chithi serial: ஆமாம்....சாரதா ஐஏஎஸ்ஸா, ஐபிஎஸ்ஸா?
சென்னை: சன் டிவியில் சித்தி சீரியல் முதல் சீசன் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 9 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருது.கொவிட் 19 தொற்று லாக்டவுன் அமலுக்கு வந்ததில் இருந்து தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகள், மற்றும் சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன.
அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி முதல் சீசன் சீரியல், தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு புதுவித புரட்சியை செய்தது என்று சொல்லலாம். இப்போது சீரியல்கள் போல ரொம்ப வருஷம் இழுவை என்றெல்லாம் இல்லாமல்தான் இருந்தது சித்தி சீரியல்.
ஆனால், இதற்கே எப்போது சித்தி சீரியலை முடிப்பீர்கள், முடிப்பீர்கள் என்று பலரும் கேட்டு துளைத்துவிட்டார்கள். பத்திரிகைகள் எப்போதுதான் முடியும் சித்தி சீரியல் என்றும் எழுத ஆரம்பித்து இருந்தார்கள்.

தீர்வு சொல்லாமலே
பிரபாவதி நிறைய தவறுகள், ஏன் ஒரு கொலை கூட செய்ய ஏவிவிட்டதாகவும் கதையில் உள்ளது. ஆனால், இதற்கு எல்லாம் ஒரு தீர்வு சொல்ல, சித்தி சீரியல் குழுவுக்கு அவகாசம் தரப்படவில்லை. எனவே. கடைசி கட்டத்தில் யாரும் எதிர்பாராமல் பொசுக்கென்றுதான் முடிக்கப்பட்டது சித்தி சீரியல் முதல் சீசன்.

வாழ ஆரம்பித்தும் மவுனம்
ராமுவும், சாரதாவும் கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தும், சாரதா யார் என்று கேட்காமல் இருக்கிறார் ராமு. சாரதாவும் இதுக் குறித்து மவுனம் காத்து வருகிறார். யாராவது சாரதாவை சீண்டும் போதெல்லாம், ரொம்ப கம்பீரமா இருக்கும் ராதிகாவை காண்பிக்கிறார்கள். இவரை சுற்றி போலீஸ் அதிகாரிகள்..சாரதாவின் அதிகாரம் என்று தூள் பறக்கிறது.

வட்ட மேஜையில்
ஒரு வட்ட மேஜையில் சாராத உட்கார்ந்து இருப்பார். சுற்றி போலீஸ் நின்று பேசிக்கொண்டு இருப்பார்கள். இதனால், சாரதா ஐஏஎஸ்ஸா இல்லை ஐபிஎஸ்ஸா என்று அப்போது மக்கள் குழம்பிக்கொண்டு இருந்தார்கள். மறு ஒளிபரப்பில் எல்லாம் தெரிந்துவிட்டது என்றாலும்... இப்படியுமா இதில் சஸ்பென்ஸ் வைத்து கதையை கொண்டு போனார்கள் என்று தோன்றுகிறது.

சீசன் 1 சீசன் 2
சித்தி சீசன் முதலில் இருந்த ரசிகர்களை கவர்ந்த பல விஷயங்கள் சித்தி 2 சீசனில் மிஸ்ஸிங் என்றுதான் ஃபீல் வருகிறது.சித்தி சீசன் 2 காட்சிகளை ஆங்காங்கே எடுத்து செருகியது போல காட்சிகள் இருக்கின்றன. லாக்கடவுனில் விதிமுறைகளுடன் சின்னத்திரை ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இனி சீரியல்கள் போக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications