ரீமிக்ஸ் செய்திருந்தபோதுதான், அந்த பாட்டின் வெற்றி தனக்கு தெரிந்தது என்றாராம் ரூபிணி.
புகழின் உச்சியில் ரூபிணி
சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த ரூபிணி, அதற்கு பிறகு புகழின் உச்சிக்கு சென்றார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு பிறகு, மோகன்ராஜ் என்ற அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டார். இயற்கை மருத்துவமனை ஒன்றை பெரிதாக கட்டியிருக்கிறார்.
திலகவதி ஐபிஎஸ் வாழ்க்கை வரலாற்றை பல வருடங்களுக்கு முன்பு படமாக எடுத்தபோது, அதில் ரூபிணி நடித்திருந்தார்.. அதற்காக சிறந்த நடிகைக்கான விருதினை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருந்தார்.. இதற்குபிறகு, ரூபிணியை நேரில் பார்க்க விரும்பி அழைத்து வர சொன்னாராம் ஜெயலலிதா. அப்போது 45 நிமிட நேரம் இருவருக்குள்ளும் உரையாடல் நடந்துள்ளது. நடனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இருவரும் பேசியிருக்கிறார்கள்.
இது ஒரு விழிப்புணர்வு
அதுமட்டுமல்ல, அன்று ரூபிணி இணைந்து நடிக்காத நடிகர்களே கிடையாது.. அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து நடித்த ரூபிணி ஒரு விவிஐபி ஆவார்.. அப்படிப்பட்டவர், யாராவது ஒரு ஹீரோவின் மேனேஜரிடம் திருப்பதி கோயிலுக்கு வருவதை பற்றி சொல்லியிருக்கலாம்.
வேலூர் சரவணன், "ஒருமணி நேரம் அருகில் நின்று பெருமாளை பார்க்கலாம்" என்று சொல்லவும்தான் அதில் ஏமாந்துள்ளார் ரூபிணி. சினிமாவிலேயே வளர்ந்த ரூபிணிக்கே இப்படி நடந்துள்ளது என்றால், சாதாரண மக்களும் இப்படி ஏமாற்றத்தை சந்திக்கலாம். எனவே இது ஒரு விழிப்புணர்வுதான்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications