திருமண நாளில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மனைவிக்கு கொடுத்த மறக்க முடியாத கிப்ட்.. அழகான காதல் தருணம்
சென்னை: இயக்குனரும், நடிகர் விஜயின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா என்பவரை திருமணம் செய்து 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தன்னுடைய மனைவிக்காக திருமண நாளில் அவர் ஆசைப்பட்ட கிஃப்ட் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சினிமாத்துறையில் இருக்கும் ஒரு சிலர் மட்டும்தான் மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சில வருடங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். ஒரே துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்யாமல் மற்ற துறையில் இருப்பவர்களை சினிமா துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்திருந்தாலும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

மனைவியின் துணை
ஆனால் சிலர் தன்னுடைய கணவரின் ஏற்ற இறக்கங்களின் போது கை கொடுத்து உதவி துணையாக இருந்து வருகிறார்கள். அதுபோல எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி ஷோபாவும் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். நடிகர் விஜயின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்த அவர் 90ஸ் காலகட்டத்திலும் பல படங்களை இயக்கி இருக்கிறார். தன்னுடைய திரைப்படங்கள் இல்லையே தன் மகனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இன்று இவருடைய மகன் விஜய் இளைய தளபதியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறார்.
சிறந்த இயக்குனர்
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதுபோல சின்னத்திரையிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மனைவிக்கு பரிசு
இந்த நிலையில் இன்று இயக்குனர் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் தங்களுடைய 52 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த திருமண நாளில் தன்னுடைய மனைவிக்காக மறக்க முடியாத தருணமாக மாற்றுவதற்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை சந்திரசேகர் பரிசளித்திருக்கிறார். திருமணநாள் பரிசு என்பது வெறும் ஒரு பரிசு அல்ல அதை துணையர்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்க்கும் இன்பம் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மனைவிக்கு பிஎம் டபிள்யூ காரை எஸ் ஏ சந்திரசேகர் பரிசளித்திருக்கிறார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அழகான தருணம்
புது காரில் சந்திரசேகர் மற்றும் அவர் மனைவி ஷோபா இருவரும் ஜோடியாக செல்வதை பார்த்து இது கியூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் கொடுக்கிறார்கள். 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இவர்களுடைய காதலின் ஆழத்தை பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள். எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மனைவிக்காக கார் வாங்கிய புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்!












Click it and Unblock the Notifications